வாழ்வில் வெற்றி பெற

வாழ்வில் வெற்றி பெற


எங்கிருந்து வேண்டுமானாலும் கிருஷ்ணர் தோன்றலாம், இருப்பினும் அவர் விருஷ்ணி குலத்தை தேர்ந் தெடுத்தார். முதலில், பலராமர் விருஷ்ணி குலத்தில் தோன்ற, பின்னர் கிருஷ்ணர் தோன்றினார். கிருஷ்ணரின் ஒரு பெயர், வார்ஷ்ணேயர்; விருஷ்ணி குலத்தில் தோன்றியதால், கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.  ஆனால் கிருஷ்ணரின் பிறப்பும் செயல்களும் சாதாரணமானவை அல்ல, அவை தெய்வீகமானவை.


ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:. ஒருவர் கிருஷ்ணரை அவ்வாறு புரிந்து கொண்டால், உண்மையாகப் புரிந்து கொண்டால், அதன் விளைவு-த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி-"அவர் தனது தற்போதைய உடலை விட்ட பிறகு, வேறொரு ஜடவுடலை எடுப்பதில்லை." என்று கிருஷ்ணர் கூறுகிறார். மாம் ஏதி, அவர் தன்னிடம் வருவதாகக் கூறுகிறார். அதுவே, வாழ்வின் வெற்றி. நீங்கள் குறைந்தபட்சம், கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தையும் செயல்களையும் புரிந்துகொள்ள முயற்சித்தால் போதும், உங்கள் வாழ்க்கை வெற்றியடையும். வாழ்க்கை வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி தானே வரும்


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்