மாடும் அகத்திகீரையும்
பசுக்களுக்கு அகத்திக் கீரை கொடுத்து வணங்குதல் விசேஷமான பலனைத் தரும்
மாடுகளுக்கு தினமும் கொஞ்சம் விஷம் கொடுத்து ஆராய்ச்சி செய்தார்களாம் விஷம் கொடுக்கப்பட்ட மாடுகளின் பாலிலே அந்த விஷம் கலந்து வரவில்லையாம்.
ஏனென்றால் மாடுகள் விஷத்தை தனியே பிரித்து கழுத்திலேயே தங்க வைத்துக்கொள்கிறதாம் வயிற்றுக்கு அனுப்புவதில்லையாம்,
மேருமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலைக் கடைந்த போது காமதேனுவும் மஹாலக்ஷ்மியும் வந்தார்களாம் அப்படியே வாசுகி என்னும் பாம்பை இரு புறமும் தேவர்களும் அசுரர்களும் பற்றிக் கொண்டு இழுத்துக் கடைந்த போது வாசுகி வெளியிட்ட விஷத்தை பரமசிவம் உண்டார் பார்வதி அவர் கழுத்தைப் பிடித்தாள் அதனால் விஷத்தை கண்டத்திலேயே வைத்துக் கொன்டதால் நீல கண்டன் என்று பெயர் பெற்றாராம்
இப்படி மாடுகள் கழுத்திலே தேங்கியிருக்கும் விஷத்தை முறிக்கத்தான் அகத்திக் கீரையை மாடுகளுக்கு கொடுக்கும் வழக்கம் வந்ததாம்
அகத்தியர் பாடிய பாடல்:
மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு
அகத்தில் இருக்கும் விஷத்தையும் சூட்டையும் தணிக்கும் கீரை அகத்திக் கீரை அதனால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்