மிருகங்களுக்கும் சொர்க்கம் உண்டு?
சொர்க்கம் என்ற ஒன்று இருப்பதாக ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது
இதனை பல மதங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன
ஆனால் மிருகங்களுக்கும் சொர்க்கம் உண்டு அந்த மிருகங்களும் நேரடியாக சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அதைப்பற்றிய ஒரு ஆன்மிக செய்தி
தன்னை கொல்ல வருபவனை கண்டு பயந்து ஓடி சென்று தங்களை பாதுகாத்துக் கொள்வதே விட எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றாலும் இல்லை அந்த யுத்தத்தில் தோற்றாலும் சொர்க்கம் நிச்சயம் உண்டு என்பது இந்திய ஆன்மீக நம்பிக்கை
அந்த காலத்தில் மன்னர்களது ஆட்சி காலத்தில் காடுகளில் காட்டு விலங்குகளின் ஆதிக்கம் அதிகமா சென்றபொழுது அதை கட்டுப்படுத்துவதற்காக மன்னர்கள் அதை வேட்டையாடுவார்கள்
அப்படி விலங்குகளை வேட்டையாடுவது காடுகளின் சமநிலை பாதிக்கப்படாமல் இருக்கும்
வனவிலங்கு அதிகமாகி அதனால் மக்கள் பாதிக்கப்படாமலும் இருக்கும் வகையில் இந்த வனவிலங்கு வேட்டையாடும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது
அப்படி நடந்ததில் ஒரு சம்பவம்
சூரிய வம்சத்தை சேர்ந்த இட்சுவாகு என்ற அரசன் இந்தியாவின் அயோத்தியை ஆண்டு வந்தான் அவள் தர்மங்களின் படி நடப்பதில் மிகவும் உயர்ந்தவர்
படைபலம் மிகுந்தவன் சிறந்த பலசாலி மனு என்ற அரசனின் மகனான இந்த அரசன் மக்களை நல்லபடி ஆட்சி செய்து வந்தார்
இந்த இட்சுவாகு மன்னன் ஒரு முறை தன் மனைவி குடும்பத்துடன் வேட்டைக்குச் சென்றான்
கங்கா ஆரண்யம் என்று அழைக்கப்படும் அந்தக் காட்டில் கொடிய மிருகங்கள்கலான சிங்கம் கரடி காட்டெருமைகள் முதலியவற்றை வேட்டையாடினான்
அப்படி வேட்டையாடிக் கொண்டு வந்திருக்கின்ற வேளையில் அதனை கவனித்த ஒரு பன்றியும் கூட்டம்
ஏற்கனவே இந்த பன்றி கூட்டம் மன்னர்கள் வேட்டையாடுவதை பற்றி அறிந்திருந்ததால் இன்று நாம் கொல்லப்படுவோம் என்று தங்களுக்கும் உறுதிசெய்தது
அந்த பன்றிக் கூட்டத்தில் அந்த குலத்தின் மூத்த குடும்ப உறுப்பினரான ஆண் பெண் பன்றிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்
வந்திருக்கின்ற இந்த மன்னன் நிச்சயம் நம் இனத்தை அழித்து விடுவான் என்று தங்களுக்குள் உறுதி செய்துகொண்டு அந்த மூத்த ஆண் பன்றி தன் பெண் பன்றி இடம்
"நமது குழந்தைகளை கூட்டிக்கொண்டு நீ சென்று விடு நான் எதிர்த்து நின்று போராடி சமாளிகிறேன் எப்படியும் என்னை கொன்று விடுவார்கள் நீ நம் வம்சாவளியான குட்டிகளுடன் தப்பித்து விடு" என்று கூறியது
ஆனால் பெண் பன்றியோ
"நான் உங்களை விட்டு பிரிய மாட்டேன் வாழ்வில் எப்படி இணைந்து இருந்தோமோ அதேபோல் சாவிலும் உங்களோடு நான் சாகத் தயாராக இருக்கிறேன் "
என்று கூறியது
வேறுவழியின்றி தன் பெண் பன்றியுடன் சேர்ந்து தங்களது குட்டிகளை பார்த்து
"நீங்கள் தப்பித்து விடுங்கள் நாங்கள் போராடி மன்னர்களை சமாளிக்கிறோம் அதற்குள் நீங்கள் தப்பித்து விடுங்கள்" என்று கூறினார்
ஆனால் குட்டிகள்
"நீங்களோ வயதில் பெரியவர்கள் உங்களை வயதான காலத்தில் நாங்கள் மட்டும் உங்களை விட்டுவிட்டு எப்படி பிரிவது உங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது ஆகவே நாங்களும் எங்கள் உயிரைக் கொடுத்தாவது உங்களை பாதுகாப்போம் இந்தநிலையில் நாங்கள் உங்களை விட்டுச் செல்லமாட்டோம் உங்களைப் பிரிந்து வாழ்வது எங்களுக்கு சரியாகப்படவில்லை அப்படி வாழ்க்கை எங்களுக்கு தேவையில்லை "
என்று அவைகளும் அடம் பிடித்தனர் வேறுவழியின்றி அனைவரும் மன்னனை எதிர்த்துப் போராடி உயிரை விட முடிவு செய்தனர்
நாம் அனைவரும் அங்கிருந்து தப்பித்து ஓடினாலும் மன்னன் நம்மளை விடுவதில்லை எப்படியும் நம்மை கொன்று விடுவார்
அப்படி கோழையாக சாவதைவிட எதிர்த்து நின்று போராடி சாவோம் என்று அந்தப் பன்றி கூட்டம் முடிவு செய்தது
மன்னரோ தமது வனவிலங்கு வேட்டை தொடர்ந்து செய்தபடி வந்துகொண்டிருந்தார் அவருக்கு எதிரே மிகப்பெரிய பங்கு கூட்டம் இருப்பதை கண்டார்
அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
இவ்வளவு பெரிய பன்றிக் கூட்டம் ஓடாமல் நம் எதிரே நிற்கின்றன வே என்று அவர் ஆச்சரியமடைந்தார்
மன்னரும் மன்னரை சார்ந்த வீரர்களும் அவர்களுடன் வந்த நாய்களும் அந்தப் பன்றி கூட்டத்தை நோக்கி விரைந்தன
அந்தப் பன்றி கூட்டமும் அந்த நாய்களுடன் வீரர்களுடன் எதிர்த்து போராடி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டன
அனைத்து பன்றி கூட்டமும் சிறிதும் பயமின்றி ஓடாமல் தம்மை எதிர்த்து நின்று உயிர் விட்ட அந்தப் கூட்டத்தை கண்டு மன்னர் வியந்து அதோடு மட்டுமின்றி அந்தப் பன்றி உடல்களை பார்த்து மரியாதை செய்தார்.
போராடி வீர மரணம் அடைந்த அந்தப் பன்றி கூட்டங்கள் அனைத்தும் சொர்க்கம் சேர்ந்தன.