பலிச்சக்கரவர்த்தி
பொதுவாக கெட்டவர்கள் என்று யாரும் பிறப்பதில்லை.
பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்களே, நல்லவர்கள் வழி மாறுகின்ற பொழுது அதர்ம வழியை பின்பற்றுகின்ற பொழுது கெட்டவர்களாக மாறுகிறார்கள், அப்படி அவர்கள் மாறுவதற்கு காரணம் அவர்களுடைய சுயநலம், சுயநலத்திற்காக காரணம் தங்கள் மீது, தங்களை சார்ந்த குடும்பத்தின் மீது, தங்கள் சமூகத்தின் மீது, தங்கள் நாட்டின் மீது, தனிப்பட்ட பற்றுதல் வருகின்ற பொழுது அவர்கள் வழி மாறுகிறார்கள். அப்படி வருகின்ற பொழுது அவர்கள் தங்களுடைய நல்ல குணத்தை இழக்கிறார்கள் அதனால் அவர்கள் கெட்டவர்களாக மாறுகிறார்கள்.
இவர்கள் கெட்டவர்களாக மாறுவதால் இவர்களுடன் தொடர்புடைய நல்லவர்கள் இவர்கள் மீது கருணை கொண்டாலும் அவர்கள் மீது இவர்கள் வெறுப்பு கொள்கிறார்கள் மட்டுமன்றி அவர்களை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். இதனால் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் வருகின்றன.
இது ஒருபுறமிருக்க காலச் சூழ்நிலையில் கெட்டவர்கள் நல்லவர்கள் ஆகவும் நல்லவர்கள் கெட்டவர்களாகவும் தெரிய ஆரம்பிக்கிறார்கள். இதனாலும் கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு அதனால் யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற மோதல்கள் வருவதுண்டு. இந்த இருமுனை இயக்கங்கள் தவிர்க்க முடியாதவை ஆகவே இருக்கின்றது ஏனென்றால் படைப்பின் தத்துவமே அப்படித்தான் இருக்கின்றது. இதைப் புரிந்து கொண்டவர்கள் தங்களை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள், புரியாதவர்கள் எதிர்த்து போராடுகிறார்கள்.
இதற்கு நம் பண்பாட்டு கருத்தியல் ஒன்றை கூறுகிறேன்.
அசுர குலத்தைச் சேர்ந்த அரசியலில் ஆர்வம் இல்லாத விஷ்ணுவின் மீது மாறாத பக்தி செலுத்தி வந்த பக்த பிரகலாதன் உடைய வம்சாவளியைச் சேர்ந்த பலிச்சக்கரவர்த்தி என்ற ஒரு அசுரன் மன்னன் ஆண்டு வந்தான் இவன் திறம்பட ஆட்சியை நடத்தி வந்தார் இவனுடைய ஆட்சிக் காலத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் தேவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால் இவன் கைப்பற்றியதை அவர்களுடைய ராஜ்யத்தை தான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தும், மகிழ்ச்சியின்றி மறைந்து வாழ்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். அவர்கள் சொல்வதில் சிறிது தருமம் இருக்கவே விஷ்ணுவும் அவர்களைக் காப்பாற்றுவதாக ஆட்சியை மீட்டுத் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்,
ஆனால் பலிச்சக்கரவர்த்தி வேத முறைப்படி மக்களை சிறப்பாக ஆட்சி செய்து வருவதை பார்த்த விஷ்ணு அவனை தண்டிக்க விரும்பவில்லை சிறப்பாக ஆட்சி செய்யும் பலிச்சக்கரவர்த்தி இடமிருந்து வன்முறையால் ஆட்சியை பறிக்க விஷ்ணு விரும்பவில்லை ஆகவே அதற்கு அவர் ஒரு உபாயம் செய்தார், அந்த அபாயத்தின் படி ஒரு ஏழை பிராமணராக பிறந்து குள்ள பிராமணனாக வளர்ந்து வந்தார்.
பலிச்சக்கரவர்த்தி உலகம் சிறப்பாக இருக்க வேண்டும் இயற்கை தங்குதடையின்றி மக்களுக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி யாகங்கள் செய்கின்ற பழக்கம் உண்டு அப்படி யாகங்கள் செய்கின்ற பொழுது கேட்பவர்களுக்கு இல்லை என்று கொடுக்கின்ற பழக்கம் அவரிடம் உண்டு குறிப்பாக பிராமணர்கள் என்றால் மதிப்பும் மரியாதையும் அதிகம் கொண்டவர், இந்த பிராமண தர்மத்திலிருந்து சிறிதும் விலகாமல் யாக காலங்களில் அவர்கள் கேட்டதை கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்து சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்,
இப்படி யாகம் செய்கின்ற பொழுது தான் ஒரு ஏழை பிராமணனாக பலிச் சக்கரவர்த்தியிடம் யாகம் பூமியில் பிச்சை வேண்டி நின்றார், பலிச்சக்கரவர்த்தி அவர் கேட்பதை கொடுக்க தயாராக இருந்தார் வாக்குறுதியும் கொடுத்தான், அதை பயன்படுத்திக்கொண்ட குள்ள பிராமணனாக வந்த பகவான் விஷ்ணு மூன்றடி நிலத்தை கேட்டார், அப்போது பலி சக்கரவர்த்தியின் குருவான சுக்கிராச்சாரியார் வந்தவர் கள்ள கபடம் மிகுந்த அனைத்தும் உயர்ந்த விஷ்ணு உன் ஒட்டுமொத்த சொத்துக்களையும் பறிக்க வந்திருக்கிறார் வார்த்தைகளை கொடுத்து விட்டாலும் பரவாயில்லை அவர் கேட்பதை கொடுத்து விடாதே என்று சொன்னார், ஆனால் பலிச்சக்கரவர்த்தி தன் குருவின் கட்டளையை விட பிராமணனுக்கு கொடுத்த வாக்குறுதியை உயர்ந்தது என்று தன் குருவின் கட்டளையை இலட்சியம் செய்யாமல் தன் வாக்குறுதியை நிறைவேற்ற ஆயத்தமானார், ஆனால் விஷ்ணுவோ மூன்று அடிகளில் அவனுடைய அனைத்து சொத்துக்களையும் இரண்டடியில் அளந்து விட்டு மூன்றாவது அடி வைக்க இடமின்றி கால்களை தூக்கினார், தன் வாக்கு தான் முக்கியம் என்று அதுவே தர்மம் என்று உறுதியாக இருந்த பலிச்சக்கரவர்த்தி மூன்றாவது காலடி வைப்பதற்கு தன்னுடைய தலையை கொடுத்தார், அப்படி கருடன் தலைகுனிந்தபடி சக்கரவர்த்தி என் தலை மீது கால்களை வைத்த மகாவிஷ்ணு ஆகிய குள்ள பிராமணன் பலிச் சக்கரவர்த்தி ஆண்ட அனைத்து உலகத்தையும் பெற்று தேவர்களுக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தன்முன் தனது கால் வைப்பதற்கு தன் மகுடத்துடன் தலையை குனிந்தபடி சக்கரவர்த்திக்கு பாதாள லோகத்தை ஆட்சி செய்யும்படி பொறுப்புகளை கொடுத்துவிட்டு அங்கே தானே காவலாளியாக நின்று அந்த லோகத்தை காத்து வந்தார் மகாவிஷ்ணு,
அப்படி பலிச்சக்கரவர்த்தி மகாவிஷ்ணு கொடுத்த பாதாள லோகம் எப்படிப்பட்டது என்பதை புரிய வைப்பதற்கு ஒரு சம்பவம் உண்டு.
ஒரு முறை தருமனை பார்ப்பதற்காக கிருஷ்ணர் சென்றார் அப்போது தர்மன் ஏழைகளுக்கு தானம் தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். தான தர்மங்களை முடித்துவிட்டு கிருஷ்ணனை சந்தித்த தர்மர் தான் தினமும் தர்மம் செய்வதை பற்றி மிக சிறப்பாகவும் உயர்வாகவும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார், ஏழைகளுக்கு தர்மம் செய்வதால் நான் மிகவும் உயர்ந்தவனாக இருக்கின்றேன் என்ற ஒரு எண்ணம் அவர் மனதில் இருந்தது, அதனால் தான் சிறந்த மன்னன் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. இந்த கர்வத்தை நேரடியாக சுட்டிக்காட்டு கூடிய நிலையில் கிருஷ்ணர் இருந்தாலும் அதை மறைமுகமாக புரிய வைக்க விரும்பினார், அதற்காக கிருஷ்ணர் தர்மரிடம் நாம் பாதாள லோகம் சென்று வரலாமே என்று தமது விருப்பத்தை கூறினார், தர்மரும் அதற்கு ஒத்துக்கொண்டு அவருடன் பாதாள லோகம் சென்றார், அங்கே பலிச் சக்கரவர்த்தி ஆண்டு வருவதை சற்று விசித்திரமாகப் பார்த்தார்கள் தர்மரும் கிருஷ்ணரும், கிருஷ்ணர் தன் மனதில் தோன்றியது எதையுமே தருமரிடம் காட்டிக்கொள்ளவில்லை ஆனால் தர்மம் இங்கு ஆட்சி நடப்பது போலவே தெரியவில்லை என்று தனக்குள் சிந்தித்துக் கொண்டே சென்றார், ஆனால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் அவரால் காண முடிந்தது,
சில நாட்கள் பலிச்சக்கரவர்த்தி உபசரிப்பில் கிருஷ்ணரும் தர்மரும் இருந்து வந்தார்கள் அப்பொழுது தர்மரின் தினமும் ஏழைகளுக்கு பொருட்களை தானமாக வழங்கும் உயர்ந்த குணத்தையும் அந்த பெருமையையும் உயர்வாக பலிச்சக்கரவர்த்தி க்கு எடுத்துச் சொன்னார் கிருஷ்ணர்,
ஆனால் பலிச் சக்கரவர்த்தியை தருமரை புகழ்ந்து உண்மையில் நீர் உயர்ந்தவர் தான் ஆனால் என் நாட்டிலோ தானம் கொடுத்தாலும் வாங்குவதற்கு ஒரு ஏழைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது நான் மிகவும் வேதனைப்படுகிறேன் என்று மிகவும் தாழ்த்திக்கொண்டு தர்மரிடம் கூறினார்,
இதைக்கேட்ட தர்மர் நம் நாட்டில் ஏழைகள் இருக்கிறார்களே அதற்கு காரணம் நம்முடைய ஆட்சியின் சிறப்பு இன்மையே என்ற உண்மையை புரிந்து மிகவும் வேதனைப்பட்டார், இதனைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் உண்மையான ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக தருமனுக்கு போதித்தார் இன்றைய ஆட்சியாளர்களுக்கு அது புரியுமா?