ஆன்மாவை அறிந்து கொள்வோம்
(ஆன்மாவை அறிந்து கொள்வோம் )
ஆத்மா என்பது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது என்று நினைப்பது தவறு
ஆத்மா மரம் செடி கொடி முதல் கொண்ட புழு பூச்சி மிருகங்கள் பறவைகள் அனைத்துக்கும் உண்டு
இந்த ஆத்மா பல விதமான உடைகள் அதாவது உடல்களால் மறைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை
மனிதர்களாகிய நாம் பலதரப்பட்ட ஆடைகளை அணிவது போல பலதரப்பட்ட வண்ணங்களில் இருப்பதுபோல ஆத்மா உடல்களை ஏற்றுக்கொண்டுள்ளது
நாம் பொதுவாக ஆத்மாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்
அதிகமான மனிதர்கள் உடலைத்தான் முக்கியமாகக் கருதுகிறார்கள் உடல் சார்ந்த உணர்வுகளை தான் முக்கியமாக கருதுகிறார்கள்
உயிர் என்ற ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டுள்ளார்கள் ஆனால் அதன் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை
உயிர் தத்துவத்தை இந்த உணர்வை புரிந்து கொண்டுள்ள பெரியோர்கள் இந்த உடல் சம்பந்தப்பட்ட வேறுபாடுகளை பெரியதாக கருதுவதில்லை காரணம் அவர்கள் படைப்பின் உண்மையைப் புரிந்து கொண்டதுதான்
படைப்பின் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் மரணத்திற்காக பயப்படுவதில்லை ஏனென்றால் மரணம் என்பது ஒரு மனிதன் ஆடை யை மாற்றுவது போல ஆத்மாவானது உடலை மாற்றுகின்ற ஒரு நிகழ்வு அவ்வளவுதான் என்று உறுதியாக நம்புகிறார்கள் உண்மையும் அதுதான்
இயற்கை பற்றி ஆய்வுகள் மேற்கொள்கின்ற அறிவியல் அறிஞர்கள் ஆத்மா இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை அப்படி அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார் அவர்களுடைய ஆய்வுகள் மேலும் தொடராமல் இருக்கவும் செய்யலாம்
இன்றைய அறிவியல் அறிஞர்கள் ஒரு சிலரைத்தவிர மற்ற அறிவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்வதன் நோக்கமே தங்களுடைய வாழ்வாதாரத்தை தெரிந்து கொள்வதற்காகவே இருக்கின்றன
அவர்கள் ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று உயிரைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது இல்லை உடல் ரீதியாகவே அவற்றை மேற்கொள்கின்றன அதனால் அவர்களுடைய ஆய்வுகள் உயிர் என்பது ஒரு ரகசியமாகவே அவர்களுக்கு தென்படுகிறது
உடல்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கு காரணமே ஆத்மா என்ற ஒன்று நிலைப்பாடுதான் ஆகும் இந்த ஆத்மா உடலில் கலப்பதை நிறுத்துகின்ற பொழுது உடலின் இயக்கங்கள் நின்றுவிடுகின்றன உடல்கள் உணர்வுகளை இழந்துவிடுகின்றன
அந்த உடல்களில் பல ஆத்மாக்கள் உருவாவதும் உண்டு ஆனால் அந்த ஆத்மா இந்த இறந்துபோன உடலுடன் நேரடி உறவு கொள்வதில்லை அந்த உடல் இயக்கத்தில் இவர்கள் தொடர்பு கொள்வதும் இல்லை இந்த ஆத்மாக்கள் அந்த உடலை ஒரு உணவுப் பொருளாகும் அல்லது உறைவிடமாகவும் ஏற்று தங்கள் உடல் தனை வளர்த்துக் கொள்கின்றன
ஒரு ஆடை அதன் ஆயுள் காலம் முடிகின்ற பொழுது தனது சக்தியை இழந்து கிழிய ஆரம்பித்தது அதுபோலவே உடலும் காலத்தில் சுழற்சியில் சிக்கிக்கொண்டு குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்து தன்னுடைய சக்தியை இழக்கிறது அப்படி இருக்கின்ற பொழுது ஆத்மா ஆடையை அப்புறப்படுத்துவது போல இந்த உடலையும் விட்டு விட்டுச் செல்கிறது.
இந்த உடலிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கின்ற ஆத்மா வேறொரு உடலைத் தேடிச் செல்கிறது
ஒரு உடலில் இருந்து வேறு உடலுக்கு செல்கின்ற ஆத்மா ஏற்கனவே இருந்த உடலிலுள்ள செயல்பாடுகளை எண்ணங்களை அதன் தன்மைகளை உணர்ந்து அதற்கு ஏற்ப அதன் தொடர்ச்சியாக மற்றொரு உடலை பெற்றுக்கொள்கிறது
அதாவது ஒரு மனிதன் தான் இருக்கின்ற வீட்டை விட்டு வெளியில் ஏற்படுகின்ற பொழுது ஏதேனும் ஒரு நோக்கத்தில் வெளியே செல்கின்றான் அதுபோல இந்த உடலில் இருந்த ஆத்மாவும் வெளியே செல்கின்ற பொழுது என்ன நோக்கத்தில் இருந்ததோ இந்த நோக்கத்தில் கூடிய உடலை பெற்றுக் கொள்கிறது
அந்த உடல் கிடைக்கும் வரை அல்லது அந்த இலக்கை அடையும் வரை தன் பயணத்தை ஆத்மா ரூபத்திலே நினைவுகளை சுமந்து செல்கின்றன என்றும் சிலர் கூறுவர்
வேறு சிலரோ ஆத்மா உடலைவிட்டு பிரிகின்ற பொழுதே அதற்குரிய அடுத்த உடலை நிர்ணயம் செய்து விடுகிறது என்றும் அதனை அடைந்து விடுகிறது என்றும் கூறுகின்றனர்
இந்த ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு செல்லுகின்ற காலகட்டத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை பற்றி பலரும் பல கூறுகின்றனர் இதை அறிந்தவர்கள் கூறுவதும் கிடையாது கூறினாள் நம்புகிறவர்கள் கிடையாது என்று தான் கூற வேண்டும்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஆத்மா மரணத்தை சந்திப்பதே இல்லை அது மலர்களிலிருந்து மனம் காற்றில் செல்வது போல ஆத்மாவும் காற்றில் கலந்து கலந்து சென்றுகொண்டே இருக்கிறது அது எதையெல்லாம் தொட்டுச் செல்கின்றது அங்கெல்லாம் இதன் தன்மையை அது வெளிப்படுத்தி செல்கின்றது
இந்த உடலை விட்டுப் பிரிகின்ற ஆத்மா இந்த உடலில் இருக்கின்ற பொழுது எந்த உணர்வு நிலையில் எதை நோக்கி செல்ல விரும்புகிறதோ அதை நோக்கித்தான் உடலை விட்டு பிரிந்த போதும் செல்கின்றது ஆகையினால் எதை நோக்கி நாம் செல்ல விரும்புகிறோமோ அதைப் பற்றிய சிந்தனையிலேயே நாம் இருக்க வேண்டும் அந்த சிந்தனையானது இறை சிந்தனையாக இருக்கும் பட்சத்தில் இறைவனையே அடைந்துவிடுகிறது
இறைவனை அன்றி மற்ற ஆசைகளுடன் சுற்றுகின்ற மக்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்கு ஏற்ற உடம்பை பெற்று தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டே அந்த ஆசையினால் ஏற்படும் இன்ப துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு தன் பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது
கடவுளுக்கு பிறப்பு இறப்பு இல்லை அதுபோலத்தான் ஆத்மாவுக்கும் பிறப்பு இறப்பு இல்லை
கடவுள் அனைத்து சக்தியையும் பெற்றிருக்கிறார் என்றால் ஆத்மாவாகிய நாம் மரம் செடி கொடி பறவை விலங்குகள் போன்ற உயிரினங்கள் அனைத்தும் ஒரு சிறு சக்தியை பெற்றுள்ளது என்பதுதான் உண்மை அந்த சக்தியானது இறைவனுடைய ஒட்டுமொத்த மிகப்பெரிய சக்தியில் ஒரு சிறிய பகுதி அதுவும் இறைவனுடைய அங்கம்தான் ஆனால் ஒரு சிறிய அங்கமும் அதன் சக்தியும் ஆகும்
ஒட்டுமொத்த சக்தியான இறைவனின் ஒரு சிறு சக்தியே மற்றைய உயிர்கள் என்பதுதான் உண்மை
இந்த ஆத்மா பற்றிய உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் இறப்பு என்பது நமக்கு இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள் இறப்பு வளர்ப்பு இறப்பு என்பது உடல் சார்ந்த ஒரு உணர்வு சங்கிலியை அவர்கள் மதிப்பதில்லை ஆனால் அவர் செய் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது அவர்களுடைய இறுதி இலக்கான இறைவனை அவர்கள் அடைகிறார்கள் அல்லது இறை உணர்வை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறலாம்
இந்த உண்மையை உணர்ந்தவர்கள் நோய் முதுமை மரணம் இவற்றை ஒரு உடல் சார்ந்த பரிணாமம் என்று ஒதுக்கிவிட்டு அழிவில்லாத ஆத்மா வில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்
அழிவில்லாத ஆத்மா வில் தங்களை நிறுத்திக்கொண்டு உள்ள இத்தகைய அறிவுசார் ஆத்மாக்கள் ஞானிகளாக மாரி விடுகிறார்கள்
இவர்கள் சாதாரண மனிதர்களைப் போல ஆசைகளை சுமந்து கொண்டு போராடிக்கொண்டு சுயநலத்தோடு தான் தன் உடல் தன் மனைவி மக்கள் நாடு ஜாதி மதம் இனம் மொழி என்ற மாயையில் சிக்கி கொண்டு மரணம் வரையும் போராடுகிறார்கள்
மரணத்திற்கு பின்பும் அப்படி போராடுகின்ற உடல்களை தேடி அலைகின்றார்கள் அப்படி பெற்று மீண்டும் மீண்டும் இன்ப துன்பங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் இதை உணர்ந்து நாம் மரண பயத்திலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புவோம்