ஸ்ரீ இராம நவமி
பகவான் ஸ்ரீ இராமசந்திரரின் அவதாரத் திருநாள்
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்
எண்ணிலடங்காத அவதாரங்கள்
ராமாதி மூர்திஷு கலா-நியமேன திஷ்டன்
நானாவதாரம் அகரோத் புவனேஷு கிந்து
க்ருஷ்ண: ஸ்வயம் ஸமபவத் பரம்: புமான் யோ
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி (பிரம்ம சம்ஹிதை 5.39.)
பிரம்ம சம்ஹிதையின் இந்த ஸ்லோகத்தில் பகவான் இராமசந்திரரின் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. இராமாதி, இராமர் மட்டுமல்ல இன்னும் பற்பல அவதாரங்கள் உள்ளன. அவை ஆற்றின் அலைகளுக்கு ஒப்பிடப்படுகின்றன; ஒரு சமுத்திரத்தின் அல்லது ஆற்றின் அலைகளை எவ்வாறு கணக்கிட முடியாதோ, அது போலவே பரம புருஷரின் அவதாரங் களை யும் கணக்கிடமுடியாது. ஆனால் அவற்றில் முக்கியமானவற் றைப் பற்றி மட்டும் சாஸ்திரங் களில் குறிப்பு உள்ளது. எனவே தான், இங்கு இராமாதி என்று கூறப்பட்டுள்ளது. இராமாதி என்றால் இராமரும் இதர அவதாரங்களும் பொருள்; ஓர் அவதாரம் தோன்றி மறைந்த பின்னர், அழிந்துவிடுவதில்லை . அவர் என்றும் நிலைத்திருப்பார்.
ஸ்ரீ இராமரின் தோற்றம்
ஸ்ரீ இராமர் பல்லா யிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு திரேதா யுகத்தில் இப்பூவுலகில் தோன்றினார். நாம் தற்போது கலி யுகத்தில் ஐந்தாயிரம் வருடங்களை கடந்து வாழ்ந்து கொண்டுள்ளோம். இதற்கு முந்தைய துவாபர யுகம், எட்டு இலட்சம் வருடங்களையும், துவாபர யுகத்திற்கு முந்தைய திரேதா யுகம், 12 இலட்சம் வருடங்களையும் கொண்டதாகும். இதன்படி, சுமார் இருபது இலட்சம் வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ இராமர் இப்பூவுலகில், அயோத்தியில் தோன்றினார்.
புதுதில்லியில் இருந்து வட கிழக்கில் ஐந்நூறு மைல் தொலைவில் அயோத்தி மாநகரம் உள்ளது. இராமபிரான் நவமி திதியில் தோன்றியதால் அத்தினத்தை இராம நவமி என்கிறோம். இராமரின் தந்தை அயோத்தியின் பேரரசரான தசரதர். அவருக்கு மூன்று மனைவியரும் நான்கு புதல்வர்களும் இருந்தனர். மூத்த மகன் ஸ்ரீ இராமர். அவரது வாழ்க்கை வரலாறு, இராமாயணம் என்னும் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
கைகேயி கேட்ட வரம்
அரசுப் பணியிலிருந்து ஓய்வெடுக்க விரும்பிய தசரதர், தனது மூத்த மகன் இராமரை அரியணையில் அமர்த்த முடிவு செய்தார். ஆனால் பட்டாபிஷேகத்திற்கு ஒரு நாள் முன்பு தசரதரின் இளைய மனைவியான கைகேயி அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டாள்.
ஒரு சமயம் மன்னன் தசரதர் தனது மனைவியின் தொண்டில் மகிழ்ச்சியுற்று, "ஏதேனும் வரம் வேண்டுமானால் கேள், என வாக்களித்திருந்தார். பதிலுக்கு கைகேயி, “தக்க சமயத்தில் தேவை வரும்போது பெற்றுக் கொள்கிறேன், என கூறியிருந்தாள்.
ஒருநாள் ராமபிரானின் பட்டாபி சேகத்திற்கு முன்பு மன்னர்தனக்களித்திருந்த வரத்தைப் பற்றி கைகேயி மன்னருக்கு நினைவுபடுத்தினாள். மன்னர் தசரதரும், “இப்போது வரத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா, என்னவரம்வேண்டும்?” எனக் கேட்டார்.
அவள் பதிலுக்கு, தனது மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம் நடக்க வேண்டும்; இராமருக்கு அல்ல என்றாள். திகைப்பில் மூழ்கிய மன்னர் அதற்கு சம்மதிக்க நேர்ந்தது.
அக்காலத்தில், அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் சத்திரியர்களுக்கு பல மனைவியர் இருப்பர். அவர்களுக்குள் போட்டி ஏற்படும். மனிதரின் மனோநிலை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது.
இருபது இலட்சம் வருடங்களுக்கு முன்பும் இதே மனோநிலை இருந்திருக்கிறது. தன் மகன் பரதன் அரசனாக வேண்டும் என்றும், இராமன் அல்ல என்றும் வேண்டினாள் அந்த இளைய மனைவி. அதுமட்டுமின்றி, மிகவும் சாமர்த்தியமாக, இராமர் பதினான்கு வருடங்கள் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று மற்றுமொரு வரத்தையும் கேட்டாள். தசரதரும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று, அதுவே சத்திரிய தர்மம்,
சத்திரியர்கள் வாக்குத் தவறுவதில்லை . சத்திரியன் சவால்களை ஏற்க வேண்டும். பின்வாங்கக் கூடாது, போருக்கு அழைத்தால் போர் புரிய வேண்டும், பிறகு பார்க்கலாம் என்று சத்திரியன் கூறக் கூடாது.
இராமரின் துறவு
மஹாராஜா தசரதர், தன் இளைய மனைவிக்கு அளித்த வாக்கின்படி மூத்த மகன் இராமனிடம் கூறினார், “எனதருமை மகனே , பதினான்கு வருடங்கள் நீ காட்டிற்குச் செல்ல வேண்டும். அதுவே உன் சிற்றன்னையின் விருப்பம், நீ அவ்வாறு செய்வாய் என நானும் வாக்களித்துவிட்டேன். இராமசந்திரரும், “அப்படியே செய்கிறேன், நான் தயார்” என்றார். அதுவே அவரது சிறப்பு. பகவானின் ஆறு ஐஸ்வரியங்களில் இதுவும் ஒன்று.
ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய
வீர்யஸ்ய யஷஸ: ஷ்ரிய:
க்ஞான-வைராக்யயோஷ் சைவ
ஸன்னாம் பக இதீங்கனா (விஷ்ணு புராணம் 6.5.47)
செல்வம், வீரம், அழகு, புகழ், அறிவு மற்றும் துறவு இவற்றை பூரணமாக உடையவரே பகவான். துறவின் பூரணத்துவத்தை இராமசந்திரர் இங்கு வெளிப்படுத்துகிறார். மேற்கூறிய எந்த குணத்திலும் யாரும் பகவானை மிஞ்ச முடியாது, பகவான் இராமசந்திரர் முழு இராஜ்ஜியத்தையும் துறந்து, தன் தந்தைக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்.
மறுநாள் அவர் சிம்மாசனம் ஏறப்போகிறார் என்பதால், முழு நகரமும் அலங்கரிக்கப்பட்டு, அனைவரும் அதனைக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். “தந்தையே, ஒரு பெண்ணின் தூண்டுதலால் இவ்வாறு தாங்கள் நடந்து கொள்வது தவறு. இதனை நிறுத்துங்கள். அனைவரும் நாளை எனது பட்டாபிஷேகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.” என அவர் தனது தந்தையிடம் விவாதித்திருக்கலாம். ஆனால் இராமர் அவ்வாறு விவாதம் செய்யவில்லை. உடனே ஒத்துக் கொண்டார்.
சீதை உடன்வருதல்
இராமரின் தம்பிகளில் ஒருவர் லக்ஷ்மணர், அவர் இராமரை வேண்டினார்: “தயவுசெய்து என்னையும் அழைத்துச் செல்லுங்கள்." "அஃது உன் விருப்பம், நீ விரும்பினால் என்னுடன் வரலாம்," என்று இராமர் பதிலளித்தார்.
பிறகு இராமரின் மனை வியான சீதை தானும் வருவ தாகக் கூறினார். இராமரோ, “என்னுடன் நீ வர இயலாது. அது மிகவும் கடினம், நீ ராஜபுத்ரி, வனத்தில் வாழும் கடினமான வாழ்க்கை முறையை உன்னால் ஏற்க முடியாது” என்று கூறினார். அதற்கு சீதை, “நான் தங்களின் மனைவி, நீங்கள் நரகத்திற்குச் சென்றாலும் உங்களுடன் நான் வர வேண்டும்," என்று பதிலுரைத்தார். இதுவே சிறந்த மனைவியின் அடையாளம், “உங்கள் தந்தை உங்களை காட்டிற்குப் போகச் சொன்னார். நீங்கள் போய் வாருங்கள், நான் என் தந்தை வீட்டிற்குச் செல்கிறேன், அல்லது இங்கேயே இருக்கிறேன், என்று சீதை கூறியிருக்கலாம். இல்லை ! கணவனின் எப்படிப்பட்ட சூழ்நிலை யையும் மனைவி ஏற்கத் தயாராக இருக்க வேண்டும், இதுவே சிறந்த மனைவியின் அடையாளம்.
கணவன் பணக்கார னாக இருக்கும் போது மனை வி அவனுக்கு நம்பிக்கை | யுடன் நடந்து கொள் வதும், பின்ன ர் ஏழையானதும் அல்லது காட்டிற்கு செல்லும் போதும் அ வ னை விட்டு விடு வதும் தவறு. மனைவி என்றால் சரிபாதி, அவள் கணவனின் நிழல். நிழல் நிஜத்தை தொடர்வதைப் போல கணவன் செல்லும் இடத்திற்கு மனைவியும் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அதை தவறாக புரிந்து கொண்டு மனைவியை சிலர் அடிமையாக்கி விடுகின்றனர். ஆனால் அது தவறாகும்.
தசரதர் மறைவு
இராமரின் தம்பியான பரதன் நாடாள வேண்டும் என அவனது தாய் கைகேயி விரும்பினார். ஆனால் பரதனோ இராமர் இருக்கும் வரை அவரே மன்னர் என்பதில் உறுதியுடன் இருந்தார். இருப்பினும், தன் பிரிய மகன் இராமனின் பிரிவைத் தாளாமல் மன்னர் தசரதர் உயிரை நீத்துவிட்ட காரணத்தால், நாட்டை நிர்வகிக்குமாறு பரதனிடம் வேண்டியிருந்தார் இராமர். பரதனும் அண்ணன, வாக்கை எற்று ராமன் இருக்கவேண்டிய அரியணையில் அண்ணனின் பாதுகையை வைத்து ஆட்சி செய்து வந்தாா்
இராவணனுடன் யுத்தம்
பிறகு, இராமர் தன் மனைவி மற்றும் தம்பியுடன் காட்டிற்குச் சென்றார். இளமையாகவும் அழகாகவும் திகழ்ந்த சீதைக்கு அடர்ந்த காட்டில் பாதிப்புகள் வரலாம். அரக்கர்கள் வரலாம் என இராமர் எண்ணினார். உண்மையில் அவ்வாறே பின்பு நடந்துவிட்டது. சீதையை இராவணன் கடத்திச் சென்று விட்டான். இராவணனின் முழு குடும்பத்தையும் ஸ்ரீ இராமர் சீதைக்காக அழித்தார். மனைவி எப்படியோ அவ்வாறே கணவனும். மனைவி நம்பிக்கையுடன் தன் கணவனை காட்டிலும் பின்தொடர்ந்தாள். கணவனும் நம்பிக்கையுடன் தன் மனைவி கடத்தப்பட்டாள் என்பதால், இராவணனின் முழுகுடும்பத்தையும் அழித்தார்.
இராவணனுடன் போர் புரிவதற்காக, இராமர் தன் நாட்டிற்குச் சென்று படைகளைத் திரட்டிக் கொண்டு வரவில்லை . காட்டில் இருக்குமாறு கட்டளையிடப்பட்டு இருந்ததால், அவர் நாடு திரும்பவில்லை. அங்கேயே வானரங்களைக் கொண்டு ஒரு படையை உருவாக்கி, இராவணனிடம் போர் புரிந்தார். இந்தியாவின் முனையிலிருந்து மறுபக்கத்திலிருந்த இலங்கை வரை பாலம் கட்டினார்.
மன்னர்களில் சிறந்தவர்
இராமபிரான் தோன்றிய நன்னாளில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவரைப் போல பல மன்னர்கள் இருந்தனர். மஹாராஜா யுதிஷ்டிரர் இராமபிரானைப் போன்றே சிறப்பு மிக்கவர்,
மாமன்னர் பரிக்ஷித்தும் அத்தகையவரே. பல நல்ல மன்னர்கள் இருந்தனர். ஆனால் மன்னருக்கெல்லாம் மன்னர் ஸ்ரீ இராமர். அவரது பிறந்த நாளில் நாம் விரதம் அனுஷ்டிக்கிறோம்.
முழுமுதற் கடவுளின் மூல ரூபம் கிருஷ்ணர், அவர்தன்னை இராமர் உட்பட பல்வேறு ரூபங்களில் விரிவுபடுத்துகிறார்.
அத்வைதம் அச்யுதம் அனாதிம் அனந்த ரூபம் (பிரம்ம சம்ஹிதை 5.33.)
எனவேதான், பகவானின் அவதாரங்களை கணக்கிடவே முடியாது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. ஆனால் மிக முக்கிய அவதாரங்களின் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இராமபிரானின் அவதாரமும் அவற்றுள் ஒன்று.
அத்தகையவரேஇராவணனின் வதத்திற்கு பிறகு அவனது தம்பியை இலங்கையின் அரியணையில் ஏற்றினார் இராமர். இலங்கையை கைப்பற்றுவதற்காக இராமர் அங்குச் செல்லவில்லை . இராவணனை தண்டிப்பதற்காகவே அங்குச் சென்றார். தனது பக்தனான விபீஷணனை அரசனாக்கிவிட்டு தன் மனைவி சீதையுடன் அவர் நாடு திரும்பினார். பதினான்கு வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பிய இராமர், அயோத்தியின் அரசராக நியமிக்கப்பட்டார்.
இராம இராஜ்ஜியம்
ஸ்ரீ இராமரின் சரிதம் ஒரு சிறந்த வரலாறு. இராமபிரான் ஒரு ' சிறந்த முன்னுதாரணம், மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்று மக்களுக்கு போதிப்பதற்காகவே அவர் தோன்றினார். அதனால் நல்ல அரசாங்கத்திற்கு, இராமரின் அரசாங்கம் உதாரணமாக கொடுக்கப்படுகிறது. இராம இராஜ்ஜியம், இராமபிரானின் ஆட்சியில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
அப்பொதெல்லாம் நீதிமன்றம் என்று தனியாக ஏதும் கிடையாது. மன்னர் ராஜசபையில் அனைவரின் முன்னிலையில் அமர்ந்திருப்பார். யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால், அவர்கள் மன்னரை நேரடியாக அணுகலாம்.
நடைமுறையில், யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை . அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். சிறு பிரச்சனைகள் எப்போதாவது வரலாம். இயற்கைக்கு முரண்பட்ட விஷயங்கள் ஏதும் பொதுவாக நடக்காது, அதிகமான வெப்பமோ குளிரோ வந்தால் அதற்கு அரசரே பொறுப்பாளியாவார்.
ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து இதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், மன்னருக்கு பொறுப்புகள் அதிகம், பிரஜைகளின் மகிழ்ச்சியைப் பற்றியே எப்போதும் மன்னர்கள் நினைத்துக் கொண்டிருப்பர். பிரஜைகளும் மிகவும் நல்லவர்களாக இருந்தனர்.
இராம லீலைகளைக் கேட்பதன் பலன்
பலன் இராமபிரானின் லீலைகளை கேட்பதன் மூலம் அவருடன் நாம் தொடர்பு கொள்கிறோம். இராமருக்கும், அவரது நாமம், ரூபம், மற்றும் லீலைகளுக்கும் எந்த பேதமும் இல்லை; ஏனெனில், அவர் பூரணமானவர்,
நீங்கள் இராம நாமத்தை ஜெபிக்கலாம், அவரது விக்ரஹத்தை தரிசிக்கலாம், அல்லது அவரது லீலைகளைப் பற்றி பேசலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் பகவானுடன் தொடர்பு கொள்கிறோம்.
பகவானின் அவதாரங்கள் தோன்றிய தினங்களில், அவரைப் பற்றிக் கேட்பதன் மூலம் அவருடன் தொடர்பு கொள்கிறோம், அதனால் நாம் தூய்மைபடுத்தப்படுகிறோம். நமது வழிமுறை தூய்மைப்படுத்துவதாகும்.
பிறப்பினால் அனைவருமே சூத்திரர்கள். சூத்திரர் என்றால் எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள், சிறிதளவு இழப்போ துன்பமோ வந்தாலும் அவர்கள் வருத்தப்படுவர்.
கலௌ ஸூத்ர ஸம்பவ,
கலி யுகத்தில் அனைத்து மக்களும் சூத்திரர்களே, பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே. புனிதப்படுத்தும் சடங்குகளோ பயிற்சிகளோ தற்போது இல்லை. எப்படி பணம் சம்பாதிப்பது, புலனுகர்ச்சியை அடைவது என்பதற்குத்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால் சிறந்த வேத கலாசாரத்தில் நாம் நமது மனித வாழ்க்கையை வெற்றி கர மாக்கலாம். கிருஷ்ண உணர்வை பரப்புவதன் மூலமும் , அனுஷ்டிப்பதன் மூலமும் அந்த இனிய கலா சாரத்தை மீண்டும் புதுப்பிக்கலாம். அனைத்து மக்களும் இதனை ஏற்றுக்கொள்ளாவிடினும், இவ்வழியை ஏற்றுக் கொள்பவர்கள், சமுதாயத்தில் சிறந்த முன்னுதாரணமாக இருப்பர், அதன் மூலம் அனைவரும் பயன் பெறலாம்.