யோகி என்பவன் யார் ? பகவானை அடைவது எப்படி?
வீட்டிலே நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறோம் திடீரென வீட்டை நெருப்பு பற்றிக் கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம் அல்லது
எதிர்பாராத மழை வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து என்று வைத்துக் கொண்டோமானால் உடனடியாக நாம் என்ன செய்வோம்
நம்மை பாதுகாத்துக்கொள்ள உடனே தப்பிக்க ஆவன செய்வோம்
நாம் எதை எடுத்துச் செல்வோம்?
அதைப்பற்றிய சிந்திப்பதற்கு நமக்கு நேரம் இருக்காது நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம் இதுதான் நாம் முதலில் செய்கின்ற காரியம்
இந்த உலக பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு செயல்முறை
அதே போல் மோட்சத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் உடமைகளை மட்டுமல்லாமல், மனதிலும்கூட எவ்வித தேவையும் இல்லாமல், அதாவது தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே பகவானை அடைய முடியும்”
“முதலில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவித்து விட்டு, அடுத்ததாக ஸ்ரீராமன் காட்டுக்குச் செல்லவும், பரதன் நாட்டை ஆளவும் நிலைமை ஏற்பட்டது.
ஆனால்
ராமர் பட்டாபிஷேகச் செய்தியைக் கேட்ட போது சந்தோஷம் கொள்ளவில்லை.
அதுபோல வனவாசம் செல்லும்படி உத்தரவானபோதும் கவலை கொள்ளவில்லை.
அதே சமயம் லட்சுமணனால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
கோபத்தில் வெகுண்டெழுந்து வார்த்தை அம்பு சரமாரியாகத் தொடுத்தான்.
ஆனால், தர்மத்தின் வடிவமாகிய ஸ்ரீராமர் மிகவும் பொறுமையாக, 'அறத்தின்படி நாம் நடக்க வேண்டும்.
தந்தையின் வாக்கை மீறக் கூடாது.
எல்லாம் இறைவன் செய்யும் ஏற்பாடு' என்று லட்சுமணனிடம் சொல்லிச் சமாதானப்படுத்தினார்.
அண்ணன் வார்த்தையை கேட்டு பின்பற்றும் தம்பி லட்சுமணனின் கோபமும் மெல்லத் தணிந்தது.
ஸ்ரீராமர் காட்டுக்குச் சென்றதன் காரணம் பல முனிவர்களையும், ரிஷிகளையும் சந்தித்து அவர்களிடம் உரையாடவும் அதன் மூலம் பல அறிவுரைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் பகிர்ந்து கொள்வதுமே
அத்துடன் பகவான் ராமருக்கு அவர்களுடைய முன்ஜென்ம தொடர்புடைய பக்தியினால் ஏற்பட்ட ஆசைகளை நிறைவேற்றுவதும் நோக்கமாக இருந்தது
அதற்குரிய வாய்ப்பு தான் இந்த சாபம் எனப்படும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாவற்றுக்குமே ஏதோவொரு அர்த்தம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இறை நம்பிக்கையும் அதுதான்
நாம் வாழ்க்கைக்குள் சென்று விடாமல் வெளியே நின்று நமது வாழ்க்கையை நாமே பார்வையாளராக நம்மை நாமே பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும், அதுவே யோகியின் தன்மையும் அடையாளமும் ஆகும்,.
இந்த நிலைக்கு நாம் வருகின்ற பொழுது நம்மை புரிந்து புரிந்து கொள்வோம்
அத்துடன் இறைவனையும் புரிந்துகொள்ள முயற்சியாக இது இருக்கும்.