வரலாறு பற்றிய ஒரு செய்தி

வரலாறு என்று நாம் குறிப்பிடுவது என்ன என்று பார்ப்போமானால் 



கடந்த காலங்கள் பற்றிய அல்லது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை பற்றிய செய்திகளை இன்று நமக்கு அறிவிக்கின்ற செய்தி வரலாறு என்று அறிகிறோம்


 இந்த வரலாறுகளை எழுதுகின்ற பழக்கம் நம் இந்தியர்களுக்கு இருந்ததா என்று பார்ப்போமானால்  ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நாம் குறிப்பிடலாம்


 இந்த இதிகாச புராணங்கள் நடந்த  காலங்கள் அந்த இதிகாச புராணங்களில் இருந்து  தெரிந்துகொள்ளலாம் ஆனாலும் 


நம் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த வெளிநாட்டவர் இந்தியாவை ஆண்டு வந்ததாலும் அவர்களுடைய அடிப்படை நம்பிக்கை வேறுவிதமாக இருந்ததாலும் இதை கட்டு கதைகள் என்றும் மூடநம்பிக்கை என்றும் ஒதுக்கி விட்டார்கள். 


அன்னியர்களை நம்பிய இந்தியர்கள் சிலரும் அவர்களுக்கு  தங்கள் வாழ்வாதாரத்திற்காக இருந்ததால்  அவர்களுக்கு ஏற்றால்போல் தங்களை மாற்றிக் கொண்டார்கள்.


நமது இந்தியாவின் வேத இதிகாச புராணங்களை வரலாறு என்று குறிப்பிடுவதை விட உண்மைகள் என்று குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் ஏனென்றால் 


வரலாறு மட்டுமில்லாமல் வாழ்வதற்கான உரிமை உண்மை வெளிப்பாடுகளும் உள்ளன உயர்ந்த வாழ்க்கைக்கான சட்டதிட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. வாழ்ந்தும் காட்டப்பட்டுள்ளது


வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றின்படி வரலாறும் எழுதுவது கிரேக்கர்களின் காலத்தில் தொடங்கியது என்று சொல்கிறார்கள்


ஹெரோடோட்டஸ் (கி.மு 484-425 ) தந்தை என்று கூறப்படுகிறார் . அதற்கு காரணம் அவர் எழுதியுள்ள விதம் மனிதர்கள் நம்பும்படியாக உள்ளது 


மட்டுமின்றி வரலாறு என்று சொல்வதற்கு சில காரணிகளும் செயல் நிலைப்பாடுகளும் உள்ளன


அதில் முக்கியமான ஒன்று ஐரோப்பாவில் ஏற்பட்ட தொல்பொருள் சேகரிப்பின்  ஆர்வம் மற்றும் அருங்காட்சியகம் உருவாக்கம்


 பழங்களில் காணப்படும் ஆதாரங்கள் மற்றும் பாறை அடுக்குகளில் காணப்படும் ஆதாரங்களைக் கொண்ட கருத்துகள் பற்றிய ஆய்வு


 உயிர்கள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கும் என்பது பற்றிய அறிவியலாளர்களின் ஆய்வுகள் டார்வின் போன்றோரின் கொள்கை முடிவுகள்


 மனிதன் மற்றும் விலங்குகளின் புதைகுழிகளில் காணப்படும் வடிவங்கள் பண்டைய நாகரிகம் சார்ந்த கருவிகள் பொருள்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட விதம் மற்றும் ஆய்வுகள்


 ஆரம்ப காலங்களில் எழுத்துகள் மற்றும் மொழிகள் பேச எழுத தொடங்கிய நிலை பற்றிய ஆய்வுகள் 


மனிதர்கள் பயன்படுத்திய உலோகம் மற்றும் கற்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் அது சார்ந்த சிந்தனை முடிவுகள் .


 இப்படி நடந்தவைகளைப் பற்றி தற்போது கிடைக்கின்ற ஆதாரங்களை வைத்துக்கொண்டு அந்த கடந்த காலங்களைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்வது வரலாறு என்று நாம் பொதுவாக குறிப்பிடலாம்... 


 


 


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்