சனி பகவானின் பார்வையும் மகத்துவமும்
சனியன் பார்வை படும் பட்சத்தில் தேவர்கள் முனிவர்கள் மகான்கள் கூட சனியின் அனுபவ வேதனையிலிருந்து தப்பிக்கவே முடியாது அவர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மனிதர்களின் கதையை நினைத்துப்பாருங்கள்
இந்த சனி பகவான் எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுத்தாலும் குறிப்பாக நீதி நேர்மை சத்தியம் தர்மம் போன்றவற்றை கொள்கையாகக் கொண்டு வாழும் மனிதர்களை விட்டு சற்று விலகியே இருக்கிறார்
அவர்களை இவர் துன்புறுத்துவது இல்லை மாறாக அவர்களுக்கு சிறந்த ஞானத்தை வழங்குகிறார் அவர்கள் மேலும் சிறப்படைய ஆவன செய்து கொடுக்கிறார்
சனி ஆயுள்காரகன் என்று கூறுவார்கள் ஒவ்வொரு மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பவர் சனி பகவானே ஆவார். அதனால் இவர் ஆயுள் காரகன் என்றும் கூறுவார்கள்.
சனீஸ்வரன் சிறந்த நீதிமான் இவர் இவருக்கு 3- 7- 10-ஆம் பார்வைகள் உண்டு
இவருடைய வாகனம் காகம் சிலர் கழுகு என்றும் கூறுவர்.
இவரது கொடி காக கொடியாகும்
அம்பு வில் கைகளில் ஏந்தி இருப்பார்
நீல கல் மாலைகள் அணிந்து இருப்பார்
கருப்பு நிற ஆடை அணிந்திருப்பார்
இவர் நான்கு கரங்களை உடையவர்
ஆஞ்சநேய பக்தர்கள் சிவபக்தர்கள் மற்றும் நரசிம்ம பக்தர்களுக்கு சிறப்பாய் அருள் செய்வார்
சூரியன் சனி இருவரும் தந்தை மகன்களாக இருப்பினும் இவர்கள் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்
சனீஸ்வரர் பயணிக்கும் தேர் எட்டு குதிரைகள் பூட்டிய தேர் இதில்தான் அவர் தன் ஆட்சியை நடத்துகிறார்
ஒருவருடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் அவரது லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு 1 4 7 10 என்கின்ற கேந்திர ஸ்தானங்களில் இருந்தாள் அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ சிறந்த யோகமாகும்
இதனுடைய பலன் என்னவெனில் இவர்கள் எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் உயர்ந்த பதவியிலும் நல்ல செல்வமும் நல்ல மனிதர்களின் சேர்க்கையும் உடையவர்களாகவும் பெரும் புகழ் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்
பொதுவாக நல்ல கிரகங்கள் அதாவது சுப கிரகங்கள் தரும் பலன்களை விட பாவ கிரகங்கள் தருகின்ற பலன்கள் மிகவும் அதிகமாகவே இருக்கும். அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளும் அதிகமாக தான் இருக்கும்
என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்
சனியும் ஒரு பாவ கிரகம் தான் அவரைப்போல் கொடுப்பவரும் அல்ல கெடுப்பவரும் அல்ல
பொதுவாக சனி பகவான் துலா ராசியில் உச்சம் மேஷ ராசியில் நீச்சம் பெறுகிறார்
மகர ராசி மற்றும் கும்ப ராசிகளில் ஆட்சி பெறுகிறார்
இவர் இரட்டை வீட்டுக்கு அதிபதி ஆவார்
பொதுவாக கடகம் சிம்மம் இரண்டும் இவருக்கு பகை வீடுகள் ஆகும்
பஞ்சபூதங்களில் இவர் வாய்வு சக்தியை பெறுகிறார்
புதன் சுக்கிரன் ராகு கேது இவருக்கு நண்பர்கள் ஆவார்கள்
சூரியன் சந்திரன் செவ்வாய் பகைவர்கள் ஆவார்கள்
குரு இவருக்கு சம பலனை பெறுகின்றார்
சனி வலுப்பெற்ற நட்சத்திரம் என்று எடுத்துக் கொண்டோமானால் பூசம் அனுஷம் உத்திரட்டாதி
ஒருவருடைய ஜாதகத்தில் சனி மகாதசை 19 வருடங்களாக நடக்கும் இந்த காலகட்டத்தில் சனியினுடைய பலன்கள் அவருக்கு நடக்கும் அதில் ஏற்படுகின்ற திசாபுத்தி களுக்கு ஏற்ப மற்ற கிரகங்களின் ஆதிக்கங்கள் கூட குறைவாக இருந்து சனியின் பலன்களை கூட்டியும் குறைத்தும் சமன் செய்வார்கள்
பொதுவாக சனிதசை ஒருவருக்கு நாலாவது தசையாக வந்தால் அது அவருக்கு பல கண்டங்களை கொடுக்கும் சிலருக்கு மரணத்தை கொடுக்கும்
பொதுவாக ஜாதகத்தில் சனி ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் முடிந்தவரை அதிக நன்மைகளை கொடுக்கிறார்
பொதுவாக சனி பலன் நடக்கின்ற நேரங்களில் அதாவது சனி ஹோரை போன்ற நேரங்களில் சுப காரியங்கள் செய்யக்கூடாது அசுப காரியங்களில் ஈடுபடுவது நன்மைகளை தரும்
பொதுவாக சனிக்கிழமைகளில் 10:30 முதல் 12 மணி வரை நல்ல பலன்களைத் தருவார்
சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
சனி கிரகத்துடன் ராகு சேர்ந்தால் நோய்கள் ஏற்படும்
அதே சனி கிரகத்துடன் கேது சேர்ந்தால் எதிர்பாராத ஆபத்துக்கள் ஏற்படும்
அந்த சனி கிரகத்துடன் செவ்வாய் சேர்ந்தால் தேவையற்ற பகை ஏற்படும்
சனியுடன் சூரியன் சேர்ந்தால் தந்தை மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தீய பலன்களைத் தரும்
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கணத்தில் அல்லது ராசியில் இரண்டாம் இடம் மற்றும் ஏழாம் இடத்தில் சனி நிற்கும் பட்சத்தில் குடும்பம் அமையும் விதத்திலும் திருமணம் போன்ற விஷயத்திலும் மிகவும் தாமதமாக ஏற்படும்
சனி கிரகத்தினை ராஜகிரகம் என்று குறிப்பிடுவார்கள்
எள் தானம் கொடுப்பவர்களை சனி பகவான் செல்வங்களை கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன
சனியை அவமதிப்பு செய்பவர்களுக்கு நிம்மதி இருக்காது
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்றாலும் சனிக்கிரகத்தின் பலன் அவசியமாகும்
சனிமூலை அல்லது ஈசான்ய மூலை அல்லது தென்கிழக்கு மூலை இவைகள் சனியின் ஆதிக்கம் மிகுந்தவை
எந்த செயலைத் தொடங்கினாலும் இந்த திசைகளில் தொடங்கினாள் வளர்ச்சி அடையும் என்பது நம்பிக்கை