சனீஸ்வரன் பிறந்த கதை
(சனீஸ்வரன் பிறந்த கதை சுருக்கம் )
சூரியனுக்கு இரண்டு மனைவியர்கள்
ஒருத்தியின் பெயர் உஷா
சூரியனுக்கும் உஷா விற்கும் பிறந்த குழந்தைகள் நான்கு பேர் எமி வைவஸ்வதமனு யமுனா எமதர்மன்
மற்றொருத்தியின் பெயர் பிரதியூஷா
இவர்கள் இருவரையும் முறையே சம்ஞாதேவி சாயாதேவி என்று கூறுவதும் உண்டு
உஷா பிரத்யுஷா என்ற பெயர்களை வைத்துக்கொண்டு நீங்கள் புரிந்து கொள்ளலாம் இது ஒரு காரணப் பெயர் காரணங்களை நாம் பின்பு ஆராய்வோம்
பிரதியுஷா என்ற சாயாதேவிக்கு சூரியனால் பிறந்த குழந்தைதான் சனி
இவருடைய இயற்பெயர் சனிதான்
சனிக்கும் எமதர்மனுக்கு ஏற்பட்ட விளையாட்டால் சனியின் காலில் ஏற்பட்ட காயம் அவர் கால் குணமாவதற்கு காரணமானது
அப்படி கால் ஊனமான அதனால் இவர் மெதுவாக செயல்படுவதால் இவரை மந்தன் என்றும் கூறுவார்கள்
சூரியனுக்கு ஒரு மனைவிதான் அவள் பெயர் உஷா
இந்த உஷா சூரியனுடன் குடும்பம் நடத்தி வருகையில் சூரியனுடைய வெப்பம் தாங்க முடியாமல் மிகவும் வருத்தமடைந்தார்
அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கினாள் இதனால் அவள் தன்னைப் போன்றே தன் நிழலில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார் அவள் பெயர்தான் பிரதியூஷா
இந்தப் பிரதி உஷாவை சூரியனிடம் குடும்பம் நடத்த விட்டுவிட்டு தான் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் உஷா
சூரியனுக்கு உண்மை புரிந்தது தன் மனைவி உஷா வெப்பம் தாங்காமல் சென்றுவிட்டால் என்பதையும் அதற்குப் பதிலாக பிரதி உஷாவை உருவாக்கி சென்றமையும் அறிந்தார்
அனைத்து காரணங்களுக்கும் காரணம் இறைவனை என்பதை புரிந்துகொண்ட சூரியன் பிரதி உஷாவுடன் வாழ்ந்துவந்தார்
பிரதியூஷா என்ற நிழல் பெண்ணுக்கு அதாவது சாயாதேவிக்கு சூரியனாள் மூன்று குழந்தைகள் பிறந்தன
அவர்கள் முறையே ஸாவர்ணிமனு,, சனீ,, பத்திரை ஆவார்கள்.
சனீ தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணி காசி என்ற ஊருக்கு வந்து அங்கே ஒரு கோயில் கட்டி அங்கே லிங்கத்தை வைத்து பூஜை செய்து வந்தார்
இந்த சனியின் நெடுநாள் தவத்தில் சிவன் வாயு தேவன் மற்றும் சூரிய நாராயணர் ஆகிய அருள் சனிக்கு கிடைத்தது
இந்த அருளால் நவகிரகங்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
இவர் பெற்ற சக்தியினால் இவரை சனீஸ்வரன் என்றும் குறிப்பிடுவர்.
சனீஸ்வரனின் மனைவி பெயர் சேஷ்டா தேவி. இவர்களுக்கு குளிகன் என்ற மகன் உண்டு இவரை மாந்தி என்றும் அழைப்பார்கள்.
குளிகன் தினமும் ஒன்றரை மணி நேரம் அல்லது ஒரு முகூர்த்தம் தனது ஆதிக்கம் செலுத்துவார்.