நந்தி நாடியில் அஸ்வினி முதல் சுவாதி வரை 15 நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் பலன்கள்
நம் பாரத நாட்டைப் பொறுத்தவரையில் குறிப்பாக தமிழகத்தில் நாடி ஜோதிடம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே
இந்த ஜோதிடம் பல முனிவர்களாலும் வரையறுக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது
இந்த நாடி ஜோதிடம் ஒவ்வொரு முனிவர்களுக்கும் ஏற்ப அவரவர் கண்ணோட்டத்தில் பலன்களில் மாற்றம் இருக்கத்தான் செய்கின்றன
இப்படி வரையறை செய்யப்பட்ட நாடி ஜோதிடத்தில் நந்தி நாடி கூறுகின்ற நட்சத்திரப் பலன்களை சுருக்கமாக சில குறிப்புகளைக் காண்போம்.
நான் இதில் நட்சத்திர பலன்கள் பொதுவாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்
பொதுவாக நட்சத்திர பலன்கள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்
அதற்கு காரணம் அந்த நட்சத்திரங்களின் தன்மைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவதால் ஏற்படுகின்றன காலநிலையை பொருத்து அமையும்
காலநிலை ஒருவருக்கொருவர் மாறுபடுவதற்கு காரணம் அவர் பிறக்கின்ற பொழுது அந்த அந்த காலகட்டத்தில் கிரகங்கள் இருக்கின்றன நிலையை பொறுத்தது
நிலைபாடு சுயமாக ஒன்றுபோல் யாருக்கும் வருவது மிக மிக மிக அரிது
இனி 27 நட்சத்திரங்களின் பலன்களைப் பற்றி பார்ப்போம்
1 அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
ஒருவர் அல்லது ஒருத்தி அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தாலும் அல்லது வயதிற்கு வந்தாலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்
பொதுவாக இவர்கள் குள்ளமான தோற்றத்துடன் காணப்படுவார்கள்
இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பலர் பாவ தொழில்கள் செய்வதில் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்
பொதுவாக பெண்கள் கணவனுக்கு தோஷத்தை கொடுப்பவர்கள் ஆகவே இருக்கிறார்கள்
குழந்தை பாக்கியம் உடையவர்கள்
இவர்களிடம் சுறுசுறுப்பும் துடுக்குத் தனமும் அதிகம் காணப்படும்
பொதுவாக இவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சுகங்களை இறந்தவர்கள் ஆகவே அதிகம் இருக்கிறார்கள்
2 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தாலும் அல்லது வயதிற்கு வந்தாலும் பொதுவாக இவர்கள் பருமனாக இருப்பதை அதிகம் காணலாம்
இவர்களில் பலர் குழந்தையாக அதிகம் இருக்கிறார்கள் ஒருவேளை குழந்தை இருந்தால் அது குழந்தைகள் பிரச்சனைகள் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்
நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பலர் விதவைகளாக இருப்பதை காணமுடியும்
பொதுவாக இவர்கள் வசதி உள்ளவர்களாகவும் யோகம் உடையவர்களாகவும் சுகமாக வாழ்வர் களாகவும் இருப்பார்கள்
3 கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பொதுவாக இந்த கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது வயதிற்கு வந்தவர்கள் மிகவும் அழகு உடையவர்களாக இருப்பார்கள்
பெண்களைப் பொறுத்தமட்டில் அவனைவிட பெண்கள் வசதி மிகுந்தவர்களாக இருப்பார்கள்
பொதுவாக இவர்கள் தனவந்தர்கள் ஆகவே காணப்படுவார்கள்
பொதுவாக இவர்கள் கல்வியறிவு மிக்கவர்களாக இருப்பார்கள் அல்லது கல்வி அறிவு மிக்கவர்கள் உடன் மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள் அல்லது கணவன் மனைவிகளாக கூட இவர்கள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு
4 ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பொதுவாக இவர்கள் நல்ல அழகான தோற்றம் உடையவர்கள் நிறைந்த மனநிலை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்
பொதுவாக இவர்கள் முகம் பொலிவுடன் இருப்பார்கள்
இவர்கள் குடும்பத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள்
இவர்கள் தங்களுடைய மூன்றாம் கட்ட காலத்தில் குறுகியகால மரணங்கள் இவர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது
5 மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பொதுவாக மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அல்லது குழந்தை செல்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்
பொதுவாக இவர்கள் ஆயுள் குறைவாகவே காணப்படும்
நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அதிஷ்டம் மிகுந்து காணப்படும்
பொதுவாக செல்வம் மிகுந்தவர்களாக காணப்படுவார்கள்
6 திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தாலும் அல்லது வயதிற்கு வந்தாலும் கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் விரயங்கள் அதிகமாக காணப்படும் பொதுவாக இவர்கள் நோய்க்காக அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள்
வயது முதிர்ந்த காலத்தில் இவர்கள் வசதியாக வாழ்வார்கள்
இவர்கள் பல சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்
குழந்தைப்பேறு மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள் அல்லது குழந்தைப்பேறு இல்லாமல் இருப்பார்கள்
7 புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தாலும் அல்லது வயதிற்கு வந்தாலும் மிகுந்த செல்வம் உடையவர்களாக இருப்பார்கள்
இவர்கள் மிகுந்த ஆசை உடையவர்களாக இருப்பார்கள்
பிறரால் அதிக லாபம் அடைபவர்கள் ஆக இருப்பார்கள்
இவர்கள் மற்றவர்களை அதிகாரம் செய்பவர்களாகவே இருப்பார்கள்
பெண்கள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டில் சிறப்பாக இருப்பார்கள்
இவர்களுக்கு புத்திர தோஷம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
8 பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பூச நட்சத்திரத்தில் பிறந்தால் நல்லது வயதிற்கு வந்தாலும் அழகு மிகுந்தவர்களாக காணப்படுவார்கள்
இவர்கள் அனைவரிடத்திலும் அன்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள்
இவர்கள் அறிவுக்கூர்மை உள்ளவர்களாகவும் செல்வந்தர்களாக இருப்பார்கள்
இவர்கள் பிள்ளைகளால் பிரபலம் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தாலும் அல்லது வயதிற்கு வந்தாலும் குழந்தைபேறு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்
இவர்கள் பொதுவாக வாயாடி களாகவும் வம்புக்கு செல்பவர்கள் ஆகுமே காணப்படுவார்கள்
இவர்களுக்கு அதிக பகைவர்கள் உண்டு
இவர்களால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
ராசிக்காரர்கள் தங்களுக்கு உரிய வம்சாவளிகள் இல்லாதவர்களாகவும் அல்லது அதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் முதல் 9 நட்சத்திர பலன்கள்
10 மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வயதிற்கு வந்தவர்களும் இளம் வயதில் பெற்றோர்களை இழந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது
இவர்கள் நல்ல உடல் வலிமை மிக்கவர்களாகவும் தைரியமானவர் களாகவும் இருப்பார்கள்
இவர்களிடம் குறுகிய எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும்
இவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் மனம் போல் இருக்கும்
இளம் வயதில் கடின உழைப்பாளிகளாகவும் வயதான காலத்தில் வசதி மிக்கவர்களாகவும் இருப்பார்கள்
11 பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பூர நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அல்லது வயதிற்கு வந்திருந்தாலும் இவர்கள் கவர்ச்சியான சரீர அமைப்பு உடையவர்களாகவும் உயரம் அதிகம் உடையவர்களாகவும் மெலிந்த உடல் உள்ளவர்கள் ஆகவும் அதிகம் இருப்பர்
இவர்கள் இன்பத்தை அதிகம் தேடுபவர்களாக விளங்குவர்
இவர்கள் அதிகமானோர் மறுமணம் செய்து கொள்பவர்களாக இருக்கிறார்கள்
காலதாமதமான குழந்தை பெறும் இவர்களுக்கு உண்டு
இவர்கள் ஆரம்ப காலத்தில் செல்வ செழிப்புடனும்
இறுதிகாலத்தில் மனசஞ்சலம் உடையவர்களாகவே இருக்கிறார்கள்
12 உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பொதுவாக உத்தர நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அல்லது வயதிற்கு வந்திருந்தாலும் திருமணத்திற்கு பின்பு அதிக சுமைகளைச் சுமப்பவர்கள் ஆகவே இருக்கிறார்கள்
இவர்கள் உயர்ந்த உடல்வாகும் அதிக ஆசை போகங்களை அனுபவிப்பர் களாகவும் இருப்பார்கள்
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் சிறப்பாக இருக்கும்
இவர்கள் செல்வச்செழிப்பு மிக்கவர்களாக இருப்பார்கள்
இவர்களில் அதிகமானோர் நல்ல குணம் உடையவர்களாக விளங்குவார்கள்
13 அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அல்லது வயதிற்கு வந்த பிறகும் இவர்கள் பொதுவாகவே அழகு உடையவர்களாக இருக்கிறார்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமானவர்கள் செல்வச்செழிப்புடன் விளங்குகிறார்கள்
இவர்கள் குடும்பத்தில் அதிக பற்றுதல் மிக்கவர்களாக இருப்பார்கள்
இவர்களுக்கு குழந்தைகளால் மனநிலை பாதிக்கப்படும்
இவர்கள் வயதான காலத்தில் அதிகம் கவலைப்படுபவர்கள் ஆகவே இருக்கிறார்கள்
14 சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வயதிற்கு வந்த பிறகும் இவர்கள் பொதுவாக மாறுபட்ட எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்
இவர்கள் பிறரை எதிர் மனநிலை உடையவர்களாகவே நினைத்து செயல்படுவர்
கோபம் மிகுந்தவர்கள்
உறவினர்களை பகைத்துக் கொள்ளும் மனநிலை அவர்களிடம் இருக்கும்
இவர்களில் அதிகமானோர் ஏதேனும் உடல் குறை உடையவர்களாகவே இருக்கிறார்கள்
இவர்களில் ஒரு சிலரே மிக மிக சிறப்பாக இருக்கிறார்கள்
15 சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வயதிற்கு வந்திருந்தாலும் இவர்கள் அழகு மிக்கவர்களாக இருப்பார்கள்
பிறரை வசியம் செய்யும் உடல் தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள்
இவர்கள் அதிகமாக சந்தோசமா நிலையிலேயே காணப்படுவார்கள்
இவர்கள் பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள்
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் மிக குறைவாகவே இருக்கும்
இவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வாழ்பவர்களாக இருக்கிறார்கள்
இவர்கள் பிறரை அதிகாரம் செய்பவர்களாகவும் உயர்ந்த வாழ்க்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்