இறைவனைக் காண்பதற்கான எளிய முறை
இந்த உலகில் பல மதங்கள் உள்ளன ஒவ்வொரு மதமும் ஒரு வழிபாட்டு முறை பற்றிய செய்தியை மக்களுக்கு சொல்லுகின்றன. மதங்கள் கடவுளை நமக்கு காட்டுகின்றன வா அல்லது உணரச் செய்கின்றன என்று பார்த்தால் நம்மை சிந்திக்க வைக்கும். ஆனால்
இறைவனை நேரடியாக நமக்கு சொல்லிய செய்தி என்று ஒன்று எடுத்துக் கொண்டோமானால் அது பகவத் கீதை என்ற நூல் மட்டுமே ஆகும். இறைவனே நேரடியாக சொல்வதனால் கண்டிப்பாக நாம் அதை படித்து தான் ஆகவேண்டும். அப்படி அதை படித்தவர்கள் இறைவனை நிச்சயம் உணர்வார் என்பதில் ஐயமில்லை.
சிந்திக்க வேண்டும்:
கீதையைப் படிப்பது கால விரயமா? கீதையை படிக்க நேரமில்லை என்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். டிவி, சினிமா, பத்திரிகைகள், நாவல்கள், வெட்டிப் பேச்சு, வீண் வாதங்கள் போன்றவற்றில் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சில மணி நேரங்களை ஒதுக்கினால் போதும் கீதையை படிக்க. எனவே, கீதையை படிக்க நேரம் இல்லாமல் இல்லை. உண்மையில் மனம்தான் இல்லை . மேலும், கால விரயம் என்றும் தட்டிக்கழிக்கின்றனர். இப்படி நேரம் இல்லை என்பவர்கள், காலன் வெகு தூரத்தில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் வயதில், முதுமைக்காக சொத்து சுகங்களை சேர்க்கும் அதே சமயம், இவ்வாழ்விற்கும் அடுத்த வாழ்விற்கும் உதவிடும் நிரந்தர சொத்தான பகவத் கீதையை கவனத்தில் கொள்வது நல்ல பலனைத் தரும்
சோறு போடுமா?
கீதை நமக்கு சோறு போடுமா என்று கேட்பவர்களும் உண்டு. எறும்பில் இருந்து யானை வரைக்கும் உணவளிக்கும் இறைவன். மனிதனுக்கு மட்டும் உணவளிக்க மறந்துவிடுவாரா? கோடி பணம் கொண்டிருந்தாலும், இறைவனின் கருணை இல்லாவிட்டால் ஒரு கவளம் உணவுகூட கிடைக்காது, அவ்வாறு கிடைத்தாலும் அஃது உள்ளே போகும் பாக்கியம் கிடைக்காது. உண்மையில் இவ்வுடல் இருக்கும் மட்டும்தானே சோறு தேவை. இவ்வுடல் போன பின் என்ன தேவை என்பதை உணரும் புத்தியுள்ள மனிதர்கள், அதற்கான விடையை பகவத் கீதையிலிருந்து அறிந்துகொள்வர். கும்பிட்டால் மட்டும் போதுமா? அனைவருக்கும் அவசியமான பகவத் கீதைக்கு ஒரு கும்பிடு மட்டும் போட்டால் போதாது. அதனை வாங்கிப் படிக்க முயற்சிக்க வேண்டும். படித்துப் புரிந்துகொள்ள வேண்டும், புரிந்து அதன்படி நடப்பதும் அவசியம்.
சண்டை வருமா?
கீதையைப் படித்தாலோ கீதை வீட்டில் இருந்தாலோ வீட்டில் சண்டை வரும் என்று முட்டாள்தனமாக எவ்வித காரணமும் இன்றி நினைப்பவர்கள் பலர். உண்மையில், கீதை இருக்கும் இடத்தில், நீதி, வெற்றி, செல்வம், வலிமை ஆகியவை ஒருங்கே இணைந்திருக்கும் என்பது கீதையின் வாக்கு (18.78). போரில் எதிரியை வென்று பதக்கம் பெற்ற வீரனை யாரும் குறை கூறுவது இல்லை. ஏனென்றால் அவர் நீதியை நிலைநாட்டுகின்றார். அவ்வாறே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக உபதேசம் செய்த கீதையை சண்டை வரக் காரணம் ஆகும் எனக் குறை கூறுவது எள்ளளவும் பொருந்தாது. மக்களை தவறாக வழிநடத்த திட்டமிட்ட சில அயோக்கியர்களின் கீழ்த்தரமான பரப்புதல் ஆகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்
கீதை ஜாதி நூலா?
பகவத் கீதை ஜாதியை வளர்க்கும் நூல் என்று குறை கூறுபவர்கள், அனைவரும் வேற்று நாட்டு மதத்தை பரப்புவதற்காகவும் இந்தியாவிலுள்ள சனாதன தர்மம் என்று கூறப்படும் இந்து மதத்தை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயல் பாடு இந்த ஜாதி என்ற கருத்து
ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (4.13) கூறுகிறார்:
சாதுர்-வர்ண்ய ம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ
இங்கே குறிப்பிடப்பட்ட இருக்கின்ற நான்கு பிரிவுகளும் பிறப்பினால் ஏற்பட்டது அல்ல செய்கின்ற தொழிலில் மூலமாக பிரிக்கப்பட்டது இது அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்முறையாக பிரிக்கப்பட்டது. இது ஒரு அறிவு சார்ந்த , தொழில் சார்ந்த அமைப்பு இதனைப் புரிந்து கொண்டால்கிருஷ்ணரால் சுட்டிக்காட்டப்படும் பிரிவு களுக்கும் நவீன கால ஜாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணரலாம்.
இன்றும்கூட, ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்களிலும் “கலெக்டர், கமிஷனர்” என்ற உயர் பிரிவினரும்“உதவி கலெக்டர், உதவி கமிஷனர்” போன்ற அடுத்த பிரிவினரும், “ எழுத்தர், தலைமை எழுத்தர்” போன்ற மூன்றாம் பிரிவினரும், “பியூன், வாட்ச்மேன், சுத்தம் செய்பவர்” போன்ற நான்காம் பிரிவான கடைநிலை ஊழியரும், அவரவர் செய்யும் செயலுக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பிரிப்பதால் அரசாங்கம் பிரிவுகளை (ஜாதியை) ஆதரிக்கின்றது என்று அர்த்தமல்ல. ஏன் இறை நம்பிக்கை இல்லாத நாத்திகர்களிடமும் கூட இப்பிரிவுகள் இருக்கத்தான் செய்கிறது. நாத்திகக் கொள்கைகளை உருவாக்கும் உயர் பிரிவினரும், அதனை போதிக்கும் இரண்டாம் பிரிவினரும், இவற்றிற்காக பொருள் சேகரிக்கும் மூன்றாம் பிரிவினரும், இவை மூன்றும் நடைபெற உழைக்கும் நான்காம் பிரிவினரும் உண்டு தானே?
ஓர் உடலில் எவ்வாறு, தலை, கைகள், வயிறு. கால்கள் என்று ஒவ்வொரு அங்கமும், உடலின் ஒருங்கிணைந்த இயக்கத்திற்கு அவசியமோ, அவ்வாறே, மக்களின் குணத்திற்கும் செயல் திறனுக்கும் ஏற்ப பிரிக்கப்படும் பிரிவுகள், சமுதாயத்தின் ஒருங்கிணைந்த செயல் பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் அவசிய மானவை. இவ்வாறு, குணத்தையும் செய லையும் அடிப்படையாகக் கொண்ட பிரிவு முறையே கீதையில் கூறப்பட்டுள்ளது; பிறப்பின் அடிப்படையிலான ஜாதி முறை அல்ல. எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்? பகவத் கீதைக்கு பலவிதமான உரைகள் வெளியாகியுள்ளன. இதில் எது உண்மையானது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எல்லோருக்கும் இறைவன் சிந்திக்கும் சக்தியை கொடுத்துள்ளார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது அந்த சுய அறிவைக் கொண்டு நீங்கள் சிந்திக்க வேண்டும் வேற்றுமதத்தவர்கள் கூறுகின்ற கருத்துகளை கேட்டாலும் நாத்திக கருத்துக்களை கேட்டாலும் மனம் குழப்பம் அடையும் சில நேரங்களில் தவறான வழியில் செல்வோம் தவறான வழியில் கூட சரியாக தெரிந்து விடும் ஆகவே எந்த ஒரு செயலை எடுத்தாலும் சரியான நபர் சொல்வதை கேட்க அந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அந்த அறிவைக் கூட பகவத் கீதை நமக்கு தெளிவாக விளக்குகிறது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் பகவத்கீதை உண்மையுருவில் என்ற பதிப்பு கிருஷ்ணனைப் பற்றியும் அவரது உண்மையான செயல்பாடு பற்றியும் மிகத் தெளிவாக விரிவாக கூறுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் ஆகவே அந்த பகவத் கீதை உண்மையுருவில் கீதையைப் படித்து அனைவரும் இறைவனை உணர வேண்டும் நலம் பெறவேண்டும் என்று வேண்டுகிறோம்.