கடவுளைப்பற்றி கம்பர்

கடவுளைப்பற்றி கம்பர் கூறுகிறார் 



கடவுளைப்பற்றி பலரும் அவரவர் நிலைகளில் இருந்து கொண்டு  அவரவர் விருப்பம்போல பலபல கூறுகின்றது



  • உண்மையில் கடவுளைப்பற்றி உணர்ந்தவர் யாரும் இல்லை என்றுதான்  கூறமுடியும்.



  •  மற்றைய மனிதர்கள் ஏதோ அவரவர் பிழைப்பதற்காக எதையோ சொல்லி  காலத்தை  கழிக்கின்றனர்


கடவுள் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும்  உள்ளனர்.


பொதுவாக கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே உள்ளது


நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற நிலையும் உள்ளது  இது மனிதர்களைப் பொறுத்த மட்டில் தான் உள்ளது. 


பொதுவாக மனிதனுடைய வாழ்க்கையும் விலங்குகளைப் போல் தான் வாழ்க்கை அமைத்துள்ளது - அதில்  ஒரு தன்மையில் மட்டும் அதிகம் கொண்டுள்ளான் 


ஒரே ஒரு விஷயத்தில் அவன் உயர்ந்து விட்டான் அதுதான் கடவுளைப் பற்றிய அவனது சிந்தனையும் அவனைப் பொருத்தமட்டில் மரணத்திற்குப் பின்பு ஓர் இலக்கு உள்ளது என்று நினைக்கின்றான் 


அதனை நோக்கி பயணிக்கிறான் இந்தச் சிந்தனை இல்லாதவர்கள் மிருகத்திலிருந்து மாறுபட்டவர்கள் ஆக இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவுதான் 


இறை நம்பிக்கை இல்லாத மனிதர்கள் மிருகங்கள் என்ன செய்கின்றன  அதையே செய்கின்றனர் .  அதாவது  பிறக்கின்றனர்  உணவு உண்கின்றனர்  தூங்குகின்றனர் வளர்கின்றனர்  பாதுகாத்துக் கொள்கின்றனர் இனவிருத்தி செய்கின்றனர் மரணிக்கின்றனர்.


விலங்குகளும் உணவு  உண்கின்றன இனப்பெருக்கம் செய்கின்றன தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன  ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா  என்று கேட்போம் ஆனால் இருக்கலாம் இன்று தான் கூற முடியும் 


இருக்கிறது என்று உறுதியாக கூற முடியாது ஆனாலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன


 இவைகளை நாம் பார்க்கின்ற பொழுது நிச்சயம் விலங்குகளை விட மனிதன் உயர்ந்த இருப்பதற்கு ஒரே காரணம் நம்பிக்கை அந்த நம்பிக்கையானது இறை நம்பிக்கைதான் அந்த இறை நம்பிக்கையை பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் (கம்ப இராமாயணம் – யுத்த காண்டம்)


 கூறும் ஒரு செய்தி


ஒன்றே யென்னின் ஒன்றேயாம்


…. பலவென் றுரைக்கிற் பலவேயாம்


அன்றே யென்னின் அன்றேயாம்


…. ஆமே யென்னின் ஆமேயாம்


இன்றே யென்னின் இன்றேயாம்


…. உளதென் றுரைக்கின் உளதேயாம்


நன்றே நம்பி குடிவாழ்க்கை


…. நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!


                                                     – கம்பர்


பொருள்:



  • கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்;



  • வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார்.



  • கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான்.



  • மாறாக கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே.



  • கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான்.



  • கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே.



  • இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே.



  • சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!


 


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்