இறைவனை அடையும் நல்லவர்கள்
நல்லவர்கள் கெட்டவர்கள் அறிவது எப்படி?
யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று புரியாமல் இன்று நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதனால்
உலகம் கூட எந்த நாடு நல்ல நாடு எந்த நாடு கெட்ட நாடு
எந்த நாடு வஞ்சகம் செய்கிறது
எந்த நாடு எல்லைகளை ஆக்கிரமிக்க நினைக்கிறது
எந்த நாடு மக்களை ஏமாற்றுகிறார்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
எந்த நாடு மதவெறி பிடித்த அறைகிறது
எந்த நாடு இனவெறி கொண்ட அலைகிறது
எந்த நாடு நிறைவேறிக் கொண்டு அலைகிறது
இப்படி நாடு என்று எல்லாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது அங்கு பலரை குறிக்கின்றது ஆனால்
அவர்கள் எல்லோரும் அப்படி இருப்பது இல்லை இதில் அதிகமான மக்கள் எப்படி இருக்கிறார்கள் அவர்களுடைய பலம் எப்படி இருக்கிறது என்பது போன்ற நிலைகள் ஆராய வேண்டியதாக இருக்கிறது
எப்படித்தான் இருப்பினும்
நாடு என்று எடுத்துக் கொண்டோம் ஆனாலும் தனிமனிதன் என்று எடுத்துக் கொண்டாலும் பெரிய மாறுபாடு இருப்பது இல்லை
ஒரு நாடு என்று எடுத்துக் கொண்டோமானால் அதை ஆளுகின்ற அவன் ஒருவனாகத்தான் இருக்கின்றான்
ஆட்சியாளர்கள் பலராக இருந்தாலும் தலைமை தாங்கி நடத்துபவன் ஒருவனாகவே இருக்கின்றான்
அந்த ஒருவன் எப்படி இருக்கின்றானோ அவனை பின்பற்றித்தான் அந்த நாடு இயங்குகிறது
இங்கு ஒன்று முக்கியமாக கவனிக்க வேண்டிய உள்ளது
அந்த நாட்டை ஆளுகின்ற அந்த ஒருவனை தேர்ந்தெடுப்பதில் தான் அந்த நாட்டின் எதிர்காலம் அடங்கியுள்ளது அதை வைத்துதான் அந்த நாடு நல்ல நாடா கெட்ட நாடா என்பதை புரிந்துகொள்ள முடியும்
தேர்வு தடுக்கின்ற ஒருவன் சுயநலவாதியாக இருந்தால் என்றால் நிச்சயம் அந்த நாடு உருப்படாது
சுயநலத்தில் பல வகைகள் உள்ளது
ஒரு நாட்டை ஆளுகின்ற ஒருவன் தான் என்ற அகந்தை உடையவனாகவும் தன் நலத்தில் மற்றும் ஆர்வம் உடையவனாக இருந்தால் தன் இன்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வான் அவனுடைய கவனம் நாட்டின் நிலத்தில் இருப்பது இல்லை அவளை பிறநாட்டினர் எளிதில் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று விடுவர்.
ஒருவேளை அந்த நாட்டை ஆளுகின்ற அவன் குடும்பத்தின் மீது பற்று உடையவனாக இருந்தான் தன் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதிலேயே அவன் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார் அதற்காக அவன் நாட்டை கூட அவனது சொந்த பொருள் போல விற்பனைப் பொருளாக மாற்றி விடுவார்
ஒருவேளை அவன் இனப்பற்று மொழிப்பற்று ஜாதி பற்று நிரப்பிற்று போன்றவை உடையவனாக இருப்பேன் நிச்சயம் தன்னைச் சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை வெறுப்பவன் ஆகவும் அவர்களை தனிமைப்படுத்துவது சார்ந்தவர்களை மட்டும் உயர்நிலை படுத்துவதில் கவனம் செலுத்துவான் இதனால் இந்த நாடும் நிலையற்ற தன்மைக்கு செல்லும்
தன் நாட்டின் மீது பற்றுள்ள இவன் கூட அந்த நாட்டிற்கு பாதுகாப்பு அற்றவனாக இருப்பான் ஏனென்றால்
அவன் தன் நாட்டை வளப்படுத்தும் நோக்கத்திற்காக பிற நாட்டை ஆதிக்கம் செலுத்த நினைப்பார் அதுவும் அவன் நாடு பாதிப்பு அடைவதற்கு காரணமாக இருந்துவிடும்.
மேற்கண்ட பற்றுகள் இல்லாதவனே ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவனாக இருக்க முடியும்
பொதுவாக பற்று இல்லாதவர்கள் துறவிகள் ஆகவே இருக்கிறார்கள் காரணம் அவர்களுக்கு ஆசை இருப்பதில்லை
அப்படிப்பட்ட துறவிகள் சிலர் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு
அவர்கள் போதிக்கின்ற செயல்களில் ஈடுபடுவார்கள் சிலர்
சிலர் ஆட்சி அதிகாரங்களையும் பயன்படுத்துவது உண்டு
அப்படிப்பட்டவர்கள் நேர்மையாக மக்களை காப்பாற்றும் உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்
அப்படி இருக்கின்ற ஆட்சியை வேறு ஆட்சியாளர்கள் கைப்பற்ற நினைக்கின்ற பொழுது அவர்களும் எதிர்கொள்ள தயாராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்
அவர்கள் பற்றற்ற வர்களாக இருப்பினும் போர் களங்களை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்
அப்படிப்பட்ட நிலையில் பற்றற்ற நிலையிலும் அவர்கள் கொலைகாரர்களாக இருக்கிறார்கள்
உண்மையில் அவர்கள் கொலைகாரர்கள் அல்ல
ஏனென்றால் அவர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு போரினை எதிர்கொள்கிறார்கள் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் பாவமாக இருப்பினும் புண்ணியமாக இருப்பினும் அதில் அவர்கள் சம்பந்தப்பட்ட இருப்பினும் அது அவர்களை பாதிப்பதில்லை
ஆகவே குடும்பத்தினராக இருப்பினும் தனி மனிதர்களாக இருப்பினும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதை துறவு என்று நாம் சொல்ல முடியாது
உண்மையான துறவு என்பது நம் மீது திணிக்கப் பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்வது எதிர்வினை ஆற்றுவது அல்ல
பொதுவாக உண்மையான துறவிகள் இறை உணர்வோடு இருக்கின்றார்கள்.
அதனால் அவர்கள் எங்கும் எதிலும் இறைவனை பார்க்கின்றார்கள்
எல்லா செயல்களிலும் அவர்கள் இறைவனை பார்க்கின்றார்கள்
அதனால் அவர்கள் இறைவனுடைய செயலாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள்
அது எப்படிப்பட்ட செயலாக இருந்தாலும் தங்களை தாக்க வருகிறவர்கள் ஆக இருந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள்
ஏனென்றால் அவர்களைத் தாக்க வருபவர்களையும் அவர்கள் இறைவனாகவே பார்க்கிறார்கள் இதுவே உண்மையான துறவு அப்படிப் பார்க்கின்ற அவர்கள் இறைவனையே அடைகிறார்கள்.
இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்கள் இந்த உலகத்தில் குடும்பத்தில் இருந்தாலும் ஏதேனும் ஒரு ஜாதியில் இருந்தாலும் ஏதோ ஒரு மதத்தில் இருந்தாலும் ஏதோ ஒரு நாட்டில் பிறந்து இருந்தாலும் அவர்கள் அந்த நிலைப்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்வது இல்லை
அவர்கள் கல் மண் மரம் செடி கொடி மிருகங்கள் பறவைகளை கூட இறைவனுடைய அங்கமாகவே பார்க்கிறார்கள்
இப்படி இருப்பவர்கள் எப்படி இறைவனை விட்டு பிரிந்து இருப்பார்கள் இவர்கள் இறைவன் உள்ளே இறைவனுக்காகவே வாழ்கிறார்கள் இவர்களே உண்மையில் வாழ்கிறவர்கள்
மற்றவர்கள் மரணத்தின் சுழற்சியில் சிக்கி கலந்து கொண்டே இருப்பவர்கள்.