யோகத்தின் மிக உயர்ந்த நிலை

 பக்தி யோகத்தின் உயர்ந்த நிலை 


இந்த உலகத்தில்  குறிப்பாக இந்தியாவிலும் பல யோகப் பயிற்சிகள் பல உள்ளன அவற்றைப் பற்றி பிறகு விரிவாக பார்க்கலாம்.ஆனால் இந்த யோகப் பயிற்சிகளில் பக்தி யோகமே முக்கியமானதாக கருதப்படுகிறது, பொதுவாக யோகப் பயிற்சிகள் உடல் சார்ந்ததாகவும் மனம் சார்ந்ததாகவும் இவை இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு சார்ந்ததாகும் இந்த உடலும் மனமும் பிரபஞ்சத்தில் தொடர்புபடுத்துவது சம்பந்தமாகவும் அதற்கும் அப்பாற்பட்டு இறைவனுடைய தொடர்பு சம்பந்தப்பட்டதாகவும் மே இருக்கின்றன இதைத்தவிர யோகப்பயிற்சிகள் வேறு எந்த உபயோகமும் கிடையாது.எல்லா யோகப் பயிற்சிகளும் பக்தி யோகத்தில் நிறைவு பெறுகின்றன என்பதுதான் உண்மை.



பக்தி யோகத்தின் முதல் நிலை: 


பொதுவாக எல்லா யோக பயிற்சிகளும் பக்தியோகத்திற்கு வருவதற்கான வழிமுறைகள் பற்றிய செயல்பாடுகள் ஆகும். சுருக்கமாகக் கூறுவோம் ஆயின் மற்ற யோகங்கள் பத்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்று கூறலாம். கருமை யோகத்தில் தொடங்கி பக்தி யோகத்தில் முடியக்கூடிய ஆன்மீக தன்னுணர்வு பாதை மிகவும் நீண்ட பாதையாகும். பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் கர்மயோகம் இப்பாதையில் முதல் நிலையாகும், 


 


ஞான யோகம்:


கர்மயோகம் ஞான நிலைக்கும் துறவு நிலைக்கும் உயர்கின்ற பொழுது ஞான யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது சார்ந்த பயிற்சிகள் ஞான யோகத்திற்கான பயிற்சிகள் ஆகும்


 


அஷ்டாங்க யோகம்:


 ஞானயோகம் ஆனது பல்வேறு அறிவு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு பரமாத்மா மீதான மாறாத நிலைக்கு முன்னேற்றம் அடைகின்ற பொழுது மனம் இறைவன் மீது நிலைபெறுகிறது. இந்த நிலைபாட்டை அடைகின்ற பொழுது அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது.  இது சார்ந்த பயிற்சிகள் அஷ்டாங்க யோகம் சார்ந்த பயிற்சிகள் ஆகும்.


 


பக்தி யோகம்;


 முறையாக அஷ்டாங்க யோகப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று ஒருவன் முழுமுதற்கடவுளான ஆதிஅந்த மற்ற பகவானை அடைகின்ற நிலை அல்லது உறுதி செய்கின்ற நிலை பக்தி யோகம் ஆகும். ஏன் பக்தி யோகத்தை இறுதியானது என்று கூறுகிறோம் என்றால் இறைவனை அடைந்து விட்டோம் அல்லது அந்த நிலையை புரிந்து விட்டோம் அடுத்து நம்முடைய கடமை அவருக்கு சேவை செய்வது மட்டுமே என்ற  நிலைக்கு வந்து விடுகிறோம் வேறு நோக்கம் நமக்கு எதுவும் இருப்பது இல்லை. ஆகையினாலே பக்தி யோகமே உயர்ந்ததாக கருதுகிறோம். இந்த பக்தி யோக நிலைக்கு ஒருவன் வந்துவிட்டால் என்றால் அவள் ஏற்கனவே மற்ற யோகங்களை கடந்து விட்டான் என்று பொருள்படும், அதுதான் உண்மையும் கூட. பக்தி யோகத்திற்கு ஒருவன் வரவேண்டுமென்றால் முயற்சி மட்டும் இருந்தால் போதுமானது அன்று அவன் அதிர்ஷ்டம் செய்தவர் ஆகவும் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த கலியுகத்தில் உண்மைகளை ஏற்றுக் கொள்வது என்பது சாதாரண விஷயம் அன்று. 


 


 இறைவன் யார்:


 இன்று அனைவரிடமும் இருக்கின்ற பலதரப்பட்ட கருத்தே இறைவன் யார் என்பதுதான்.  ஒவ்வொருவரும் அவரவர்கள் அவர் சார்ந்த முன்னோர்கள் குருமார்கள் காட்டிய வழியை நம்பிக்கொண்டு அவர்கள் சொல்லிய  பெயரையும் உருவத்தையும் புத்தகங்களையும் நம்பிக் கொண்டிருக்கின்றனர், அது உண்மையா என்ற கேள்வி அனைவருக்கும் வரும் அதற்கான பதில் அவர்களே அவர்கள் நம்பிக்கை கொண்டு உறுதி செய்துகொள்கிறார்கள். அந்த நம்பிக்கை உண்மைதானா இல்லையா என்பது சரியாக புரியாததால், பலரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப தங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒன்று புரிந்து கொள்ளலாம் பொதுவாக வழிகாட்டிகள் ஒவ்வொருடைய நம்பிக்கையையும் அவர்களது இறை சேவைகளையும் தீர்மானிக்கின்றனர். 


 


கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்:


 முழுமுதற் கடவுள் யார் என்பதை தீர்மானம் செய்யாமல் நாம் செயல்படுவோம் ஆனால் நமது சேவைகள் அனைத்தும், நமது பயிற்சிகள் அனைத்தும் தவறான வழிகாட்டுதலின்படியே செயல்படுகின்றன என்பதுதான் உண்மை.  அப்படியானால் உண்மையான முழுமுதற்கடவுள் யார் என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கின்ற பொழுது, நம் அனைவருக்கும் தெரிந்தது கடவுளைப்பற்றிய செய்திகள், வரலாற்று குறிப்புகள், நம்பிக்கை சார்ந்த குறிப்புகள், மற்றும்  அறிவு சார் மக்களின் கதைகள் கட்டுரைகள், வேதங்கள் போன்றவைகள் நமக்கு கடவுளைப் பற்றிய ஆதாரங்களை கொடுக்கின்றன. இந்த ஆதாரங்கள் வைத்து நாம் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய அரிதினும் அரிதான சக்தி படைத்தவராகவும் செயல்களைச் செய்பவராகவும் குறிப்பிடப்படுகின்ற ஒருவர் கிருஷ்ணர் என்ற நபர் ஆவார். வேறு எந்த கடவுளும்  கிருஷ்ணருக்கு இணையான செயல்களை செய்தவராக எந்த செய்திகளும் குறிப்புகளும் எந்த நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை அதற்கான ஆதாரங்களும் இல்லை கதைகளில் கூட கிடையாது ஆகையினால் கிருஷ்ணர் என்பவர் முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவராவார். அவரே பகவத்கீதையில் தன்னைப்பற்றிய தன்னுடைய படைப்பை பற்றிய அனைத்து செய்திகளையும் விவரித்துள்ளார்.



பக்தி யோகத்தின் இறுதி இலக்கு:


ஒரு சிறந்த யோகி சியாமாசுந்தரர் என்று அறியப்படும் கிருஷ்ணர் மீது தனது மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.  அதாவது அவரது அழகிய நீல வர்ண உடலின் மீதும், அதிக பிரகாசத்துடன் ஒளிரும் முகத்தின் மீதும் பலவித ஆபரணங்களுடன் பிரகாசிக்கும் உடைகளுடன் பலவண்ண பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வராகவும் காட்சியளிப்பவர் கிருஷ்ணர், அவரது உடலிலிருந்து வெளிப்படும் பெயர் ஒளியானது பிரம்ம ஜோதி என்று அழைக்கப்படுகிறது அந்தப் பரம ஜோதி என்ற ஒளியின் மூலம் அவர் எல்லா திசைகளையும் எல்லா பிரபந்தங்களையும் பிரகாசிக்கச் செய்கிறார் என்பதையும் நாம் மனதில்  ஏற்படுத்துதல் வேண்டும். அவர் ராமர், நரசிம்மர், வராகர் போன்ற பலவித தோற்றங்களில் தோன்றுவதாகவும் மனிதர்களைப் போலவும், யசோதை, தேவகி, வசுதேவர் போன்றவர்களுக்கு குழந்தைகளாகவும், சகாத் குழந்தைகளுக்கு நண்பர்களாகவும், பெற்றவராகவும் பிள்ளையாகவும் காதலனாகவும், நண்பனாகவும், சகோதரனாகவும், குருவாகவும் சீடன் ஆகும், இன்னும் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் நித்தியமான காட்சிகளை வழங்குகின்ற மிக உயர்ந்த செயல்களை செய்பவராக நாம் அவரை மனதில் பதிக்க வேண்டும்.  இத்தகு உயர்ந்த பக்குவ நிலையை பக்தி யோகத்தில் மட்டுமே நாம் அடைய முடியும். பக்தி யோகத்தின் இறுதி இலக்கு இதுவே ஆகும். 



Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்