திராவிடமும் தமிழ் தாய் வாழ்த்தும்
தமிழறிஞர் பேராசிரியர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களுக்கும் திராவிடத்தின் தமிழ்மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு .
1970ம் ஆண்டு தமிழ்நாடு அரசு "தமிழ்தாய் வாழ்த்து" பாடல் என்று ஒரு பாடலை எற்றது, அந்த பாடல், தமிழறிஞர் பேராசிரியர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களுடையது, அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது,என்பதும் உண்மையே, அப்பாடல் இரண்டும் உள்ளன .
ராருங் கடலுடுத்த
நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும்
தரித்தநறு திலகமுமே
அத்திலக வாசனைப்போல்
அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்தபெருந் தமிழிணங்கே தமிழிணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே
(“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”)
ஆசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இவர் தனது இளவயதிலே எழுத்துப் பணியில் அதிக ஈடுபாடு உடையவா், 1855ம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஆலப்புழையில் பிறந்தார், தந்தையின் பெயர் பெருமாள் பிள்ளை, தாயாரின் பெயர் மாடத்தி அம்மாள்,
இவர் திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் தத்துவம் படித்தார் அதே கல்லூரியில் பேராசிரியராகவும் வேலையில் அமர்ந்தார், பிறகு திருநெல்வேலியில் உள்ள இந்துக்கல்லூரி இந்து கலாசாலை ஆக இருந்த பொழுது ஆங்கிலேயர் ஆட்சியில் அதன் முதல்வராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்,
அவன் தத்துவத்தில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் தத்துவம் பயின்று உள்ளதாலும் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்பு மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.தமிழ் பக்தி இலக்கிய பெரியோர்களிடம் தொடர்பு வைத்திருந்தார். ஆங்கிலேய ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் நம்பிக்கை உடை யவராகவும் இருந்தார் .
இந்தக் காலகட்டத்தில்தான் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய ஆங்கில ஆய்வாளர்கள் உடன் தொடர்புகள் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட சிந்தனைகளாலும் திராவிடம் ஆரியம் போன்ற ஆய்வுகள் சம்பந்தமான கருத்துக்கள் வெளிப்பட ஆரம்பித்தன, வட இந்தியா தென்னிந்தியா போன்ற கருத்துக்கள் மக்கள் மனதிலே சிந்தனை மாற்றத்தை வலுவாக உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது,
இந்தியாவில் பக்தி இலக்கியங்களைப் பற்றி அதிக ஆய்வுகளை மேற்கொள்ளாத அறிந்திராத வெளிநாட்டவர்களின் தமிழ் ஆய்வு கட்டுரைகள் தமிழர்களிடையே தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் மற்றும் பிற மொழி மக்களிடையே சிந்தனை மாற்றத்தை உருவாக்கியது, தமிழ் பக்தி இலக்கியங்கள் அவற்றின் காலகட்டங்கள் பற்றிய கணிப்புகளும் இந்த காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டன, இப்படி உருவாக்கப்பட்ட கருத்துகள் இந்திய மக்களை பாதித்தது, அது பின்னர் அரசியலிலும் புகுந்து, தமிழக அரசியலில் இன்றுவரை அந்த வெளிநாட்டவர்களின் கலப்பு சிந்தனையில் இருந்து வெளிவர முடியாமல் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கிறது.
1897இல் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் மறைந்தார்.