பகவத்கீதை படிப்பது பற்றிய வழிமுறைகள்
பகவத்கீதை படிப்பது பற்றிய வழிமுறைகள்
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அந்த மருந்தின் தலைப்புக் காகிதத்தில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். நண்பர் கூறுவதுபோலவோ நமக்குத் தோன்றியபடியோ நாம் மருந்து உண்ண முடியாது. மருத்துவரின் அறிவுரைப்படியோ தலைப்புக் காகிதத்தின் மேல் கூறப்பட்டுள்ளபடியோ மருந்தை உட்கொண்டால் மட்டுமே நோய் குணமடையும். அதே போல் பகவத் கீதையின் உண்மையான நோக்கத்தை அடைய விரும்புபவர்கள் கீதையை உபதேசித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதலின்படியே கீதையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது குறித்து கீதையிலேயே (4.2) ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.
ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:,
பகவத் கீதையினை அதிகாரப்பூர்வமான குரு-சீடப் பரம்பரை யிலிருந்து பெற வேண்டும். ஏனெனில், மனம் போன போக்கில் தகுதியில்லாத நபர்களால் எழுதப்படும் கீதையின் உரைகள், கீதையின் உண்மையான நோக்கத்தை சிதறடித்து விடும், அபாயகரமான சூழ்நிலைக்கு படிப்பவரை அழைத்துச் செல்லும். கீதையை எவ்வாறு படித்துப் புரிந்துகொள்வது? பகவத் கீதையில் பகவான், பக்த்யா மாம் அபிஜானாதி என்கிறார். அதாவது, பக்தியால் மட்டுமே என்னைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.
கீதையைப் புரிந்துகொள்ள எளிமை யான வழி கீதையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நமது மனதை பக்குவப் படுத்துவதே. குழம்பிய மனதில் கீதை புரிவதில்லை . ஆனால்,
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம. ஹரேஹரே
என்றமஹாமந்திரத்தை உச்சரிப்பதால் மனக் குழப்பம் நீங்கி கீதை புரிய ஆரம்பிக்கிறது. ஆகையால், தினசரி கீதையைப் படிக்கும் முன் குறைந்தபட்சம் 108 முறை இந்த ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரித்தால் படிப்படியாக கீதையை புரிந்துகொள்ள முடியும். அதிகாரப்பூர்வமற்ற நபர்களின் கீதை உரை, நிச்சயமாகப் புரியாது, அல்லது நம்மை வழி தவறி இட்டுச் செல்லும். எனவே, அதிகாரப்பூர்வமான ஆச்சாரியர்களால் உள்ளது உள்ளபடி வழங்கப்படும் பகவத் கீதை உரை, சரியான வழிகாட்டியாகவும் மனதிற்குப் புரியும் வகையிலும் அமையும். குரு-சீடப் பரம்பரையில் வரும் “பகவத் கீதை உண்மையுருவில்” அதிகாரப்பூர்வமான குரு-சீடப் பரம்பரை என்பது, ஆதி குருவான ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து தொடங்கி முறையான ஆன்மீக ஆச்சாரியர்களின் வழியாக வரும் பரம்பரையாகும். 'பகவத் கீதை உண்மையுருவில்' என்னும் உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியரான தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து தொடங்கி, பிரம்மா, நாரதர், வியாசர், மத்வாசாரியர் வழியாக வந்த அதிகாரப்பூர்வமான குரு-சீடப் பரம்பரையில் வந்த முப்பத்திரண்டாவது குரு ஆவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு உபதேசித்தாரோ, அர்ஜுனன் எவ்வாறு புரிந்து கொண்டானோ, அவ்வாறே உள்ளது உள்ளபடி கீதையின் பொருளைச் சிதைக்காமல் ஸ்ரீல பிரபுபாதர் அளித்துள்ளார். இதுவே அதிகாரப்பூர்வமான ஆச்சாரியர்கள் அளிக்கக்கூடிய உரையின் சிறப்பாகும்.