திருமணத்தில் அக்னியை சுற்றி 7 அடி நடப்பதில் உள்ள அறிவியல்

திருமணத்தின் போது மணமக்கள் அக்னியை சுற்றி ஏழு அடிகள்  நடப்பார்கள். 


 சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது இறைவன் துணையிருப்பான் என்று வேண்டுதலை சமர்ப்பிப்பது ஆகும்.



அந்த ஏழு அடிகள்:


 


 "முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"


 


 "இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"


 


 "மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"


 


 "நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"


 


 "ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"


 


 "ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"


 


 "ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"


 


 இது இந்து தர்மத்தில் நம்பிக்கை சார்ந்த ஒரு சடங்கு ஆகும்


 


 இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது  சமூக அறிவியல்..உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.


 


 இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு  அனுபவ உண்மை.


 


 இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து "நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு  முக்கிய சடங்காக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மனோவியல்விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்