மகா காலங்கள் நான்கும் அதன் வழிபாட்டு முறைகளும்.
மகா காலங்கள் நான்கும் அதன் வழிபாட்டு முறைகளும்.
நம் முன்னோர்கள் காலங்களை பலவகைகலாக பிரித்துள்ளனர். அவற்றில் மகா காலங்களை நான்கு யுகங்களாக பிரித்துள்ளனர். இந்த நான்கு மகா காலங்களும் இரவு பகல் போல, தட்பவெட்ப நிலை மாறி மாறி சுழன்று வருவது போல சுழன்று வருகின்றன. இந்த மகா காலங்களுக்கு ஏற்ப வழிபாட்டு முறைகளையும் நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர்.
மனித கணக்கின்படிசத்தியயுகம் 4800 தேவ வருடங்களுக்கு சமமானதாகும். திரேதாயுகம் என்பது 3600 தேவ வருடங்களுக்குச் சமமாகும், துவாபரயுகம் 2400 தேவவருடங்களுக்கு கலியுகம் 1200 தேவ வருடங்கள் இணையாகும்.(ஒரு தேவ வருடம் என்பது 360 மனித வருடம் இதை வைத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்)
இந்த நான்கு இடத்திலே சத்திய யுகத்தில் விஷ்ணுவை தியானிப்பதால் நாம் விரும்பிய பலன்களை அடைய முடியும் அதைப்போல திரேதாயுகத்தில் யாகங்கள் செய்வதால் நாம் விரும்பிய பலன்களை அடைய முடியும் அதுபோலத்தான் துவாபரயுகத்தில் வழிபாடு செய்வதால் நாம் விரும்பிய பலன்களை அடைய முடியும் ஆனால் கலியுகத்தில் ஹரி நாமத்தை உச்சரித்தாலே போதும் நாம் விரும்பிய பலன்களை அடைய முடியும்.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
உச்சரித்து விரும்பிய பலன்களை அடைவதுடன் ஆன்மிக உணர்வு பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்