அரசமரமும் அஸ்வத்த நாராயணனும்

 அரச மரத்தின் சிறப்பு


 முன்னொரு காலத்தில்  இந்தியா என்ற நம் நாடு பல பல சிறு சிறு நாடுகளாக இருந்தன அப்போது சௌராஷ்டிரம் என்ற ஒரு நாட்டில்  ஒரு கிராமத்தில் ஒரு ஏழை கிராமத்தான் வாழ்ந்து வந்தான். அவனோ மிகவும் வறுமையில் இருந்தார். அவனுக்கு ஒரு மனைவியும் இருந்தாள் அவளால் ஒரு நல்ல துணிமணிகளை கூட அணிய முடியவில்லை,  பிச்சை எடுத்தால் தான் உணவு தர முடியும் என்ற நிலையில் அவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அந்த நிலையிலும் அவர்களது வீட்டின் அருகே இருந்த அரசமரத்தை தினமும் சுற்றி வணங்கி வருவதை  ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர்.



 அதேவேளையில் அவர்கள் வறுமையை வேறு யாரிடமும் சொல்ல முடியாமல் அந்த மரத்திலேயே சொல்லிக்கொண்டு எங்கள் வறுமையை தெரிந்த நீ ஆவது எங்கள் வறுமையை போக்க கூடாதா என்று வேண்டி அந்த மரத்திடம் சொல்லிக்கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். இப்படியாக இருந்த கொண்டு இருந்த பொழுது ஒரு கடுமையான குளிர் காலத்தை இவர்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அப்போது அவர்கள் அந்த குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அந்த மரத்தை வெட்ட முடிவு செய்தனர். அந்த கிராமத்தான் கோடாரியை கொண்டு அந்த மரத்தை வெட்ட முற்பட்டான். அப்பொழுது அந்த மரத்தில் ரத்தம் வந்தது பயத்தில் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றிருந்தான். அப்போது அந்த மரத்தில் சங்கு சக்கரதாரியாக பகவான் விஷ்ணு தோன்றினார் அவரது கைகளிலே ரத்தம் வழிந்தோடி கொண்டிருந்தது. பகவானைப் பார்த்த கிராம தானும் அவன் மனைவியும் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.   வணங்கி எழுந்து அவர்கள் பகவானே பார்த்து தங்கள் கைகளில் இரத்தம் வருவதற்கான காரணம் என்ன என்று மிகவும் வேதனையோடு கேட்டான் பகவானோ நீதானே கோடாரியால் என்னை வெட்டினான் என்று கேட்க பகவானே எனக்கு ஒன்றும் தெரியாது நான் மரத்தை நீதானே வெட்டினேன். என்று கூறி அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான்.


அப்பொழுது பகவான் மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கூறினார் மட்டுமன்றி உங்கள் வறுமையை போக்குவதற்காகவே நான் உங்களுக்கு காட்சி அளித்தேன் நீங்கள் தினமும் என்னை சுற்றி  வழிபடுவதால் உங்களை மகிழ்விக்க நான் உங்களுக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன் கேளுங்கள் என்றார். ஆனால் அந்த ஏழை கிராமத்தினர் ஐயனே உங்களை பார்த்த மகிழ்ச்சியில் எங்களுக்கு எதுவும் வேண்டுமென்று கேட்கவே தோன்றவில்லை உங்களை நாங்கள்  இப்படியே பார்த்து உங்களுக்கு சேவை செய்து உண்டு இருக்கவே விரும்புகிறோம் வேறு எதுவும் வேண்டாம் என்று ஊதி விடவே அவர்களது ஆசை உண்மையை அறிந்த பகவான் அவர்களுக்கு அதே இடத்தில் சகல வசதி உடைய வீடும் செல்வமும் கொடுத்து ஆசீர்வதித்து அதோடு மட்டுமல்லாமல் அம்மரத்தில் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தார் .  அதனால் பகவானுக்கு அஸ்வத்த நாராயணன் என்ற பெயரும் உண்டு (அஸ்வத்தம் என்றால் அரசமரம்)


அந்த ஏழைகள் மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆனதும் வழக்கம்போல அந்த அரச மரத்தைச் சுற்றி வந்து தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் பகவான் சேவையுடன் வசதியான வாழ்க்கையை அனுபவித்து தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர்.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்