பெயருக்குள் இறைவனா?
பெயருக்குள் இறைவனா?
இந்த கலியுகத்தில் இறைவன் பெயரில் இருக்கின்றார். அந்தப் பெயர் கிருஷ்ணா ராமா கோவிந்தா... என்றெல்லாம் கூறுகின்றார்கள்.
அப்படி சொல்லுகின்ற பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சி வருகிறது என்று கூறுகிறார்கள். ஜாதி மத இன வேறுபாடுகள் தெரிவதில்லை என்று கூறுகிறார்கள். உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது என்கின்றார்கள். அனைத்து ஜீவன்களையும் மதிக்க வேண்டும் என்று உணர்வு ஏற்படுவதாக கூறுகிறார்கள். கூறுகின்றார்கள். உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே வீடு என்று கூறுகிறார்கள். அன்பு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். பசுவை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மதவெறி இல்லாத இறை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எல்லோரும் இறைவனுடைய அங்கம்தான் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுகிறவர்கள் இறைவன் தன்னுடைய பெயரிலேயே இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் அந்தப் பெயர் கிருஷ்ணா என்றும் ராமா என்றும் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். அப்பெயர்களை சொல்லி ஆடிப்பாடி மகிழ்ச்சியாக உயிர்களைக் கொலை செய்யாத பாவமற்ற உணவை மற்றவர்களுக்கும் அளித்து தாங்களும் அருந்தி மகிழ்கிறார்கள்.
அவர்கள் வேறுயாருமல்ல அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை சார்ந்தவர்கள், அவர்கள் சொல்வதும் செயலும் ஒன்று போல் தான் இருக்கின்றன. உலகத்தில் அமைதி வேண்டும் என்றால் அவர்கள் பின் சென்றால் போதும் என்பது போல் தோன்றுகின்றது அவர்கள் மகிழ்ச்சியை பார்க்கின்ற பொழுது. அவர்கள் உச்சரிக்கின்ற இறைவனின் பெயரை பாடலாகப் பாடி மகிழ்கிறார்கள் இதை மகா மந்திரம் என்றும் சொல்கிறார்கள் உலகிற்கு அன்பை போதிக்கின்ற ஒரே மகாமந்திரம் இதுதான் என்றும் சொல்கிறார்கள். இங்கு இருப்பவர்களும் சாதி மத இன வேறுபாடு இன்றி நாடு இன வேறுபாடு இன்றும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
இதோ அந்த மகா மந்திரம்
“ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”