ராகு கேது கிரகங்கள் பற்றிய சில ரகசியங்கள்,
ராகு கேது பாம்பு என்று பொதுவாக கூறுவோம் ,
பகவான் விஷ்ணு பாம்பு என்ற படுக்கையில் படுத்து இருப்பதாகவும் நாம் அறிவோம்,
பொதுவாக படைப்பிற்கும் பாம்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு,
பாம்புகள் இல்லாத இடம் என்று எதையும் சொல்ல முடியாது,
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்,
பூமியில் பாம்புகள் இருப்பது போல் எல்லா உலகங்களும் பாம்பு உண்டு,
பாம்பை சிவன் கழுத்தில் அணிந்து இருப்பார் என்பதும் அறிந்த ஒன்றே,
பாம்பை கண்டு மனிதன் பயந்தாலும் பாம்பு தான் மனிதர்களைக் கண்டு பயந்து இருக்கிறது,
பாம்பு ஒரு விலங்கு என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம், இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் காரணம் இருக்கின்றது,
இயக்கங்களை பார்த்திருப்பீர்கள் இந்தப் பாம்பு கால்கள் கிடையாது அதே நேரத்தில் அதிவேகமாக நிலத்தில் ஊர்ந்து செல்லக்கூடிய ஒரு விலங்கு வளைந்து வளைந்து செல்லக்கூடியது, பாம்பு செல்லும்போது நாம் கவனித்தால் பாம்புத் தலை சென்ற இடத்தில் உடலும் செல்லும் அதே நேரத்தில் அந்த இடத்தில் வாழும் சென்று மறைந்து விடும் அதனுடைய இயக்கம் முன் வவைத் தொடர்ந்து பின் வளைவும் சென்று இடத்தை கடக்கும்,
பாம்புகள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டது என்று கூறுவார்கள் அந்தப் பாம்பின் சக்திக்கு ஏற்ப அதாவது அதன் வளர்ச்சி அனுபவத்திற்கு ஏற்ப அறிவும் உண்டு என்று கூறுவார்கள் அதேபோல எதிரிகளை ஞாபகத்தில் வைத்திருக்கும் சக்தியும் அதற்கு உண்டு என்று கூறுவார்கள், விவசாயிகளின் காவலனாக கூறப்படும் இந்த பாம்புகள் விவசாயத்திற்கு பலவகைகளில் நன்மைகள் செய்கின்றன , இந்தப் பாம்பு ஜோதிட சாஸ்திரத்திலும் ஒரு உயர்ந்த உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது,
ஜோதிடத்தில் பாம்பு என்று கூறப்படும் ராகு கேதுக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அந்த ராகு கேதுக்களை பற்றிய புராணக் கதைகளும் உண்டு அந்த அவதார கதைகளை தெரிந்து கொண்டு மேற்கொண்டு தொடர்வோம்,
ஒரு முறை ஒருமுறை துர்வாச முனிவர் அவரை அனைவரும் அறிந்து அறிந்த அவர் ஆனால் மிகவும் நல்லவர் அவர் ஒரு முறை கயிலாயம் சென்று சிவபெருமான் மற்றும் அம்பிகையை தரிசித்து விட்டு வந்து கொண்டிருந்தார், அப்போது தனக்கு அளிக்கப்பட்ட மலர் மாலையை இந்திரனுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்து கொண்டிருந்தார், வரும் வழியில் தற்செயலாக இந்திரனும் தனது ஐராவதம் யானையின் மீது அமர்ந்தபடி எதிரே வந்துகொண்டிருந்தார், துர்வாச முனிவரை பார்த்த இந்திரன் எல்லோரையும் போல அவனையும் பார்த்தபடி யானையில் இருந்தபடியே வணக்கம் செலுத்தினார்,
துர்வாச முனிவர் இந்திரன் இறங்கி மரியாதை தரவில்லை என்று தெரிந்திருந்தும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை, தனக்கு அம்பிகை தந்த அந்த மலர் மாலையை இந்திரனுக்கும் வழங்கினார், ஆனால் இந்திரனோ அதை ஒரு பெரும் பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை, அந்த மலர் மாலையை அங்குசத்தால் வாங்கி அதனை யானை மீது போட்டான், ஐராவத யானையின் மேல் போட்டுவிட்டு சென்று கொண்டு இருந்தான், அந்த ஐராவதம் யானை அந்த மாலை இதனை எடுத்து தூரே வீசியது, பார்த்த துரோணர் அதிகம் கோபமடைந்தார், இந்திரன் தன்னையும் மதிக்காமல் தான் வழங்கிய அம்பிகையின் மாலையையும் மதிக்காமல் அலட்சியம் செய்து விட்டது அவர் மனதை மிகவும் புண்படுத்தியது இதனால் ஏற்பட்ட கோபத்தினால் இந்திரனை சபித்தார், இந்திர பதவியின் செருக்கினால் தன்னை அவமானப்படுத்திய இந்திரனை இந்திர பதவியை இல்லாமல் போகும்படி சபித்தார்,
அவருடைய சாபமும் உடனே பலித்தது இந்திர பதவி அசுரர்கள் கைப்பற்றினர், பதவியை இழந்த இந்திரன் அசுரர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்து மறைந்து வாழ்ந்து வந்தான், மீண்டும் தன் பதவியைப் பெறுவதற்காக இந்திரன் விநாயகரை வேண்டினார், விநாயகர் முருகக் கடவுளை பார்க்கும்படி அனுப்பி வைத்தார், முருகன் சக்தி தேவியிடம் அனுப்பிவைத்தார், சக்தி தேவி சிவனிடம் வேண்டுமாறு கூறினாள், சிவன் விஷ்ணுவிடம் குறையை கூறும்படி இந்திரனுக்கு வழிகாட்டினார், கடைசியாக நாராயணன் இந்திரனுக்கு ஆறுதல் கூறி அசுரர்களை நீங்கள் வெல்ல வேண்டுமானால் உங்களுக்கு நல்ல ஆயுள் பலம் வேண்டும், அதற்கு நீங்கள் முதலில் பாற்கடலை கடையும் அதில் அமிர்தம் வெளிப்படும் அதை உண்டு உங்கள் ஆயுளை திடப்படுத்திக் கொள்ளுங்கள், பிறகு அவர்களுடன் யுத்தம் செய்து வெற்றி பெறலாம் என்று ஆலோசனை கூறினார், ஆனால் பாற்கடலில் எப்படி கடைவது அதற்கு விஷ்ணுவே ஆவன செய்தார், மந்திர மலையை மத்து வைத்துக்கொண்டு வாசுகி என்ற பாம்பை கையில் வைத்துக்கொண்டு கடைவதற்கு முடிவுசெய்து தேவர்கள் ஒரு புறமாகவும் அசுரர்கள் ஒரு புறமாகவும் பாற்கடலை கடைந்தனர், பாற்கடலில் பல அறிய பொக்கிஷங்கள் வெளிப்பட்டன அதில் ஆலகால விஷமும் வந்தது அமிர்தமும் வந்தது, ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார், அமிர்தத்தை தேவர்கள் எடுத்துக் கொள்ள முற்பட்டபோது அதனை அசுரர்கள் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டனர், ஏமாற்றம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவை மீண்டும் சரணடைந்தனர், விஷ்ணு மோகினி என்ற அழகிய பெண் உருவத்தை எடுத்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு தாமிரத்தை வழங்கினார், மோகினி நம்மை ஏமாற்றி விடுவாள் என்பதை உணர்ந்த சுவர்ண கேது என்ற அசுரன் தேவர்கள் வரிசையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நின்று கொண்டு அமிர்தத்தை உண்டு விட்டார், உண்ட பின்பு அறிந்த மோகினி ஆகிய விஷ்ணு தன் சக்கராயுதத்தால் சுவர்ண கேது தலையை துண்டித்தார், அமிர்தத்தை உண்டு விட்டதால் தலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்டும, மரணம் ஏற்படாமல் இரண்டு உருவங்களாக உடல் பெற்றனர் உடம்பு ராகுவாகும் தலை கேதுவாகும் வாழ பெற்றனர், தேவர்களுக்கு கூட்டத்தில் இவர்களுக்கு என்று இடமில்லாததால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் மறைந்து செயல்படும் கிரகமாக மாறினர், இவர்கள் அசுரர்களாக இருப்பதனால் சூரிய சந்திர சுற்றின்போது அவற்றின் தன்மையை குறைத்தன இப்படி கிரக தன்மையை புகைப்பதனால் பாவ கிரகங்களோடு சூரியன் சேருகின்றது உயர் பலனையும் போக வாழ்க்கையும் மகிழ்கின்றனர், அதேவேளை சுபக்கிரகங்கள் ஓடு சேர் இருந்தபொழுது அதன் தன்மையை குறைத்தும் அதேவேளையில் ஞானத்தையும் வழங்குகின்றன,
இந்த ராகு கேதுக்களுக்கு எப்படி பாம்பின் உருவம் வந்தது கிரக செயல்பாடுகளில் எப்படி செயல்படுகின்றன என்பதனை தொடர்ந்து பார்ப்போம்,