ஏழரை சனியும் ஆஞ்சநேயரும்
ஒருவருக்கு ஏழரை சனி ஏற்படும் காலத்தில் அவர் அலைச்சல் திரித்தல் அதிகம் காணப்படும்
இந்த ஏழரை சனி காலத்தில் சிவபெருமானே சனியிடம் இருந்து தப்பிப்பதற்காக மலருக்குள் மறைந்ததாக புராணங்கள் கூறுவதுண்டு
அப்படிப்பட்ட அந்த ஏழரை சனி ஆஞ்சநேயரிடம் அகப்பட்டு அனுபவித்த ராமாயணக் செய்திகளும் உண்டு
பொதுவாக ஏழரை சனி என்ன செய்யும் என்பதை ஓரளவு தெரிந்து கொள்வோம்
எடுத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறாது அல்லது மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேறும் அப்படியே நிறைவேறினாலும் எதிர்பார்த்த அளவுக்கு பலனை அது கொடுக்காது
எவ்வளவு வசதியாக இருந்தாலும் அவனால் அந்த வசதியை அனுபவிக்க முடியாது
இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய திட்டங்களை தீட்டுவார்கள் ஆனால் இறுதியில் ஒன்றும் நடக்காது
சிலருக்கு பெரியதொரு வாய்ப்பு வருவது போல தோன்றும் கிடைத்து விடுவது போல மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் கடைசியில் ஏமாற்றமே நீடிக்கும்
யாரெல்லாம் உதவி செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்போம் ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்
இந்த காலகட்டங்களில் ஒவ்வொரு மனிதனும் மனோரீதியாக உடல்ரீதியாக மிக பெரும் அனுபவங்களை சந்திப்பார்கள்
இந்த ஏழரை சனி காலத்தில் அனுபவிக்கின்ற அனைத்து துன்பங்களும் ஏழரைச்சனி போகின்ற காலத்தில் சிறந்த படமாகவும் நல்ல பலனையும் தருவதாக அமையும்
பொதுவாக இந்த ஏழரை சனி அனைவருக்கும் கஷ்டங்களையும் அனுபவங்களையும் கொடுத்தாலும் ஆஞ்சநேயரை வழிபடுவர்களிடம் மட்டும் சனி சற்று தன் கடுமையை குறைத்துக் கொள்வது உண்டு அதற்கு கூறப்படும் ராமாயண செய்தி ஒன்றை பார்க்கலாம்
எல்லா மனிதர்களிடமும் ஏழரை ஆண்டுகள் கஷ்டத்தை கொடுக்கும் சனி பகவான் ஆஞ்சநேயருக்கும் ஏழரைச்சனி கஷ்டத்தை கொடுக்கும் காலம் வந்தது
அதனால் சனீஸ்வரன் ஆஞ்சநேயரின் தேடிச் சென்றார்
ஆனால் ஆஞ்சநேயர் ராமபிரான் தனது பரிவாரங்களுடன் சீதையை மீட்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் அமைத்துக் கொண்டிருந்தார்
இந்த சூழலை அறிந்துகொண்ட சனீஸ்வரன் பகவான் ராமச்சந்திர இடம் தான் அனுமாரை பற்றுகின்ற காலம் வந்துள்ளது அவர் தங்களுடைய சேவையில் ஈடுபட்டுள்ளதால் தங்களுடைய உத்தரவு எனக்கு தேவைப்படுகிறது
என்னுடைய சேவையை செய்வதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று ராமரிடம் வேண்டினார்
ராமர் உனது கடமை செய்வதில் நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்று சனீஸ்வரன் கூறிவிட்டார்
ராமரிடம் அனுமதி பெற்றுக் கொண்ட சனீஸ்வரன் அனுமாரை பிடிப்பதற்காக சென்றார்
ஆனால் அவரோ ராம சேவையில் ஈடுபட்டு கொண்டிருந்ததால் அவரிடம் நேரடியாக தான் வந்த காரணத்தைச் சொன்னார்
அனுமாரும் உனது கடமையைச் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் நான் இப்பொழுது இராம சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து செயல்படுங்கள் என்று கூறினார்
புரிந்து கொண்ட சனீஸ்வரன் என் கடமையை நான் செய்தே ஆகவேண்டும் தங்கள் உடலில் ஏதேனும் ஒரு பகுதியை நான் பற்று வதற்கான அனுமதி தாருங்கள் என வேண்டி நின்றார்
ஆனால் அனுமார் என் உடலில் கை கால் மற்றும் செயல்படும் உறுப்புகள் விட்டுவிடுங்கள்
இறுதியில் சனீஸ்வரனும் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர் அதன்படி அனுமாரின் தலையிலே சனீஸ்வரன் அமர ஒப்புக்கொண்டார்
அனுமார் சன் அவயங்கள் அனைத்தும் நாம சேவை சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்டு இருந்ததனால் அனுமனுடைய தலையும் பாலம் கட்டுவதற்கான தெரிய பாறைகளைத் தூக்கி வருகின்ற செயலை செய்து கொண்டிருந்தது
தலையிலே அமர்ந்துள்ள சனீஸ்வரன் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி தலையில் இருந்ததால் ராமபிரான் கட்டும் பாலத்திற்கு பாறைகளை தூக்கி வந்த தலைகளுக்கு இடையே இருந்ததால் அனுமாரை விட சனீஸ்வரனே பார்வைகளைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது
பாறைகளின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாத சனீஸ்வரன் இரண்டரை நாழிகை கேட்பின் கடமையை செய்வதிலிருந்து பின்வாங்கினார்
சனீஸ்வரன் பின் வாங்கினாலும் ராமபிரான் சேவையில் ஈடுபட்ட மகிழ்ச்சியில் இருந்தார்
வலியை தாங்க முடியவில்லை என்றாலும் சனீஸ்வரன் வேறுவழியின்றி அனுமாருக்கு குறுகிய காலத்திலே பற்றில் இருந்து விடுவித்தார்
விடுவித்த சனீஸ்வரனும் அனுமாரின் ராமர் சேவையை பாராட்டி அவருக்கு ஒரு வாக்குறுதி அளித்தார்
சனீஸ்வரன் அனுமாருக்கு அளித்த வாக்குறுதியின்படி அனுமார் உடைய பக்தர்களுக்கு தன்னுடைய ஏழரை ஆண்டு சனி காலத்தில் துன்பங்களை அதிகம் செய்யமாட்டேன் என்ற வரத்தையும் அருளினார்
சனீஸ்வரன் அனுமாருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு அதிகம் துன்பம் தருவதில்லை
ஆஞ்சநேயரிடம் முற்றிலும் சரணடைந்தவர்களை சனீஸ்வரன் முற்றிலும்பற்றுவதில்லை
ஆகவே ஏழரைச்சனி காலத்தில் சனீஸ்வரன் கொடுக்கின்ற தண்டனைகளில் இருந்து தப்ப நினைத்தால் ஆஞ்சநேயரிடம் சரணடைந்த பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை இது சத்தியம்