கலியுகத்தில் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க சிறந்த வழி
பாரதம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் புராணங்கள் இதிகாசங்கள் என்று கூறப்படும் ஆன்மீக இலக்கிய படைப்புகள் காலம் காலமாய் இருந்து வருகின்றன.
வியாசரால் எழுதப்பட்ட 18 புராணங்களும் அடங்கும் இந்த பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்ரீமத் பாகவதம் என்பது மகா புராணம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீமத் என்றால் புகழ் மிக்கது மிகவும் உயர்ந்தது எனப்படும், பாகவதம் என்பது பகவான் உடைய தொகுப்பு என்று பொருள்படும். இதில் பகவானுடைய அவதாரங்கள் அவதாரங்களின் நோக்கங்கள் பற்றிய வரலாறுகள் விவரிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆன்மீக அறிவை மக்களுக்கு போதிக்கும் நூலாகும்.
பகவான் கிருஷ்ணர் பல வடிவங்களில் தோன்றுகிறான். அப்படி அவர் தோன்றுகின்ற வடிவங்களில் ஒன்றுதான் ஸ்ரீமத் பாகவதம் என்ற புத்தக வடிவம் ஆகும். கிருஷ்ணருக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் எந்த வேறுபாடும் கிடையாது இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக இறைவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படைப்பின் தத்துவத்தை அறிந்து கொள்வதற்காக வேதங்களை தோற்றுவித்தார் அப்படி தோற்றுவித்த வேத வியாசருக்கு ஏதோ ஒரு குறை மனதில் இருக்கத்தான் செய்தது அந்தக் கொலைக்கான காரணம் என்ன என்று அவருக்கு புரியாமல் இருந்தது அப்படி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தன்னுடைய குரு நாரதரிடம் டம்மன குறைவுக்கான காரணத்தை கேட்டார். ஆனால் நாரதர் ஓ வியாசரிடம் தாங்கள் கிருஷ்ணரைப் பற்றிய லீலைகளை தோற்றுவிக்கவில்லை வேதங்களின் நோக்கமே பகவானை திருப்திப்படுத்துவது அப்படியிருக்க அவரைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் நீர் விவரிக்கவில்லை அதுவே உனது மன குறைவுக்கான காரணம் என்று சொன்னார் புரிந்துகொண்ட வியாசர் அதன்பிறகு தன் மனநிலையை ஒருநிலைப்படுத்தி பகவானுடைய லீலைகளை படைப்பதில் தன்முழு கவனத்தையும் செலுத்தினார் அதன் விளைவாக ஸ்ரீமத் பாகவதம் தோன்றியது. அதனால் ஸ்ரீமத் பாகவதத்தில் மகாபுராணம் என்ற பெயரும் உண்டு.
கிருஷ்ணனின் லீலைகளை நமக்கு விரிவாக வழங்குகிறது இந்த ஸ்ரீமத் பாகவதம் கலியுகத்தில் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து காப்பதற்கான மார்க்கத்தை நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள் சில சுவாமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரே அளித்த பதில் போல ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ணருடைய லீலைகளை விரிவாகச் சொல்கிறது . இந்த கலியுகத்தில் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் ஒரே சிறந்த வழி பக்தி மார்க்கம் தான் என்று மிகத் தெளிவாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது..மட்டுமன்றி போலி தர்மங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.