இந்த பூமியும் மனிதனும் வீரமும் தியாகமும்
இந்த பூமியும் மனிதனும் வீரமும் தியாகமும்
மனிதர்களாகிய நாம் வாழுகின்ற பூமி தோன்றியபோது ஏழு கண்டங்களாகப் பிரிக்கப் பட்டது அதாவது ஏழு பகுதிகள்
அது காலப்போக்கில் மனிதர்களின் செயல்பாடுகளால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த கண்டங்கள் சில மாற்றங்கள் அடைந்தன
சில கண்டங்கள் இணைந்தன சில கண்டங்கள் பிரிந்து இணைந்தன சில கண்டங்கள் சிறிது மறைந்தன இதற்கான சரியான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை ஆராய்ச்சியாளர்கள் பல பல கூறினாலும் உண்மை இதுதான்
இந்த ஏழு கண்டங்கள் ஏழு பிரிவுகள் என்று கூட கூறலாம்
இந்த ஏழு பிரிவுகளும் அந்த ஏழு பிரிவுகளில் வாழுகின்ற மனிதன் ஏழு வித மனநிலை மற்றும் மரபணு சார்ந்த செயல்பாடுகளும் சற்று மாறுபட்ட இருந்தன
இருந்தாலும் அவர்கள் அனைவரும் மனிதர்கள் தான் சில மாற்றங்கள் நிறத்தால் குணத்தால் சூழ்நிலை மாற்றத்தால் அமைந்தன
அதனால் அந்த சிந்தனைகளும் அந்தந்த கண்டத்து சுயநலமிக்க மனிதர்களாலும் வேறுபாடுகள் காணப்பட்டு இருந்தன
இன ரீதியாகவும் நிறம் சார்ந்த விஷயங்களிலும் மாற்றங்கள் இருக்கத்தான் செய்தன நம்பிக்கை சார்ந்த மதங்களும் தோன்றின
அதுபோல அவர்களுடைய அறிவு வளர்ச்சியும் இருந்தன
இது இயற்கையின் படைப்பே அப்படித்தான் இறைவனும் அதைத்தான் விரும்புகிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்
ஏனென்றால் வேற்றுமைகள் தேவைப்படுகிறது எல்லாம் ஒன்றுபோல் இருந்துவிட்டால் அணுக்கள் சேராது
அணுக்கள் சேர்ந்தால்தான் மூலக்கூறுகள் உருவாகும்
மூலக்கூறுகளின் மாறுபட்ட இணைப்புகள் ஆள்தான் பொருட்கள் உருவாகின்றன
மாறினால்தான் மாற்றங்களை காண முடிகிறது மாற்றங்கள் பல இருப்பதினால் தான் ரசனையும் பொழுதுபோக்கும் ஏற்படுகின்றன
பொதுவாக இந்த மாற்றங்கள் காலத்தால் ஏற்படுகிறது காலம்தான் மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது அந்த காலத்திற்கு ஏற்ப மனிதர்களுடைய மனநிலை மாறிக் கொண்டேதான் இருக்கின்றன
நேற்று இருந்த நிலையில் இந்த மனிதன் இன்று இல்லை இன்று இருப்பவன் நாளை இருக்கப்போவதில்லை
ஆனாலும் மனிதர்கள் நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று காண்கின்றார்கள்
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நாளையை தொடர்கிறார்கள் காலமும் இதைத்தான் செய்துவருகிறது
அறிவு சார்ந்த மனிதர்கள் இதை சிந்திக்க தொடங்கி ஆன்மீக நிலையில் ஈடுபட்டு இந்த மாதிரி மாற்றங்கள் இயற்கை சார்ந்தது இதில் நம்மை இணைத்துக்கொண்டு இந்த செயல்களுக்கு எல்லாம் நாம் காரணம் என்று நினைத்துக்கொண்டு வன்முறைகளில் ஈடுபடுகின்றோம்
இது ஒரு தவறான வழி ஏனென்றால் அறிவில் என்று சொல்லிக்கொண்டு பிரிவினைவாதத்தின் பகுத்தறிவு சிந்தனையாளர்கள் பலர் உள்ளனர்
இவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கிறார்கள்
எல்லா அறிவு சார்ந்த மக்களும் அவரவர் அறிவுக்கு ஏற்ப வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்கிறார் இதுதான் உண்மையாக நடந்து கொண்டிருக்க
இந்த வாழ்வாதாரத்திற்காக ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள் தனிமனிதர்கள்
தனி மனிதர்கள் தான் என்று அவர்களை மட்டும் சொல்லிவிட முடியாது அதற்கு அரசாங்கம் என்ற ஒரு காரணத்தையும் சொல்லலாம்
ஆனால் இந்த அரசாங்கம் எப்படி உருவாகிறது என்று பார்த்தோமானால் அதற்கும் தனிமனிதனை காரணமாக இருக்கின்றார்
ஏனென்றால் தனிமனிதனால் அனைத்தும் இயங்குகிறது
இயங்குவது என்பது வாழ்வது வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
தனிமனிதன் மனிதர்களின் சேர்க்கையில் ஈடுபடுகிறார் அப்பொழுது அதை வழி நடத்துவதற்கு ஒரு தலைவன் தேவைப்படுகிறார் அதுவும் ஒரு தனி மனித இயக்கமாகவே இருக்கின்றது
அந்த தனி மனிதன் எப்படி இருக்கிறான் என்பதை வைத்துதான் அந்த ஒட்டுமொத்த சமுதாயமும் இருக்கிறது அதனால
அந்த சமுதாயம் சரியான நிலைபாடு எடுக்க வேண்டும் அந்த சரியான நிலைப்பாட்டையும் தனி மனிதன் தான் எடுக்க வேண்டும்
தனிமனிதர் வாழ்வாதாரத்திற்காக தவறான வழிகளை பின்பற்றாமல் சரியான வழிகளை பின்பற்ற வேண்டும் ஆனால் அப்படி செய்கிறாரா என்று உறுதி என்று கூற முடியாது
மதம் என்ற ஒன்று இருக்கிறது அதற்கு பலரும் பல கருத்துக்களை சொல்கிறார்கள் அது ஒரு பிரிவினைவாதமாகத்தான் தெரிகிறது
ஆனால் கடவுள் என்பது அப்படி அல்ல அவர் ஒருவர் தான் அவர் தான் எல்லாவற்றிற்கும் காலமாக இருக்கின்றார் காரணமாக இருக்கின்றார் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்
இன்று உலகத்தில் மனிதர்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை விட அறிவுபூர்வமான செயல்களை விட அழிவுக்கான செயல்களில் அதிகம் செலவு செய்கிறார்கள் அதையே வாழ்வாதாரம் ஆக்கிவிட்டார்
இதற்கு காரணம் அறிவற்ற சமுதாய வளர்ச்சி
இந்த அறிவற்ற சமுதாயம் தங்களை அறிவு சார்ந்த சமுதாயம் என்று கூறிக் கொண்டு தங்கள் மக்களை காக்க வேண்டும் என்றும் தங்கள் இனத்தை காக்க வேண்டும் என்றும் தங்கள் நாட்டை காக்க வேண்டும் என்றோம் மற்ற நாட்டுடன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்
உண்மையில் இதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது அப்படி என்றால் நாட்டை ஆள்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று கூறிவிட முடியாது
ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை காப்பாற்றும் மனிதர்களை தியாகிகள் என்று கூறுகிறார் வீரர்கள் என்று கூறுகிறார்
எல்லா நாட்டினரும் அவர்கள் நாட்டின் மீது பற்று வைத்திருக்கிறார்கள் ஆகவே அது எப்படி அவர்கள் வீரர்களாக முடியும்
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொள்வது எப்படி வீரமாக இருக்க முடியும்.