மரங்களின் மூலம் ஆரோக்கியம்
கடுக்காய் - திரிபலாவில் ஒன்று, வாய் புண், குடலில் தேங்கிக்கிடக்கும் அசுத்தத்தை / கழிவை அகற்றும்.
பெரிய நெல்லிக்காய் - திரிபலாவில் ஒன்று, வாய் புண், உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற, ஊறுகாய், கிணற்று நீர் / குடிநீரை சுத்திகரிக்க.
கருங்காலி - நோய் எதிர்ப்பு சக்தி, உடல் உறுதி க்கு, குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைக்காக .
நீர்மருது, ஆற்று மருது - நிலத்தடி நீரில் உப்பு தன்மையை குறைக்க, நீர்வளம் பெறுக.
மலைவேம்பு - தேனீக்களை ஈர்க்க, மாத விடாய் பிரச்சனைக்கு தீர்வு .
அரளி மஞ்சள் - தேனீக்களை ஈர்க்க, பூக்களின் தேவைக்கு .
வேம்பு - காய்ந்த சருகுகள் மூலம் தோட்டத்திற்கு மண்ணை வளப்படுத்த, வெப்ப எண்ணைமூலம் கொசுவை விரட்ட.
நாவல் - குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
பலா - குழந்தைகளுக்கு இயற்கை உணவு,
ஒதியன் - (மாடிதோட்டத்திற்கு) மண்ணை வளப்படுத்த, நுண் பருவநிலை சீர்செய்ய, நீர்வளம் பெற.
மாதுளை - பருவநிலை சீர்செய்ய, குழந்தைகளுக்கு இயற்கை உணவு, மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க.
மாமரம் - குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
கொடிபுளிக்காமரம் (சீனி புளியங்காய்) -குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
ஆனைகுன்டுமணி (செஞ்சந்தனம்) - கதிர்வீச்சை தடுக்க.
கொய்யா - குழந்தைகளுக்கு இயற்கை உணவு
விளாங்காய் - மருத்துவ குணம், குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
அரச மரம் - அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்
அத்தி - நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது
ஆல மரம் - அனைத்து விதமான ஆரோக்கியம்
இலந்தை மரம் - குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
புரசு - மழை மேகங்களை ஈர்க்க, பேப்பர்/பிளாஸ்டிக் தட்டிற்கு மாற்று.
மந்தாரை - பேப்பர் /பிளாஸ்டிக் தட்டிற்கு மாற்று.
பனை மரம் - வெள்ளை சர்க்கரைக்கு மாற்று, பதநீர், நுங்கு, குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
புன்ணை மரம் - இயற்கை எரிபொருள்
பூவரசு - தோல்நோய்கள்
நொச்சி - கொசு, சளி, தலைவலி போக்க.
சப்போட்டா - குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
சீத்தாப்பழம்* - குழந்தைகளுக்கு இயற்கை உணவு.
பவளமல்லி* - பூக்கள் தேவைக்கு.
இலவம்பஞ்சு* - வீட்டிற்கு தலையணை மெத்தை தயாரிக்க,
புளியமரம்* - சமையலுக்கு,
பூந்திக்காய் மரம் சோப்புக்காய் மரம் - சோப்பு ஆயில் தயாரித்து பாத்திரம் கழுவ, துணி துவைக்க
.
சீயக்காய் - இயற்க்கை ஷாம்பூ
நாட்டுக்கருவேல மரம் - பல்துலக்க, இரசாயன பேஸ்ட்டிற்கு மாற்று
உசிலை / அரப்பு - இயற்க்கை ஷாம்பூ
நார்த்தங்காய் - வலி நிவாரணி, ஊறுகாய்
சாத்துக்குடி மரம் - இயற்கை பழ சாறு
தேற்றான்கொட்டை - கிணற்று நீர் / குடிநீரை சுத்திகரிக்க
நீர் கடம்பை - எப்போதும் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் வளர்க்க.
வெட்பாலை - சரும நோய்களுக்கு தீர்வு
மூங்கில் - மழை மேகங்களை ஈர்க்க, சுத்தமான காற்றை பெற
வாதநாராயணன் - வாத சம்பந்தமான அத்தனை வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல்.
தேன்காய் / மகாகனி - சர்க்கரை நோய்க்கு மருந்து
வேங்கை - வேங்கம்பாலில்(சிவப்பு) நெற்றியில் வைக்கும் பொட்டாக பயன்படுத்த
கடம்ப மரம் - விஷம் முறிப்பான், சிறுநீர் பிரச்னைகள், இரத்த சோகை, தோல் நோய்கள் ஆகியவற்றை போக்க