அழகு

உண்மையான அழகு


ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் அருளப்பட்ட உபதேசக் கதை



ஒருமுறை, இளவரசன் ஒருவன் ஒர் அழகிய பெண்ணால் கவரப்பட்டு அவளை மணக்க விரும்பினான். ஆனால் அவளோ  அவனை மணக்க விரும்பவில்லை.


இளவரசன் : உன்னைப் போன்ற அழகியை நான் எங்கும் கண்டதில்லை. உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மணக்கப் போவதில்லை.


அழகி : ஓ  எனது அழகாகல் கரைப்பட்டுள்ளிரோ இதே டேத்தில் ஒரு வாரம் கழித்து என்னைச் சந்தியுங்கள்,


அந்த அழகி ஒரு வாரத்தில் அவள் பல்வேறு மருந்துகளை உட்கொண்டாள். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாந்தியையும் பேதியையும் பானைகளில் சேகரித்து வைத்தாள்.


சரியாக ஒரு வாரத்தில் இளவரசன் அவளை காண வந்தான்  அங்கயே இருந்த அழகியை  அடையாளம் தெரியாத


இளவரசன்: இங்கு   ஓர் அழகிய பெண்ணை பார்த்தாயா?


என  அவளீடமே கேட்டான் 


அழகி : நீங்கள்  தேடும்  அந்த  பெண்  நான்தான் 


இளவரசன்  அதாச்சியடைந்தான்


இளவரசன் : அவளோ பேரழகி, நீயோ அசிங்கமாக உள்ளாய். நான் நம்ப மாட்டேன்.


அழகி :என்னுடைய எல்லா அழகையும் இந்த பாத்திரங்களில் வைத்துள்ளேன். பாருங்கள்!


( என தான்  சேகரித்து  வாய்த்த வாந்திபேதியை காட்டினாள் )


பார்த்து  அருவருப்புடன் மூக்கை பொத்தினான் இளவரசன் 


-கருத்து


தவறான பௌதிக அழகினால் கவரப்பட்டுள்ள நம் ஒவ்வொருவரின் நிலையும் இதுபோன்றதுதான்.


அழகான உடலைப் பெற்றிருந்தபோதிலும், இப்பெண்ணின் உடலும் மனமும் தற்காலிகமானதே,


அவளோ அவற்றிலிருந்து வேறுபட்டவள். அவள் ஓர் ஆன்மீகப் பொறி. அவளது போலியான தோலினால் கவரப்பட்ட அந்த இளவரசனும் ஓர் ஆன்மீகப் பொறியே.


உடலை எவ்வளவு அலங்கரித்தாலும் அதனை யாரும் தொட விரும்புவதில்லை.


உண்மையான அழகுடன் சம்பந்தமற்ற பொய்யான விஷயத்திலேயே நாம் அனைவரும் ஆர்வம் காட்டிக் கொண்டுள்ளோம்.


வெளித் தோலின் அழகினை பலமான மருந்தினை உட்கொண்டு சில மணி நேரத்தில் அழித்துவிட முடியும்,


ஆனால் உண்மையின் அழகோ அழியாதது, என்றும் ஒரேமாதிரி இருக்கக்கூடியது. அந்த உண்மையினை, ஆன்மீகப் பொறியினை என்றுமே அழிக்க இயலாது.


-துரதிர்ஷ்டவசமாக, பௌதிக கலைஞர்களும் அறிஞர்களும் ஆன்மாவின் அத்தகு அழகிய தன்மையைப் பற்றியும், அந்த அழகிய ஆன்மீகப் பொறிக்கு ஆதாரமாக விளங்கும் நெருப்பைப் (கடவுளைப்) பற்றியும் அறியாமல் உள்ளனர்.


அந்த நெருப்பிற்கும் பொறிக்கும் இடையிலுள்ள தெய்வீக உறவுகளையும் அவர்கள் அறிவதில்லை .


-பரம்பொருளின் அந்த தெய்வீக லீலைகள் கருணையுடன் இந்த ஜடவுலகினுள் நிகழ்த்தப்படும்போது, மேலே குறிப்பிட்ட மலமும் வாந்தியும் கலந்த உடலோடு அத்தகு லீலைகளை முட்டாள்கள் ஒப்பிடுகின்றனர்.


ஆன்மீகத்தின் இறுதி உண்மை , எல்லாரையும் கவரும் அழகிய நபரான கிருஷ்ணரே; அவரே மூல புருஷர், உலகிலுள்ள அனைத்திற்கும் ஆதாரம்.


அத்தகு அழகும் நித்தியத்தன்மையும் வாய்ந்த பரம்பொருளின் அம்சங்கள் என்பதால், மிகச்சிறிய ஆன்மீகப் பொறிகளான ஆத்மாக்களும், அழகிலும் நித்தியத் தன்மையிலும் பரம்பொருளை ஒத்துள்ளனர்.


பரம்பொருளுக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில், அவர் என்றுமே முழுமையானவர், நாம் என்றுமே அவரது பகுதிகள்.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்