சூரிய கிரகணமும் ராகு கிரக சேர்க்கையும்
சூரிய கிரகணம்
- பொதுவாக சூரிய கிரகணம் அமாவாசை நாளில் தான் நடக்கும்
- அமாவாசை ஒவ்வொரு மாதமும் நிகழ்கின்றது அப்படி இருக்கின்ற பொழுது சூரிய கிரகணம் ஏன் எப்பொழுதோ வருடத்தில் ஒருநாள் நிகழ்கிறது
- சூரியனை மையமாக வைத்து பல கிரகங்கள் சுழல்கின்றன
- ஜோதிடரீதியாக ஒரு ஏழை சுற்றுவதாக ஒன்பது கிரகங்களை குறிப்பிடுகிறோம்
- உண்மையில் ஜோதிடரீதியாக ஏழு கிரகங்கள் தான் உருவம் உடையவையாக இருக்கின்றன
- மேலும் கிரகங்களாக குறிப்பிடப்படுகின்ற ராகு கேது இவ்விரண்டும் சூரியன் சந்திரன் பூமி இம்மூன்றும் சந்திக்கின்ற நிழலை குறிக்கின்றன.
- ஏன் இந்த நிழலையும் நம் முன்னோர்கள் கிரகங்களாக குறிப்பிட்டார்கள் என்பதை நாம் விரிவாக பார்க்க வேண்டிய உள்ளது
- பொதுவாக கிரகங்கள் என்றால் வீடு அல்லது மறைவு இருப்பு அல்லது நிகழ்வு
- இந்த மறைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வருகின்ற சந்திரன் ஒரே நேர்கோட்டில் வருகின்ற பொழுது ஒரு மறைவு தோன்றுகிறது இதனை சூரிய கிரகணம் என்கிறோம்
- இந்த கோட்டை விட்டு சந்திரன் விலகி சுற்றி வருகின்ற பொழுது அதே நிழல் ஏற்படத்தான் செய்யும் ஆனால் அது பூமியின் மீது விழுவது இல்லை அதனால் நாம் அதை பார்க்க முடிவதில்லை இதனைத்தான் நாம் அமாவாசை என்கிறோம்
கதிரவ மறைப்பில் நான்கு வகைகள் உள்ளன. அவை:
- முழுமையான கதிரவ மறைப்பு- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவ தகடு முழுமையாக மறைக்கப்படும்.
- வளையக் கதிரவ மறைப்பு- நிலவின் எதிர்நிழல் புவியின் மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
- கலப்பு கதிரவ மறைப்பு- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
- பகுதி கதிரவ மறைப்பு- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்
நிகழ்வுகள்- உச்சக்கட்டம்
முழுமையான கதிரவ மறைப்பின் உச்சக்கட்டத்தின் போது புவியில் விழும் கதிரவ ஒளிக்கோளத்தின் பகுதி நிலவால் மறைக்கபடுகிறது. எனவே அப்போது கருவட்டமாகத் தெரியும் புதுநிலவையும் அதன் விளிம்பில் சிவப்புத் திட்டுக்கள் போன்று தெரியும் நிறமண்டலத்தையும் அதைச் சுற்றி மங்கலான வெள்ளை நிறத்தில் தெரியும் கொரோனாவும் வெறும் கண்களால் காண இயலும்.
முழுமையான கதிரவ மறைப்பு முடிவுறும் தருவாயில் ஏற்படும் வைர மோதிர நிகழ்வு.
வைர மோதிர நிகழ்வு
முழுமையான கதிரவ மறைப்பு மற்றும் வளைய கதிரவ மறைப்பு ஆகியவற்றின் உச்சக் கட்டம் தொடங்கும் போதும் முடிவுறும் போதும் வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.