அனவரும் அறியவேண்டிய யுத்ததர்மம்

 


உலகம் யுத்ததர்மம்


ஜாதி மத நாடு உறவுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டது தர்மம், நீதி என்பதை உணர்த்துகின்ற ஒரு அற்புதமான இடம்  குருசேத்திரம். அங்கு நடந்தது தர்மத்திற்கான யுத்தம் இன்று நடக்கின்ற மதவெறி எல்கை வெறி தாண்டிய தாக்குதல்  போன்று இல்லை அந்த யுத்தம்  அதுதான் கீதை பிறந்த இடம்


குருக்ஷேத்திரம்


கிருஷ்ணரிடமிருந்து கிடைப்பதே பக்குவமான அறிவு


சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை அருளினார். வருடந்தோறும் கொண்டாடப்படும் அந்த நன்னாள் நவம்பர் மாதத்தில் வருகிறது.


மனித சமுதாயத்திலுள்ள அனைவருக்கும், அனைத்துக் காலகட்டத்திலும், பகவத் கீதை மிகமிக அத்தியாவசியமானதாகும். எங்குச் செல்கிறோம் என்பதை அறியாது, அமைதி யின்றி, ஆனந்தமின்றி, அறியாத ஆட்டுக் குட்டிகள் போல அபாயத்தை அணுகிக் கொண்டுள்ள உலக உயிர்வாழிகள், "நான் யார்? கடவுள் யார்? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் துன்பப்படுகிறேன்? மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?" போன்றவற்றை அறிந்து கொண்டு, மரணமும் முதுமையும் நோயும் இல்லாத ஆனந்தமயமான வாழ்க்கையை நிரந்தரமாகப் பெறுவதற்கு பகவத் கீதை உதவுகிறது.மத வெறி பிடித்து மனிதர்களே உங்களுக்காகவும் தான் கீதை உபதேசிக்கப்பட்டது. மனிதர்களை மனிதர்களே தாக்கும் கொடுமையிலிருந்து விடுவிப்பதற்காக,  யுத்தம் என்பது தர்மத்திற்காக இருக்கவேண்டும். அது மதம் சார்ந்ததாகவோ ஏன் உடன் பிறந்த உறவுகள் சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது என உலகிற்கு தர்மத்தை போதித்தது.  உண்மையான யுத்த தர்மத்தை போதித்தது குருசேத்திரம் என்ற போர்க்களம் அதனை உலகிற்கு நேரடியாகவே கொடுத்தார் பகவான் கிருஷ்ணர்.


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்