சாதுக்கள் என்பவர்கள் யார் ?

இந்த உலகத்தில் சாதுக்கள் என்பவர்கள் யார்


 கடந்த காலங்களில் பிராமணர்களை சாதுக்கள் என்று கூறும் பழக்கம் இருந்தது ஏனென்றால் அவர்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்தார்கள் ஆனால் இன்று அப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது


 இன்று பிராமணர்கள் என்பது ஜாதிகளில் ஒன்றாக இருக்கிறது அது உயர்ந்த ஜாதியாக மதிக்கப்படுகிறது காரணம் அது அவர்களுடைய அறிவுத்திறன் என்றும் கூறலாம் மற்ற ஜாதியினரை விட பிராமண ஜாதியினர் இடம் சாது தன்மை அதிகமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது  அதேவேளையில் அவர்கள்தான் சாதுக்கள் என்று கூறிவிட முடியாது


 பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரும் சாது தன்மை உடையவர்களாக இந்த காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை மறுத்து விடவும் முடியாது


 பொதுவாக சாது தன்மை என்பது  பிறக்கும்போதே சிலருக்கு இயற்கையாக அந்த தன்மை இருக்கின்றது அது காலப்போக்கில் சிறப்பாகவும் இருக்கிறது சில நேரங்களில் காலம் அவர்களை மாற்றவும் செய்கிறது


 சிலர் பிறக்கின்ற பொழுது வன்மங்கள் மிகுந்தவர்களாக இருப்பினும் காலப்போக்கில் உலகம் அவர்களுக்கு கொடுத்த அனுபவத்தின் மூலம் அவர்களும் சாது தன்மை மிக்கவர்களாக ஆகி விடுகிறார்கள்


 இதையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது யாரையும் சாதுக்கள் என்றும் சாது தன்மை இல்லாதவர்கள் என்றும் உறுதி செய்துவிட முடியாது காலம் தான்  அதனை முடிவு செய்கிறது 


 முதலில் சாதுக்கள் என்றால் என்ன அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்


 சாதுக்கள் சொற்களால் யாரையும்  தீங்கு செய்வதில்லை


செயலாலும் யாருக்கும் தீங்கு செய்வதில்லை  


ஏன் மனதாலும் கூட அவர்கள் யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை 


இது சாதுக்களிடம் உள்ள குணங்களில் மிக முக்கியமானது


இதுமட்டுமன்றி சாதுக்கள் துன்பங்களுக்கு காரணமான 


கோபம் கொள்வது இல்லை


ஆசை கொள்வதும் இல்லை பிறரிடம்


 பொறாமை கொள்வதும் இல்லை


இக்குணங்கள் இருந்தாலே அவர்கள் சாதுக்களுக்கு உடைய தன்மையை பெறுகிறார்கள்


பொதுவாக இறைநம்பிக்கை உடையவர்கள் இடமே சாது தன்மை மிகுந்து காணப்படுகிறது ஏனென்றால்


அவர்கள்  எங்கும் எதிலும் இறைவனை காண்கிறார்கள் அதனால் அவர்கள் தீங்கு செய்ய பயப்படுகிறார்கள்


 இந்த சாதுக்கள் எல்லா மனிதர்களிடம் மட்டுமல்ல எல்லா உயிர்களிடத்தும் ஏன் எல்லா பொருள்கள் இடத்தும் இறைவனின் தன்மையை காண்கிறார்கள்


அதனால் அவர்கள் தங்களை எப்படி  நேசிக்கின்றனரோ அப்படியே பிறரையும் நேசிக்கின்றார்கள்


ஆகவே எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை காண்கின்ற அவர்கள் சாதுக்கள் ஆக இருக்கிறார்கள் 


இந்த நிலைபாட்டை பற்றி கிருஷ்ணர் பகவத் கீதையில் மேலும் விரிவாக சொல்லுகிறார்


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்