"பகவத் கீதை உண்மையுருவில்" நூலிலே உள்ள சிறப்புகள்
பகவத் கீதை உண்மையுருவில் உள்ள சிறப்புகள்
(1) பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களும் அடங்கிய முழு பதிப்பு. (2)அதிகாரப்பூர்வமான குரு பரம்பரையில் வந்த 32வது ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் விளக்கமளிக்கப்பட்ட நூல். (3) பகவான் ஸ்ரீ கிருஷ்ண ர் கூறியவற்றை உள்ளது உள்ளபடி எவ்வித கலப்படமும் இன்றி வழங்கும் ஒரே நூல். (4) உருது, அரபிக் உட்பட 56க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையின் ஒரே விளக்கவுரை. (5) பல்வேறு மேலைநாட்டு பல்கலைக்கழகங்கள் பாடநூலாக அங்கீகரித்துள்ள பகவத் கீதையின் ஒரே விளக்கவுரை. (6) உலகம் முழுவதும் ஏழு கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ள பகவத் கீதையின் ஒரே விளக்கவுரை. (7) ஒவ்வொரு ஸ்லோகமும், அதன் சமஸ்கிருத வடிவம், எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அர்த்தம், எளிய மொழிபெயர்ப்பு, தெளிவான விளக்கவுரை ஆகியவற்றுடன் செம்மையாக விளக்கப்பட்டுள்ளது. (8) இதன் விளக்கவுரைகள், வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் என பல்வேறு சாஸ்திர மேற்கோள்களுடன் வழங்கப்பட்டுள்ளது. (9) பகவத் கீதையை எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் அழகிய வண்ணப் படங்களுடன் அமைந் துள்ளது. (10) எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இதற்காக கொடுக்கும் நன்கொடை முழுவதும் ஸ்ரீகிருஷ்ணரின் திருக்கோயில் தொண்டிற்காக பயன்படுகிறது.ஆகவே பகவத்கீதை உண்மையுருவில் நூலைத் தேர்ந்தெடுத்து படிப்பதே சிறந்தது