நவகிரகங்களில் ராகு கேதுவி்ன் முக்கியம்
ராகு கேதுவின் நிலைபாடு,
என்னதான் பிற கிரகங்கள் வலுப்பெற்று இருந்தாலும் ராகு-கேதுக்கள் அவசியம் தேவைப்படுகின்றது.
உதாரணமாக இனம் சமையல் செய்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம் அப்போது நெருப்பை அவசியம் தேவைப்படுகிறது சில நேரங்களில் நெருப்பைக் குறைத்து வைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு தேவைப்படுது நெருப்பானது அதிகமாக இருந்தாலும் அது நமக்கு பயன்படாது அப்போது அதன் தன்மையை குறைப்பதற்கு சில உபாயங்கள் தேவைப்படுகின்றன. இந்த தேவையைத் தான் கிரகங்களுக்கு மத்தியில் மற்ற கிரகங்களின் தன்மைகளை ராகு கேதுக்கள் குறைத்து கொடுக்கின்றன.
இப்படி குறைத்துக் கொள்கின்ற ராகு-கேதுக்கள் நல்ல கிரகங்களோடு சேர்ந்தார் என்றாலும் இடத்தில் இருந்தாலும் அவற்றின் தன்மையை குறைப்பார்கள். அதைபோல பாவ கிரகங்களோடு சேர்ந்தால் என்றாலும் பாவத்தை கொடுக்கும் இடத்தில் இருந்தாலும் அவற்றின் தன்மைகளையும் இந்த ராகு கேதுக்கள் குறைப்பார்கள் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ராகு பெண் தன்மையும் கேது அலி தன்மையும் தருகிறது வடிவம் என்று எடுத்துக்கொண்டால் ராசு உயரமானவை குறிக்கின்றது சேது குள்ளமானவர் என்பதை குறிக்கிறது மொழி என்று எடுத்துக் கொண்டோமானால் கேது இருவருமே இனிய மொழியின் தன்மை தருகின்றன. நிறம் என்று எடுத்துக் கொண்டோமானால் ராகு கருப்பு நிறமும் கேது சிவப்பு நிறமும் பெறுகின்றனர் ஜாதி என்று எடுத்துக்கொண்டால் இருவரும் கலப்பு இனத்தை குறிக்கின்றது குணம் என்று எடுத்துக் கொண்டோமானால் இருவருமே குருர குணம் உடையவர்கள் தான். கேது இருவருமே பித்தம் என்ற நோய்க்கு காரணமாகின்றன திசை எடுத்துக் கொண்டோமானால் தென் மேற்கு திசையும் கேது வடமேற்கு திசையும் ஆதிக்கம் செலுத்துகின்றன நவரத்தினம் என்று எடுத்துக் கொண்டோமானால் ராகு கோமேதகத்தை உரியவராகவும் கேது வைடூரியம் உரியவராகவும் இருக்கின்றனர். என்று எடுத்துக் கொண்டோமானால் உளுந்து என்ற தானியத்திற்கு ம் கேது கொள்ளு என்ற தானிய உடைமை பெறுகின்றனர். மலர் இன்று எடுத்துக் கொண்டோமானால் ராகு மந்தாரை மலர் கேது செவ்வல்லி மலர் ஆதிபத்தியம் பெறுகின்றனர். ராகுவின் கிரக தேவதை பத்திரகாளி கேதுவின் கிரக தேவதை இந்திரன்,
ராகு கேது இருவருக்கும் விருச்சிகம் உச்ச வீடு, ரிஷபம் நீச வீடு, இருவருக்கும் ஆட்சி வீடு கிடையாது இருவருமே மனித உடலில் முழங்கால் பகுதிக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர், ராகுவின் நட்சத்திரம் திருவாதிரை சுவாதி சதயம், கேதுவின் நட்சத்திரம் அஸ்வினி மகம் மூலம் இந்த நட்சத்திரங்களின் தன்மையை இவர்கள் பெறுவார்கள், ஜோதிடத்தில் இவர்களுக்கு காலம் என்று எடுத்துக் கொள்வோமானால் ராகுவிற்கு ராகு காலம் கேதுவிற்கு எமகண்டம்