இனிமையான எளிமையான உயர்ந்த இறை வழிபாட்டு முறை
இறைவனை வழிபடுவதற்கு எத்தனையோ முறைகள் அதற்கான தகுதிகளும் உள்ளன அவற்றைப் பற்றிய சில குறிப்புகள்
இறைவனுடைய அல்லது இறைவனை சிலை வடிவத்தில் வழிபடுவதற்கு உரிய தகுதிகள்:
அகிம்சையை கடைபிடிக்க வேண்டும்
மாமிசம் உண்ணக்கூடாது
போதைப்பொருள்கள் பயன்படுத்தக்கூடாது
சூதாட கூடாது
மனதில் சூது வஞ்சகம் இருக்கக்கூடாது
சட்டவிரோத உடலுறவு கொள்ளக் கூடாது
மன்னிக்கும் மனநிலை இருக்க வேண்டும்
பிறர் குற்றம் காணாது இருக்க வேண்டும்
தினமும் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும்
மேற்கூறிய தகுதிகளை உடைய ஒருவன் இறைவனை
திரு உருவத்திலோ
(இறைவனுடைய திரு உருவம் கல் மரம் ஏதேனும் ஒரு உலகம் ஓவியம் மணல் மனம் ரத்தினங்கள் போன்றவற்றால் இருக்கலாம்)
பூமி
நெருப்பு
சூரியன்
நீர்
அல்லது தன் மனதிற்குள் இருக்கும் இறைவன்
இவர்களில் ஒருவரை தகுதி உடைய பொருள்களைக் கொண்டு வழிபட வேண்டும்
இறைவனை வழிபடுவதற்கு முன் கண்களை தூய்மை செய்ய வேண்டும்
வாய் பற்களை தூய்மை செய்ய வேண்டும்
உடல் முழுவதும் நீரால் குளித்தல் வேண்டும்
பிறகு உடல்மீது உள்ள அழுக்குகள் போவதற்கு உரிய பொருள்களை பயன்படுத்தி மீண்டும் குளிக்க வேண்டும்
மனதில் உள்ள அழுக்கு போவதற்கான மந்திரச் சொற்களை பயன்படுத்துதல் வேண்டும்
இவ்வாறு தூய்மை செய்த பின்பு இறைவனை வழிபட வேண்டும்
இறைவனுடைய உருவத்தை எந்த பொருட்களால் உருவாக்கி உள்ளோம் அந்தப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப இறைவனுடைய உருவத்தை தூய்மைப்படுத்த வேண்டும்
உதாரணமாக மண்ணாலான உருவத்தை நீரால் தூய்மைப்படுத்த முடியாது அப்படி செய்தால் அது கரைந்து போய்விடும்
உலோகத்தால் ஆன உருவத்தை நாம் விருப்பம்போல் நீரால் தூய்மைப்படுத்த முடியும் அதுபோல ஓவியங்களையும் அதன் தன்மைக்கு ஏற்ப தூய்மை செய்ய வேண்டும்
இறைவனை வழிபடுவதற்கு தன்னால் எந்த பொருட்களை கொண்டு வழிபட முடியுமோ அதைக் கொண்டு வழிபடலாம்
அப்படிப்பட்ட பொருட்கள் குற்றம் குறைகள் இல்லாத நிலையில்இருக்க வேண்டும்
வழிபடுகின்ற பொழுது தன் மனதிற்குள் இருக்கும் இறைவனை முன்னிறுத்தி வழிபட வேண்டும்
அப்படி வழிபடுகின்ற பொழுது உலக ஆசைகள் இல்லாது இருக்க வேண்டும்
உலக ஆசைகள் இன்றி பக்தியோடு ஒரு இலையோ ஒரு பூவோ சிரிது நீர் போன்ற பொருள்கள் ஆக இருந்தாலும் இறைவன் மிகவும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறான்
இப்படி வழிபடுகின்ற பக்தனை பார்த்து இறைவன் மிகவும் மகிழ்கிறான்
இறைவனின் மகிழ்ச்சி அதுவே பக்தனின் வாழ்க்கை
வழிபடுவதற்கு முன்பு தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வழிபடுவதற்கான பொருட்களை சேகரித்த பின்பு வழிபட ஆரம்பிக்கவேண்டும்
இறைவனுடைய உருவம் இல்லாது வழிபடுகின்ற பொழுது தர்ப்பைப் புல்லின் மீது அமர்ந்து கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமர்ந்து இறைவனை வழிபட வேண்டும்
இறைவனுடைய உருவம் இருக்கும் பொழுது அந்த உருவத்தின் பார்த்து அமர்ந்து வழிபாட்டினை செய்ய வேண்டும்
இந்தக் கலியுகத்தில் இறைவனுடைய நாமத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பது மிக உயர்ந்த வழிபாடு முறையாகும் இதுவே குற்றம் குறைகளற்ற சிறந்த முறையாகும்.
இறைவனுடைய நாமங்களில் மிகவும் உயர்ந்ததாக கிருஷ்ணருடைய பெயர் கருதப்படுகிறது.
இந்தக் கலி யுகத்துக்கு என்றே இனிமையான எளிமையான மிக உயர்ந்த வழிபாட்டு முறை ஒன்று உண்டு என்றால் அதுதான் கலியுக மகாமந்திரம்
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
கிருஷ்ணருடைய நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பது
இதற்கு உடல் தூய்மையாக தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை
மனதை மட்டும் தூய்மை செய்து நாமத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும்
மனம் தூய்மை இல்லாமல் இருந்தாலும் பகவானுடைய நாமத்தை சொல்ல சொல்ல அது தானாக தூய்மை அடைந்து விடும்
இதைவிட உயர்ந்த வழிபாட்டு முறை இந்தக் கலியுகத்தில் வேறு கிடையாது ஆகவே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று சொல்லுங்கள் மகிழ்ச்சியாய் இருங்கள்
மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி ஆடிப் பாடி மகிழுங்கள்
இக்கலியுகத்தில் இதை விட்டு வேறு வழியும் கிடையாது பகவானை அடைவதற்கு