பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன் ) மனிதனின் குணங்களை பறவைகளின் குணங்களோடு ஒப்பிட்டு செயல்படுத்தும் ஒரு கல்வி அறிவு ஆகும் இந்தப் பறவை கல்வியறிவு ஒவ்வொரு மனிதனின் நட்சத்திரங்களை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது இந்தப் பறவை சாஸ்திரம் அறிந்தவர்கள் யாரையும் ஈசியாக வெற்றி கொள்வார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருந்தார்கள் பறவை அறிந்தவரை பகைத்துக் கொள்ளாதே என்று முன்னோர்கள் கூறுகின்ற வழக்கமும் உண்டு இந்த அறிவு மிக்கவர்கள் மறைமுக எதிரிகளை கூட வெல்லுகின்ற தன்மை உண்டு என்று கூறுகிறார்கள் இதை தவறுதலாக பயன்படுத்தக்கூடாது நல்ல காரியங்களுக்கும் நியாய தர்மங்களும் தான் பயன்படுத்த வேண்டும். இந்த பறவைகளைப் பற்றிய செயல்படு அறிவியல் என்பது அகத்திய முனிவர் தன்னை சார்ந்த சித்தர்களுக்கு விவரித்து உள்ளதாக கூறப்படுகிறது அகத்திய முனிவருக்கு முருகக்கடவுள் உபதேசித்ததாக புராணம் கூறுகின்றது அந்த முருகக் கடவுளுக்கு அவருடைய தாயார் உபதேசித்ததாக புராணங்கள் கூறுகின்றன முருகக்கடவுள் அசுரர்களை அழிப்பதற்காக செல்கின்ற பொழுது தன் தாயாரான சக்தி தேவியிடம் ஆசிர்வாதம் வாங்க...