இன்பத்திற்காகப் போராடுவதே வாழ்வு
என் வருமானத்தை பெருக்கிக் கொண்டே செல்கிறேன். ஆனால் அந்த துன்பகரமான சூழ்நிலையோ ஒருபோதும் குறைந்தபாடில்லை. பணத்தினால் துன்பம் குறைந்துவிடும் என்றால். கோடீஸ்வரர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால் பணத்தினால் அடையப்படும் பௌதிக வசதிகள் அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவதில்லை.
என் வருமானத்தை பெருக்கிக் கொண்டே செல்கிறேன். ஆனால் துன்பகரமான சூழ்நிலையோ ஒருபோதும் குறைந்தபாடில்லை. பணத்தினால் துன்பம் குறைந்துவிடும் என்றால்கோடீஸ்வரர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால் பணத்தினால் அடையப்படும் பௌதிக வசதிகள் அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவதில்லை. கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம், மக்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி புரிய வைப்பதுதான். கிருஷ்ணரைப் புரிந்து கொண்டாலே ஜட வாழ்வின் சிக்கலிலிருந்து ஒருவர் விடுபடுவார். நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பாடுகளிலிருந்து வெளிவர முயற்சிக்கிறோம். “நான் ஒருசில சூழ்நிலைகளால் கட்டுண்டு இருக்கிறேன். இதிலிருந்து நான் வெளியேற வேண்டும்,” என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். இந்த பந்தத்தை முடிவிற்குக் கொண்டு வருதல், ஆத்யந்திக-து:க-நிவ்ருத்தி என்று அழைக்கப்படுகிறது. து:க நிவ்ருத்தி என்றால், துக்கமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதாகும். ஒவ்வொருவருமே துன்பமான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்புகிறோம். துன்பத்தைத் தவிர்க்க நாம் போராடுகிறோம். அதுவே உண்மை . எனக்கு சுமாரான வருமானம், உதாரணமாக இரண்டாயிரம் ரூபாய் என்றால், அஃது எனக்குப் போதுமானது அல்ல. நான் பத்தாயிரம் ரூபாய் வேண்டிப் போராடுகிறேன், துன்பகரமான சூழ்நிலை விலகிவிடும் என்று எதிர்பார்க்கின்றேன். ஆனால், என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும்போது, நான் மற்றொரு துன்பத்தை அனுபவிக்கின்றேன். அதன் பின், இருபதாயிரம் ரூபாய்க்கு முயற்சிக்கிறேன். இவ்வாறு நான்என் வருமானத்தை பெருக்கிக் கொண்டே செல்கிறேன். ஆனால் அந்த துன்பகரமான சூழ்நிலையோ ஒருபோதும் குறைந்தபாடில்லை. பணத்தினால் துன்பம் குறைந்துவிடும் என்றால். கோடீஸ்வரர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால் பணத்தினால் அடையப்படும் பௌதிக வசதிகள் அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவதில்லை. இந்தியா ஓர் ஏழை நாடாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். பௌதிக மாகப் பார்த்தால், இந்தியர்களிடம், குறிப்பாக கிராமவாசிகளிடம் உடுத்து வதற்கு இரண்டு துணிகளைத் தவிர மற்ற உடமைகள் இல்லை. ஆயினும் அவர்கள் வதக் கொள்கைகளைப் பின்பற்று கின்றனர்; அதிகாலையில் குளித்து தங்கள் தொழிலுக்குச் செல்கின்றனர்; கிடைப்பதை உண்டு அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களை ஆதிகால மனிதர்கள் என்று தற்கால மக்கள் கூறுகின்றனர். ஆனால் தற்கால மக்கள் முன்னேறியவர்களா என்ன? முன்னேறிய நாகரிகம் என்றால், அவன் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றான்?