இதுதான் கல்வி (The Actual Knowledge)

கீதையில் இருந்து வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்


1. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள், அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம். "யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்" என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திரம் வர்ணிக்கின்றது. எல்லையற்ற பிரிவுகளைக் கொண்ட இந்த பௌதிக உலகம், அளவிட முடியாத ஆன்மீக வானமான வைகுண்டம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய ஆதாரம் அவரே. ஆன்மீக உருவில் நித்தியமாக வசிக்கும் அவர், உன்னத பரம புருஷராவார். அவரது உடலிலிருந்து வரும் பிரகாசமான ஒளியே பிரம்மஜோதி, அவரோ தன்னிகரற்ற பரம்பொருள். ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருப் பவரும், பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப் பவருமான பரமாத்மா, ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவங்கமே.


2. ஜீவன்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நுண்ணிய பகுதிகளாவர். ஜீவன், குணத்தின் அடிப்படையில் இறைவனுடன் ஒன்றாக இருந்தாலும், அளவைப் பொறுத்தவரையில் வேறுபட்டவன். ஏனெனில், பகவான் எல்லையற்றவர், ஜீவனோ மிகச்சிறிய வன். பகவானின் நடுநிலை சக்தியில் அமைந்துள்ள ஜீவன்கள், எண்ணிப் பார்க்க முடியாத அளவில் ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும் மாறுபட்டும் உள்ளனர்.


3. பகவானின் நடுநிலை சக்தியில் உள்ள ஜீவன்கள், வைகுண்டத்திலோ இந்த பௌதிக உலகிலோ நிரந்தரமாக வாழும் தகுதியை உடையவர்கள். ஜீவனின் எண்ணிலடங்காத பாவச் செயல்களே அவன் இந்த பௌதிக அறியாமையில் வீழ்ச்சியுற்று இருப்பதற் கான காரணமாகும். மேலும், இத்தகு களங்கமுற்ற சூழலில், பிரம்மாவின் கிரகத்திலிருந்து பாதாள லோகம் வரை மேலும் கீழுமாக அவன் பயணம் செய்கின்றான். பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை இப்பௌதிக உலகில் அனுபவிக்கும் ஜீவன், மனதாலும் உடலாலும் எழும் துன்பங்கள், மற்ற உயிர்வாழிகளால் கொடுக்கப்படும் துன்பங்கள், தேவர்களால் வரக்கூடிய ன்பங்கள் இயற்கைச் சீற்றங்கள்) ஆகிய மூவகைத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படு கின்றான்.


4. பௌதிக உலகம் என்றழைக்கப் படும் பலமுகம் கொண்ட சிறைச்சாலையில் ஜீவன்கள் அடைக்கப்பட்டுள்ளனர். படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அழிக்கப்படுவதே இவ்வுலகின் இயற்கை யாகும். படைப்பின் போதும் பராமரிப்பின் போதும் இந்த பௌதிக இயற்கை தோன்றிய நிலையில் இருக்கும், அழிவின் போது அது மறைந்துவிடுகிறது. சில நேரத்தில் தோன்றியும் சில நேரத்தில் தோன்றாமலும் இருப்பதால், இந்த பௌதிக மாய உலகம், பகவானின் தாழ்ந்த சக்தியாகும்.


5. தோன்றி மறையும் பகவானின் இந்த பகிரங்க (வெளிப்புற சக்திக்கு அப்பால், திவ்யமானதும் ஆன்மீகத் தன்மை வாய்ந்ததுமான மற்றொரு இயற்கை உள்ளது. அஃது என்றென்றும் நிலைக்கிருக்கும் வைகண்டம் எனப்படும் ஆன்மீக வானமாகும். அந்த ஆன்மீக உலகம் என்றும் நிலைத்திருப்பது, அஃது என்றுமே மறையாது. படைப்பிற்கோ அழிவிற்கோ அஃது உட்பட்டதல்ல.


6. மாயையான இந்த பௌதிக இயற்கையுடன் தன்னை அடையாளம் காண்பதால், கர்வத்தின் காரணத்தினால், பரம புருஷ பகவானைப் பற்றி அறிந்துகொள்வதில் எந்தவொரு கட்டுண்ட ஜீவன் அக்கறை காட்டுவதில்லையோ, அத்தகையவன்மஹாகாளி, சண்டி, துர்கா என பலவாறு அறியப்படும் பகவானின் மாய சக்தியினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவான். அத்தகு அசுர ஜீவன்களை மூவகை துயரங்கள் என்னும் திரிசூலத்தினால் துளைக்கும் காளி. தனது மாய சக்தியினால் அவர்களை அடிமைப்படுத்துகிறாள். எல்லா வேதங்களின் சாரமான பகவத் கீதை கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிப்பதற்காகவே உபதேசிக்கப்பட்டது. கீதையை கவனத்துடன் படிப்பதால், பரம புருஷ பகவானின் பாதகமலங்களில் தஞ்சமடையும் ஜீவன், பௌதிக உலகின் துன்பச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற முடியும்.


7. ஜடவுலகின் தீராத துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் வியாதி யினால் கட்டுண்ட ஜீவன் அவதியுறு கிறான். இந்தத் துன்பங்களை பொறுக்க முடியாதபோது, அவன் உதவியை எதிர்பார்க்கின்றான். அச்சூழ்நிலையில் அருவவாத முக்திப் பாதையை தழுவும் சிற்றறிவுடையோர். தங்களது இலக்கை அடைய கடுந்தவங்களை மேற்கொள் கின்றனர். பகவானின் பக்தர்களோ இந்த முக்தி வாதிகளை விட உயர்ந்த நிலையில் உள்ள னர். ஏனெனில், பகவானின் சேவகனாக இருப்பதே தங்களது உண்மை நிலை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள். அத்தகு பக்தர்கள், சேவை செய்யும் அந்த மனப்பான்மையை அழிக்க முயற்சி செய்வ தில்லை ; மாறாக, நித்திய மான பக்தி முறையை பயிற்சி செய்து, அதை மற்றவர் செய்து, அதை மற்றவர் களுக்கு பிரச்சாரமும் செய்கின்றனர். ஆகையால், அவர்கள் பகவானின் நித்திய மான ஆன்மீக உலகத்திற்குள் நுழைவதற்கான தகுதியைப் பெறுகின்றனர். பக்தித் தொண்டு என்னும் இந்த நித்திய முறையை பயிற்சி செய்யும் உரிமை எல்லா ஜீவன்களுக்கும் உண்டு.


8. மஹத்தத்த்வம் எனப்படும் பௌதிக இயற்கை , தன்னை இருபத்தி நான்கு மூலக்கூறுகளாக வெளிப்படுத் துகின்றது: 1) தோன்றாத அடிப்படை மூலம். 2) அஹங் காரம், 3) புத்தி, 4) மனம், 5) ஆகாயம், 6) காற்று, 7) நெருப்பு, 8) நீர், 9) நிலம், 10) சப்தம், 11) தொடு உணர்வு. 12) ரூபம், 13) சுவை , 14) நுகர்ச்சி, 15) காதுகள், 16) தோல், 17) கண்க ள், 18) நாக்கு, 19) மூக்கு, 20) வாய், 21) கைகள், 22) கால்கள், 23) குதம், 24) பாலுறுப்புகள்.


9. தன்னிகரற்ற பூரண உண்மை யான மூல முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பௌதிக உலகிற்கு பிரம்மாவின் ஒவ்வொரு பகல் பொழுதிலும் ஒருமுறை வருகிறார். அதாவது, 864,00,00,000 சூரிய வருடங்களில் ஒருமுறை, தன்னிடம் சரணடைந்த பக்தர்கள், மற்றும் அபக்தர்களான நாத்திகர்கள் ஆகிய இருவரிடமும் தனது கருணையை பொழிவதற்காக அவதரிக்கின்றார். அவர் தனது பக்தர்களைக் காத்து, நாத்திக அசுரர்களை வதம் செய்கிறார். இவ்வாறு வதம் செய்யப்படும் அசுரர்களுக்கும் ஒருவகையான விடுதலையை (அருவவாத முக்தியை) அளிக்கிறார். ஆனால் பகவத் கீதையோ, பரம புருஷ பகவானுக்கு பக்தித் தொண்டு செய்வதால் அடையப்படும் முக்தியைப் பற்றி கற்பிக்கின்றது. அத்தகு பக்தித் தொண்டை அடைவதற்கான ஒரே வழி. முறையான சீடப் பரம்பரையில் வரும் ஆன்மீக அதிகாரியான குருவிடம் முழுமையாக தஞ்சமடைய வேண்டும். ஆன்மீக குருவை வழிபடாமல், பாடுபட்டு முயற்சிப்போர் தங்களது முயற்சிகள் பலனற்றுப் போவதை உணர்வர்.


10. அங்கீகாரம் பெற்ற குருவிடம் தஞ்சமடைய மறுக்கும் அனைத்து முட்டாள் ஜீவாத்மாக்களும் உண்மையில் பாதுகாப்பற்றவர்கள். குருவுடைய வழிகாட்டுதலற்ற இத்தகு அயோக்கியர்கள் தங்களை எல்லாமறிந்த மேதாவிகளாகக் கருதுகின்றனர். மேலும், அத்தகு தவறான அபிப்பிராயத்தின் அடிப்படையில், கடவுளை மனிதனாகவும், இறந்து போகக்கூடிய சாதாரண மனிதனைக் கடவுளாகவும் வழிபடுகின்றனர்.


11. முழுமுதற் கடவுள் ஆறு ஐஸ்வர்யங்களில் முழுமையானவர். அவர் எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ மதத்தினருக்கோ தேசத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் எல்லோருக்கும் கிட்டக்கூடியவர், எல்லோரையும் விடுவிக்கக்கூடியவர், மேலும், எல்லோரின் பரம தந்தையும் அவரே. இப்பௌதிக உலகிலுள்ள ஒவ்வோர் உயிர்வாழியையும் விடுவிப்ப தற்காகவே அவர் தோன்றுகிறார். ஆகவே தற்காகவே அவர் தோன்றுகிறார். ஆகவே பகவத் கீதையிலுள்ள அவரது அனைத்து உபதேசங்களும் பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் பயனளிக்கக்கூடியவை. பகவத் கீதை எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். ஆகவே, பகவானின் அச்செய்தியை பரப்பும்பாக்கியமானஜீவன்கள். அவருக்கு மிகவும் பிரியமானவர்களாவர்.


12. பகவானது மாய சக்தியின் பிடியிலுள்ள முட்டாள் அசுர அயோக்கி யர்கள், தங்களது பௌதிகத் திட்டங் களைப் பற்றி பீற்றிக் கொள்வர். பகவத் கீதையினால் மட்டுமே அவர்களது அறியாமை என்னும் பலமான கோட்டை யினுள் ஊடுருவிச் சென்று, உண்மைக்கு அவர்களைத் தட்டி எழுப்ப முடியும்.


13. ஒற்றுமையுடன் பலமான பிரச்சாரம் செய்வதன் மூலம், கிருஷ்ண பக்தர்கள், அத்தகு முட்டாள் மனிதர்களிடம், அவர்களது பெயரளவு திட்டங்கள் நிச்சயமாக தரைமட்டமாகி விடும் என்றும், கனவு வீட்டைக் கட்டுவதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நிலம் உண்மையில் கானல் நீரைப் போன்ற மாயையே என்றும், தெரிவிக்க வேண்டும். உண்மை வேறு இடத்தில் உள்ளது. அந்த உண்மையான இராஜ்ஜியத்திற்கு ஒருவரை மாற்றத் தேவையான அனைத்து தகவல்களும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்னும் பத்திரிகையில் கிட்டும்.


14. ஆகவே, ஒரு சிறந்த சமூ கத்திற்கான உண்மையான அறிகுறி என்னவெனில், அதன் குடிமக்கள் ஸ்ரீ கிருஷ்ண தரிசனத்தினால் கவரப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனத்தைப் பெறுவதற்கான வழிமுறையை ஏற்று. முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வர். அவர்கள் தங்களது அந்த உண்மையான வீட்டில் நித்தியமாக வசிக்க முடியும். இவ்வாறு மயும். இவ்வாறு செய்வதால் மட்டுமே பலனற்ற செயல்கள் அனைத்திற்கும் அவர்கள் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


15. எவ்வாறு பாவகரமான பாதகன் தனது மரணத்திற்குப் பின் உடல் கிடைக்காமல் ஆவியாக சூட்சும உடலில் சுற்றித் திரிவானோ, அவ்வாறே, அருவவாதிகள், திவ்யமான தளத்தில் முக்தி வரை உயர்ந்தாலும், முழுமுதற் கடவுளுக்கு அன்புத் தொண்டு செய்யும் மனோநிலையை வளர்த்துக் கொள்ளாத காரணத்தினால், அவர்கள் மீண்டும் பௌதிக உலகினுள் வீழ்ச்சியடைவர். எனவே, அருவவாதிகள் மேற்கொள்ளும் கடும் தவங்கள், நித்திய தர்மமான பக்தித் தொண்டிற்கு என்றுமே நிகராகாது.


16. அருவவாதிகள் (அத்வைதிகள்) பகவானின் உருவமற்ற (அவ்யக்த) தன்மையில் மிகவும் பற்றுக் கொண்டுள்ளதால், அவரது உன்னத உடலையும் அவரையும் வேறுபடுத்திக் காண்கின்றனர். அக்குற்றத்தினால் அவர் களது உணர்வு களங்கமடைந்துள்ளது. இதனால் பகவானின் நித்தியமான இருப்பிடத்தில் அவர்களுக்கு இடம் இல்லை . ஆயினும், ஏதோ ஒரு நல்ல திர்ஷ்டத்தினால், அவர்கள், தூய பக்தர் களுடைய தொடர்பைப் பெற்று அந்த பக்தர்களிடமிருந்து பகவானின் தெய்வீக நாமம், ரூபம், குணம், அற்புத லீலைகள் மற்றும் பலவற்றை நம்பிக்கையுடன் கேட்கும் போது, நிச்சயமாக தங்களின் களங்கங்களிலிருந்து தூய்மையடை கிறார்கள். பின்னர், பகவானின் போற்றத் தக்க குணநலன்களால் கவரப்பட்டு, இறுதியாக அவரிடம் முழுமையாக சரணடைவர். இவ்வாறாக, பகவானின் நித்திய லீலைகளில் நுழைய விரும்பு வோருக்கு, பகவத் கீதை உபதேச பாடமாக அமைகிறது. சரணடைவதற்கான முதல் நிலையை பகவத் கீதையிலுள்ள தெளிவான செய்தி கற்பிக்கின்றது. இறுதி இலக்கை அடைவதற்கு இந்த சரணாகதி நிச்சயம் தேவை. பகவத் கீதையின் கருத்துப்படி பார்த்தால், சரணடைதல் என்னும் இந்த தேர்வில் தூய பக்தர்கள் வெற்றிகரமாகத் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். (தமிழாக்கம்: பிரியதர்ஷினி ராதா தேவி தாஸி)


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்