நவ பிருந்தாவனம்

நவ பிருந்தாவனம்


நவ பிருந்தாவனம் நதிகளும் சங்கம் நவ பிருந்தாவனம் இது ஒரு எழில்மிகு குட்டி தீவு அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய புனிதமான இடமும் கூட கர்நாடக மாநிலம் ஆனேகுந்தி க்கு அருகில் துங்கபத்ரா நதிக்கரையில் இந்த நவ பிருந்தாவனம் உள்ளது ஒருபுறம் துங்கா நதி மறுபுறம் வற்றா நதி ஓடுகிறது இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடம் இது இங்கே ஒரு பாறையின் மேல் இந்த நவ பிருந்தாவனம் உள்ளது


இங்கே மத்வ சம்பிரதாய ஆச்சாரியார்களின் Iuli ஜீவசமாதி அமைந்துள்ளது ஆச்சாரியார்கள் 9 பேர் இங்கே ஜீவசமாதி அடைந்து உள்ளனர் வெவ்வேறு காலங்களில் ஜீவசமாதி அடைந்த இவர்கள் 9 மகான்களும் அவர்கள் தங்களது சூட்சும சரிரத்தில் இந்தக் குட்டித் தீவில் தங்களை காண வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கி வருகிறார்கள்.


இங்கே முதல் பிருந்தாவனத்தில் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் அருள்பாலிக்கிறார் இரண்டாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ ஜெய தீர்த்தர் அருள்பாலிக்கிறார் மூன்றாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ கவி இந்திர தீர்த்தர் அருள்பாலிக்கிறார் நான்காவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ வாசிக தீர்த்தர் அருள்பாலிக்கிறார் ஐந்தாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ வியாசராஜர் அருள்பாலிக்கிறார் ஆறாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் அருள்பாலிக்கிறார், ஏழாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராம தீர்த்தர் அருள்பாலிக்கிறார் எட்டாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் அருள்பாலிக்கிறார் ஒன்பதாவது பிருந்தாவனத்தில் ஸ்ரீ கோவிந்த உடையர் அருள்பாலிக்கிறார்.


இந்த 9 கோயில்கள் மட்டுமன்றி ஸ்ரீரங்கநாதருக்கும் ஆஞ்சநேயருக்கும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது இந்த இடம்தான் ராமாயண காலத்தில் ஜாம்பவான் அனுமன் சுக்ரீவன் போன்ற வானரங்கள் வாழ்ந்த கிஷ்கிந்தா வாக இருந்தது சீதையைத் தேடி வந்த ராமரும் லட்சுமணரும் இங்கே இருக்கின்ற பாறையில் தங்கியிருந்ததாக கூறுகின்றனர் ராமபிரான் அனுமனை சந்தித்ததும் இந்தப் பாறையில் தான் இங்கே அந்த ஒன்பது ஆச்சாரியார்களின் சமாதியை தவிர வேறொன்றும், இருக்காது சுற்றி மலைகள் காடுகள் துங்கபத்திரா நதி நீர் ஆகியவை மட்டுமே சூழ்ந்திருக்கின்றன அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய புனித இடங்களில் இதுவும் ஒன்று.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்