கோபாலன்/கிருஷ்ணன் பெயரைச் சொன்னாலே பிறவி பெருங்கடலை கடக்கலாம்
கோபாலன்/கிருஷ்ணன்
கிருஷ்ணர் தான் அவதாரம் எடுக்கின்ற பொழுது அவர் எந்த குலத்தில் வேண்டுமானாலும் தோன்றி இருக்கலாம்
ஆனால் அவர் இடையர் குலத்தில் தோன்றினார்.
அதனால் அவருக்கு கோபாலன் என்று பெயர்,
இடையர்கள் என்பவர்கள் மாடு மேய்ப்பது தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள்,
அவர்கள் பசுக்களை தெய்வமாக மதிப்பவர்கள்
உயர்ந்தஒன்றை குறிப்பதாக இருந்தாலும் கோ என்று தான் கூறுவார்கள்
கோ என்றால் பசு
தன்னுடைய பால பருவத்தில் அதாவது இளமை பருவத்தில் பசுவை மேய்த்ததால் கிருஷ்ணன் கோபாலன் பெயர் பெற்றார்.
கோபாலன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணருடைய செயல்கள் அனைத்தும் தெய்வீகமானது.
ஒருவர் கிருஷ்ணரை புரிந்துகொண்டார் அவர் இறந்த பின்பு மீண்டும் பிறவி எடுப்பது இல்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார்
என்னை புரிந்து கொண்டவன் இறக்கின்ற பொழுது என்னையே நினைக்கின்றான் அதனால் அவன் என்னையே அடைகின்றான் என்று கிருஷ்ணர் கூறுகிறார்
ஆகவே கிருஷ்ணரை அனைவரும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்
அதற்கு கிருஷ்ணரைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்
கிருஷ்ண கதைகளை கேட்க வேண்டும்
ஸ்ரீமத் பாகவதம் மகாபாரதம் மேதை இலக்கியங்களைக் கற்க வேண்டும்.
அல்லது பரம்பரை வாயிலாக வந்த கிருஷ்ண பக்தர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
நாம் வாழுகின்ற இந்த பூமி துன்ப மயமானது என்பதுதான் உண்மை
ஆனால் இங்கு நாம் இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறோம்
இந்த உலகத்தில் நான் இளமையாகவே வாழவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்
ஆனால் முதுமை நோய் போன்ற வேதனைகளில் சிக்கித் தவிக்கிறோம்
இதிலிருந்து நாம் வெளியேற நினைக்கின்றோம்
ஆனால் முடியவில்லை
இதுதான் நம்மளுடைய உண்மையான நிலை
இதை யாரும் மறுக்க முடியாது
உதாரணமாக இன்னும் 20 ஆயிரம் சம்பாதிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
இதற்குல் நம்மால் வாழ முடியும்
இருந்தும் நமக்கு சில தேவைகள் ஏற்படுகிறது.
அதனால் மேலும் சம்பாதிக்க கஷ்டப்படுகிறோம்.
சம்பாதித்த பின்பு எதற்காக ஆசைப்பட்டோம் அது நிறைவேறி விடுகிறது
ஆனால் நம் ஆசை அதோடு நிற்பதில்லை
மேலும் ஆசைப்படுகிறது
இந்த ஆசையை நிறைவேற்ற
அதற்காக சம்பாதிக்க மேலும் உழைக்கிறோம்
அதனால் மேலும் துன்பப்படுகிறோம்
நாம் இதில் திருப்தி அடைவதில்லை
இது இந்த உலகத்தின் நீதி
இதில் இருந்து தப்பிப்பதற்கு தான் கிருஷ்ணரைப் பற்றிய அறிவு நமக்கு தேவைப்படுகிறது.
ஒருவன் தான் இறக்கும் தருவாயில் கிருஷ்ண நாமத்தை சொல்லுகிறான் என்றால் அவன் பிறவிப் பெருங்கடலை கடந்து விடுவான் என்பது தான் உண்மை
ஆனால் கிருஷ்ணன் என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் முதலில்
கிருஷ்ணர் என்று ஒருவன் சொல்லுகின்ற பொழுது கிருஷ்ணருடைய செயல்கள் அவனுக்கு நினைவுக்கு வர வேண்டும்
கிருஷ்ணருடைய அற்புதமான அந்தத் தோற்றம் நினைவுக்கு வரவேண்டும்
கிருஷ்ணருடைய பக்தர்களைப் பற்றி அவன் அறிந்திருக்க வேண்டும்
இதையெல்லாம் எப்படி அறிந்து கொள்வது என்ற கேள்வி அவனுக்கு வரவேண்டும்
அந்தக் கேள்வி அவனுக்கு வருகின்ற பொழுது நிச்சயம் அவன் பக்தனை தேடுவான்
அவனுக்கு பக்தனின் உறவு நிச்சயம் கிடைக்கும்
பக்தனின் உறவு கிடைத்தால் கிருஷ்ணருடைய செயல்களும் அவரைப்பற்றிய தோற்றமும் நிச்சயம் அவனுக்குத் தெரியும்
இவற்றை அவன் அறிந்து கொண்டாலே இந்த உலகத்திலேயே அவன் உயர்ந்த மனிதனாகவும் உண்மையை உணர்ந்த உயர்ந்த ஜீவனாக அவன் மாறிவிடுவான்
இதை உணர்ந்த மனிதன் தனது இறுதி காலத்தில் தன் உடலை விடுகின்ற பொழுது கிருஷ்ண உணர்வில் அவன் இருப்பதனால் கிருஷ்ணரை அடைகின்றான்.