புனித நூல்கள் 

புனித நூல்கள் 


பொதுவாக நாம் கடவுளைப் பற்றிய மதங்கள் சார்ந்த மார்க்கங்கள் சார்ந்த நூல்களை புனித நூல்கள் என்கின்றோம்


கடவுள் யார் என்பதில் பலருக்கும் கேள்விக்குறி உள்ளது பலரும் பல தரப்பட்ட கடவுள்களை வணங்குகின்றனர்.  அவரவர்கள் முன்னோர்கள் சொன்னதையே பின்பற்றியே உண்மையான கடவுள் என்று வணங்கி வருகின்றனர். அதை அப்படியே ஏற்றுக் கொள்வதை விட  அதில் எது உண்மை என்பதை அறிந்து அதனை பின்பற்றுவதே அறிவுடைமை. அப்படி அறிந்து கொள்ள வேண்டுமானால் அனைத்து புனித நூல்களையும் படிப்பதில் தவறு ஒன்றும் இல்லை அப்படி படித்து அதில் சிறந்ததை அவர்கள் தேர்ந்தெடுப்பது அறிவுடைமை ஆகும்.


இந்த உலகத்தில் பல புனித நூல்கள் உள்ளன அதில்  பகவத்கீதையும் ஒன்று. இந்தப் புனித நூல்களை படிக்கின்ற பொழுது மற்ற புனித நூல்களுக்கும் பகவத் கீதை வித்தியாசங்களை உணரலாம்.


பகவத்கீதை  துவாபர யுகத்தில் கிருஷ்ணரால் நேரடியாக தனது பக்தனும் நண்பனுமான அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது அந்த நிகழ்வு நமக்கு வியாசரால் வழங்கப்பட்டது.


 கிருஷ்ணரே நமக்கு  நேரடியாக வழங்கியதால்  நாம் இதில் சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை.  


இந்த பகவத் கீதையை தூய்மையுடன் படிப்பவர்கள் கேட்பவர்கள் சொல்லுபவர்கள் நிச்சயம் கிருஷ்ணரை உணர்வார்கள்.


இந்த உலகத்தில் பகவத் கீதை பற்றிய பல விளக்க உரைகள் உள்ளன தவறான விளக்க உரைகளும் தவறான வழி நடத்தக்கூடிய விளக்க உரைகளும் உள்ளன ஆகவே அதை உணர்ந்து சரியான வழிகாட்டலின் மூலம் சரியான புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.  குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை தோற்றுவித்த ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ .ச .பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் எழுதிய பகவத் கீதை உண்மை உருவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மட்டுமன்றி உலகம் முழுவதும் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இந்நூலைப் படித்தவர்கள் அனேகமானோர் கிருஷ்ண பக்திக்கு மாறியுள்ளனர் அதுவே இந்த பகவத் கீதை உண்மையுருவில் சிறப்புத் தன்மையாகும்.


இந்த உலகத்தில் எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இந்த உலகத்தில் மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் எது தர்மம் எது அதர்மம் எது உண்மை எது பொய் என்று புரியாமல் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள் உயர்ந்த தர்மங்களையும் புரிந்துகொள்ள முடியாமல் தவறான வழியில் செல்கின்றனர். அப்படி வழிதவறிச் செல்பவர்களை சரியான வழியில் செயல்படுத்தி  அவர்களை மீண்டும் இறைவனிடம் இறைவன் இருக்கும் இடம் அழைத்துச் செல்வதே பகவத் கீதையின் நோக்கமாகும்.


 இந்த உலகை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கீதை தோன்றிய நாள் வருகிறது.  அதனால் இந்த மாதத்தையே கீதை தோன்றிய மாதமாக நினைத்து மதித்து கீதையை அனைவருக்கும் படிக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக பக்தர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை சேர்ந்த பக்தர்கள் இதை முக்கிய கடமையாக ஏற்று நடத்தி வருகின்றனர் இந்த பகவத் கீதையை படிப்பதோடு மட்டுமல்லாமல் பிறரும் படிக்கச் செய்து அவர்களும் பயன் பெற்று இறைவனிடம் மீண்டும் செல்வதற்காக வழியை அனைவரும் உதவி செய்ய வேண்டும் இந்த உதவிய நாம் பிறந்ததற்கான ஒரு நல்ல செயல் என்று கூட கூறலாம்


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்