அணுவைப் பற்றிய சில செய்திகள் 

அணுவைப் பற்றிய சில செய்திகள்


அணு என்பது பிரிக்க முடியாத ஒரு பகுதி, விஞ்ஞான அதை பிரித்து அதன் சக்தியையும் உலகுக்கு உணர்த்தி உள்ளனர்இ என்றுவாதிடுவோரும் உண்டு. விஞ்ஞானிகள் பிரிக்கமுடியாத பகுதியைத்தான் அனு என்று சொன்னார்கள் அது பிரிக்க ஆரம்பித்த பின்பு அதைவிட நுண்ணிய பகுதிதான் அணுவாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையில்  நமது வேத இலக்கியங்களில் அணு என்பது மிக மிக நுண்ணிய பிரிக்கமுடியாத ஒரு பகுதி, அந்த அணுவை உணரும் வரை அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.  


அந்த பிரிக்கமுடியாத மிக நுண்ணிய அணுவை கொண்டுதான் மிக நுண்ணிய உயிர்களை முதற்கொண்டு இப்பூமி பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை விஞ்ஞானிகளும் ஆன்மிகவாதிகளும் ஏற்றுக்கொண்டார்கள், 


இந்த அணு மனித கண்களால் பார்க்கக் கூடியது அன்று அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், யாராலும் பிரிக்க முடியாது  உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்பதுதான் உண்மை இதை நம்ம வேத இலக்கியங்கள் உறுதி செய்கின்றன,


 இந்த அணுக்கள் அனைத்தும் ஒன்று போல இருக்கின்றன அவற்றின் தன்மைகளும் ஒன்றுபோல் இருக்கின்றன இவை ஒன்றுடன் ஒன்று சேர்கின்ற பொழுது மாறுபட்ட தோற்றங்களையும் செயல்பாடுகளையும் உருவாக்குகின்றன 


ஒன்றுபோலவே இருக்கின்ற அணுக்கள் மாறுபட்ட பல தோற்றங்களை உருவாக்குகின்றன இதே வழியில்தான் இந்த பிரபஞ்சமும் கட்டமைக்கப்பட்ட இருக்கின்றது ஒவ்வொரு உயிர்களின் உடல்களும் கட்டமைக்கப்பட்ட இருக்கின்றன,


 இந்த அணுக்களின் இணைப்பை உடல்களின் வளர்ச்சியை கணக்கிடுவதன் மூலம் காலத்தையும் கணக்கிட முடியும்,  காலை இயக்கங்களுக்கும் இந்த அணுக்களே காரணமாக இருக்கின்றன, 


 காலம் என்பது அது பரவி இருக்கும் இடத்தையும் அடர்த்தியையும் பொருத்து இருக்கின்றது, காலமும் தூரமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது காலம் என்பது அணுக்கள் தங்கள் இடைவெளியை கடக்கும் நேரம் ஆகும்,  சூரியன் ஒரு அணுவை கடக்க எடுத்துக்கொண்ட நேரமே அந்த அணுவின் காலமாகும்,


 நாம் சாதாரணமாக நமது வீடுகளில் ஜன்னல்வழியாக வீட்டுக்குள் வரும் சூரிய ஒளியில் துகள்கள் பறப்பதை காணலாம்  இது ஆறு அணுக்களின் சேர்க்கை ஆகும், அப்படி என்றால் நீங்கள் அணுவை பற்றி புரிந்து கொள்ளுங்கள்,


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்