கொரோனவும் பிரபுலாசந்திரராயும்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
இவர்தான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கண்டு பிடித்த இந்தியன்.
உலக நாடுகள் இன்று இந்தியாவிடம் வேண்டி நிற்கும் ஹைட்ராக்சி குளோரோகுயின்மருந்தை கண்டு பிடித்த இவர் ஒரு இந்தியன் சயன்டிஸ்ட்.
இவர் ஒரு வங்கக்கல்வியாளர். வேதியியலாளர்.சமூக சேவையாளர்.
ஆயுர்வேத மருந்துகள் பற்றி ஆய்வுகள் செய்தவர்.
லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்.
இந்திய வேதியியல் கழகத்தை தொடங்கியவர்.
இந்திய விடுதலைப்போரில் பங்கு கொண்டவர்.
பாதரச நைட்ரைடு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தை கண்டு பிடித்தவர்.
1989 ல் இருந்து இவர் பெயரில் பி.சி.ரே விருது சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
ஆச்சார்யா பிரபுல்ல சந்திர கல்லூரி,ஆச்சார்யா பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவை வங்கதேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவு கூறுகின்றன
இந்த மருந்தைப் பற்றிய சில குறிப்புகள்
பெரு நாட்டில் வைசிராய் இறந்தவரின் மனைவி கடும் காய்ச்சல் மிகவும் பாதிக்கப்பட்டார்.அப்போது ஒரு மூலிகை வைத்தியர் அவரை குணப்படுத்த ஒரு மரத்தின் பட்டையை எடுத்து அதில் மருந்தை தயார் செய்து அந்த காய்ச்சலை குணப்படுத்தலாம் என்று அவர் கூறியதுடன் அவர் தயாரித்த மருந்தின் மூலம் அந்த காய்ச்சலையும் குணப்படுத்தினார்.
அவர் குணப்படுத்திய அந்த மூலிகை மரமானது சின்கோன் என்ற இடத்தில் இருந்தது அதனால் அந்த மரத்தினை சிங்கோனா மரம் என்றும் காய்ச்சலை குணப்படுத்த கூடிய மரம் என்றும் பெயர் பெற்றது.
பின்னாளில் அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அந்த மரத்தில் குயினைன் என்ற மூலக்கூறு இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பிறகு குயிநைன் மூலக்கூறில் இருந்து குளோரோக்குயிநைன் என்ற மருந்தை கண்டுபிடித்தனர்.
குளோரோ குயினைன் மருந்து இரண்டாம் உலகப்போரின்போது நிறைய போர் வீரர்கள் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது.
அதுமட்டுமன்றி இந்த மருந்து முடக்கு வாதம் மூட்டு வலி தோல்நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்துவதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு மேலும் சில நோய்களுக்கும் சிகிச்சைகளுக்கும் இந்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட உலக மக்களையும் இது காப்பாற்றும் என்று நம்புகின்றனர். ஒரு இந்தியர் கண்டு பிடித்த இந்த வைரஸை எதிர்க்கும் மருந்து இன்று உலகை காப்பாற்றுவது நினைத்து நாம் பெருமை கொள்வோம்