கடன் பிரச்சனை உள்ளவரா நீங்கள்?
கடன் பிரச்சனை உள்ளவரா நீங்கள் ? அதற்கான சில வழிபாட்டு முறைகள்
கடனே இல்லாத மனிதர்கள் என்று நாம் சொல்லலாம். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளார். இந்த உலகைப் பொறுத்தவரையில் நமக்குத் தெரிந்த கடன்கள் தெரியாத கடன்கள் என்று பிரித்து பார்க்க முடியும். தெரிந்த கடன்கள் என்பதை நாம் நேரடியாக பிறரிடம் கொடுக்கல் வாங்கல் போன்றவை,
தெரியாத கடன்கள் என்பதை முன் ஜென்மத்தில் செய்ததை தற்போது நாம் செலுத்திக் கொண்டிருக்கும். இந்தக் கடன்களை பித்ரு கடன் அதாவது முன்னோர்களுக்கு பட்ட கடன் அல்லது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் அதுபோல தேவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் என்று சொல்லலாம். தேவர்களுடைய கடன் என்பது அரசாங்கத்திற்கு நாம் செலுத்த வேண்டிய வரியை போன்றது ஏனென்றால் சூரியன் சந்திரன் போன்ற கிரகங்கள் மற்றும் பிரபஞ்சங்கள் நமக்கு நம் வாழ்க்கைக்கு உதவிகளை செய்கின்றன அவற்றின் கடனை நாம் செலுத்த வேண்டியது நம் கடமையாகும்
இந்த உலகத்தின் கடன் நம் முன்னோர்களின் கடன் தேவர்களின் கடன் இம்மூன்றையும் நாம் செலுத்தித்தான் ஆகவேண்டும் அதை எப்படி செலுத்துவது என்பது பற்றியும் எப்படி செலுத்துகிறோம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்
தெய்வங்களுக்கான வழிபாடுகள், முன்னோர் ஆராதனை, மகான்கள் - ரிஷிகளைப் போற்றி வணங்குதல், அதிதி உபசாரம் ஆகிய கடமைகளையே நமக்கான கடன்களாகச் சொல்லி, அந்தக் கடன்களை செலுத்தியாக வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார். இவை தவிர, மற்றவர்களிடம் பட்ட கடன் களையும் நாம் அடைத்தாகவேண்டும். ‘இந்தப் பிறவியில் நாம் கடன் வாங்கிக்கொண்டு பிறரை ஏமாற்றினால், அடுத்தப் பிறவியில் கொடிய மிருகங்களுக்கு நடுவே, ஒரு சாதுவான பிராணியாக நின்று, அவற்றுக்கு உணவாகும் நிலை வரும்’ என எச்சரிக்கிறது கருட புராணம். எனவேஎனவே, கடன் பெற்றவர்கள் ‘கடனே’ என்று செயற்படாமல், பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் அந்தக் கடனை அடைக்க முயற்சி செய்ய வேண்டும்.
யார் யாரெல்லாம் கடன்தொல்லையால் அழுந்த நேரிடும்? கடன்பட நேரிட்டாலும் வெகு சீக்கிரம் அதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? ஜாதகத்தில் எந்த கிரகம் என்ன நிலையில் இருந்தால் நமக்குச் சாதகம் அல்லது பாதகம்?
இவை குறித்து விரிவாக அறிவோம்.
ஜாதக அமைப்பின்படி குரு மகரத்தில் நீசமாகி விரயம் அடைந்தாலும், 6-ம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவைச் சனி பார்த்தாலும் அடைக்க முடியாதவாறு கடன் அழுத்தும். செவ்வாய் தசையில் சுய புக்தி, சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கும் போது, பெண்கள் மூலமாக கடன் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். குருகுரு தசை நடக்கும்போது கேது, செவ்வாய் மற்றும் ராகு புக்தியில் கடன் சுமை வரக்கூடும்.
சனி தசை - கேது புக்தியில், மகன் மூலமாகக் கடன் தொல்லை ஏற்படும்.
ராகு தசை நடக்கும்போது சனி, சூரியன் மற்றும் செவ்வாய் புக்தியில் சுற்றி உள்ள நபர்களால் கடன் ஏற்படும்.
புதன் தசை நடக்கும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். நாம் ஜாமீன் போட்டு கடன் வாங்கிக்கொடுத்த நண்பர் அதை ஒழுங்காகக் கட்டாமல் விட்டுவிட, நாம் கட்டவேண்டிய நிலை ஏற்படும். கேது தசை - சந்திர புக்தியில் நகை மூலமாகக் கடன் வரும்.
சுக்கிர தசை - சூரிய புக்தியில் வங்கிக் கடனை அடைக்க இயலாத நிலை ஏற்படும். சனி புக்தியில் மனைவி, மகனுக்கான வைத்தியச் செலவு களாலும் கேது புக்தியில் வண்டிகள், எருதுகள், பசுக்கள் வாங்குவதாலும் கடன் உண்டாகும். சிறிய கடன்கள்கூட அடைபடாமல், வட்டி அதிகமாகி வாட்டக்கூடும்.
குரு தசையில் சுய புக்தி நடக்கும் காலத்திலும் அடுத்து வரும் 16 வருடங்களும், சுக்கிர தசை 20 வருடங்களும் கடன் வாங்கினால் சுக்கிர தசை காப்பாற்றும்; தப்பித்துக்கொள்ளலாம் என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறு.
கடன் வாங்குவதால் மட்டுமல்ல, கொடுத்த கடன் உரிய நேரத்தில் திரும்பி வராமல் போனாலும் பிரச்னைதான்.
இப்படி, கடன்களால் ஏற்படும் பிரச்னைகள் நீங்க துணை நிற்கும் வழிபாடுதான் ருணவிமோசன பூஜை. அதாவது கடன் தீர்க்கும் வழிபாடு
கடன் தீர்க்கும் வழிபாடு
வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி முடித்து, பூஜை அறையைச் சுத்தம் செய்யுங்கள். அங்கே, மணைப்பலகை ஒன்றைவைத்து, செந்நிற கோல மாவினால் 16 சங்குகள் வட்ட வடிவில் அமைவது போன்று கோலம் போட வேண்டும். சங்குகளின் மேல் நெய் தீபம் ஏற்றிவைத்து, கீழ்க்காணும் அங்காரக துதியைச் சொல்ல வேண்டும்.
பின்னர், சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பித்து, புஷ்பாஞ்சலியுடன் கற்பூர ஆரத்திக் காட்டி வழிபட வேண்டும்.
ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி
ஓம் முருகனின் உருவே போற்றி
ஓம் மேஷராசிப் பிரியனே போற்றி
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி
ஓம் தென் முகத்தவனே போற்றி
ஓம் தேவியின் பிரியனே போற்றி
ஓம் பூமியின் புதல்வனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் ரணகாரனே போற்றி
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி
ஓம் மகீ சுதனே போற்றி
ஓம் நவநாயக உருவே போற்றி
நிறைவாக, கீழ்க்காணும் மந்திரத்தை 9 முறை கூறி, தீபத்தை மன ஒருமைப்பாட்டுடன் தியானித்து வலம் வரவேண்டும்
ஓம் ரக்தமால்யாம் பரதரம் சக்திசூலகதாதரம்
சதுர்புஜம் மேஷவாகம் வரதாபய பாணினம்
ஓம் அங்காரக மகீபுத்ர பகவன் பக்தவத்ஸலக
நமோஸ்துதே மமசேஷம் ருணமாசு விமோசய!
இந்த வழிபாட்டை முறையாகச் செய்து வந்தால், வாங்கிய கடன்களை விரைவில் அடைக்க வழி பிறக்கும். கொடுத்த கடனும் விரைவில் வந்துசேரும்; மன நிம்மதி பிறக்கும்.