சூரிய கிரகணம் 21.06.2020
ஜூன் 21ஆம் தேதி ஆனி மாதம் 7ஆம் தேதி
சூரியனும் சந்திரனும் மிதுன ராசியில் நேர் கோட்டில் வருகின்றன அதாவது ராகு என்ற கிரகமான நிழல் பகுதியில் வருகின்றது அப்பொழுது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருகின்றது இந்த நிகழ்வினை சூரிய கிரகணம் என்று கூறுகின்றோம்
இந்த சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை காலை 10. 22 முதல் பகல் மணி 1.41 வரை நடைபெறும்
இந்த கிரகணம் மிருகசீரிடம் மற்றும் திருவாதிரை நட்சத்திரங்களில் பாதத்தில் நடைபெறுகின்றது இந்தியா முழுவதும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும்
இந்த கிரகணத்தினால் கரோனா வைரஸ் வருவது நின்றுவிடும் என்றும் உலகத்தில் பேரழிவு ஏற்படும் என்றும் பலதரப்பட்ட சந்தேகங்கள் வருகின்றன. அதனை நாம் முற்றிலும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. அதே நேரத்தில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை இவைகள் காட்டும்.
இந்த கிரகணம் அமைப்பானது நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில் ராகு கேது இருக்கின்ற வீட்டிற்கு உள்ளேயே அனைத்து கிரகங்களும் அடங்கிவிடும் இதனை கால சர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள்
இந்த காலகட்டம் உலகமே பயப்படுகிற அளவுக்கு ஒரு நிலை ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது
இந்த கிரகணம் மிருகசீரிட நட்சத்திரத்தில் நடைபெறுகின்றன அதாவது செவ்வாய் சாரத்தில் இந்த கிரகணம் நடை பெறுவதனால் உம் சனி கேது பார்ப்பதனால் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகளை நிச்சயம் கொடுக்கும்
இதனால் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடு பாதிக்கப்படலாம் அல்லது மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கலாம்.