சாப்பிட்ட பின் முக்கிய கடமைகள்


நாம் ஒவ்வொருவரும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறோம் அதில் தவறு ஏதும் இல்லை. இந்த சுவையான உணவை நமக்கு நடமாடும் அசைவ உயிர்களும் கொடுக்கின்றன   நடமாடாத சைவ உயிர் கொடுக்கின்றன.


நாம் ருசியான நறுமணமிக்க அறுசுவை உணவு சாப்பிட்டபின் நாற்றமடிக்கும்  கழிவுகளை வெளியேற்றும் இயந்திரம் போல இயங்குகிறோம். ஆனால் நாம் வெளியேற்றிய அந்தக் கழிவு மற்றொரு உயிரின் உணவு  என்பதை நாம் மறுக்க முடியாது அது உண்மையே. அந்த உணவாகிய கழிவை உண்டு வாழும் உயிருக்கு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.  அந்த கடமையை நாம் செய்வதில்லை. காரணம் செய்யக்கூடிய சூழ்நிலை இன்று இல்லை ஒருவகையில் சாப்பிட்ட நாம் கடமை தவறி விட்டோம் என்று கூட சொல்லலாம்.


கடமை தவறியதற்கு காரணம் இயற்கையோடு வாழ்ந்த நம் வாழ்க்கையை இழந்து விட்டோம். நவீன வாழ்க்கையை ஏற்றுவிட்டோம். அதனால் அந்த  இயற்கை உணவு சுழற்சி முறையையும் மறந்துவிட்டோம். இந்த உண்மை தெரிந்தவர்களும் இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். அதனால்  மனித கழிவுகள் குப்பைகள் ஆகவும் சாக்கடைகள் ஆகவும் ஆகிவிட்டது. மட்டுமன்றி நாமும் சாப்பிடக்கூடாத குப்பைகள் சிலவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்.  இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்கின்றோம். 


இதற்கு காரணம் என்ன?  காலத்தின் கட்டாயமா அல்லது மனிதனின் அறியாமையா? என்று பார்க்கின்ற பொழுது மனிதனின் அறியாமை என்பது தான் உண்மை.


பண்டமாற்று முறையை மறந்துவிட்டோம், பணம் மாற்று முறைக்கு வளர்ந்து விட்டோம். மனிதனை மனிதன் ஏமாற்றிக்கொண்டு அலைகின்றோம்.  ஏமாற்றுகின்ற வர்க்கம் திட்டமிட்டு செயல்படுகின்றது, அதை அறியாத வர்க்கம் ஏமாந்து கொண்டும் எதிர்த்தும் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது.


 காசு இல்லாமல் கிடைக்கின்ற உணவும் நீரும் இன்று காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆகிவிட்டது. தேவையானவற்றை தானாக கொடுத்த இயற்கை அழிந்து கொண்டிருக்கிறது. 


நாம் இயற்கையை அழித்து விட்டு இன்று இயற்கையை செயற்கையாக உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், உணவை எல்லாம் விஷமாக மாற்றி விட்டோம். அதை பணமாகவும் மாற்றி விட்டோம்.  இதற்கெல்லாம் முக்கிய காரணம் தகுதியற்ற தலைவர்களை முன் நிறுத்தி விட்டோம் அதுமட்டுமன்றி அவர்கள் பின்னாலேயே சென்று விட்டோம். நல்ல தலைவன் நமக்கு இல்லை அந்தத் தகுதியை இழந்து விட்டோம். காரணம் சுயநலம்.


சுயநலத்தால் பொது நலத்தை  மறந்தோம். பொது நலத்தை மறந்ததால்  பொது நலத்திற்குள் இருக்கும் நம்மையும் மறந்துவிட்டோம். அதனால் இப்போது சுயநலத்தையும் இழந்தோம். இன்று நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அந்த நிலைக்கு  நம் தலைவர்கள் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு இருக்கிறார்கள். நமக்கு நல்ல தலைவர்கள் இல்லாமல் சென்று விட்டார்கள். நல்ல தலைவர் இல்லாத நாடு அழிந்துவிடும் என்பது போல் நம் இனத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் இயற்கையோடு வாழ வேண்டும்.


 இயற்கையோடு வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்த்துக் கொண்டு அதற்குரிய  தலைவனை தேடி அலைந்து அறிந்து அந்த தலைவனின் பின்னால் சென்று இயற்கையோடு வாழ முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நம்மை நாமே காக்கின்றோம் என்ற பெயரில்  பாதுகாப்பு ஆயுதங்களை தயாரிக்க முற்பட்டு இன்று அணு ஆயுத பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்று நம்மை அழிப்பதற்காக நம் மனித இனத்தை அழிப்பதற்காக ஏன் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பதற்கான ஆயுதத்தை நாமே தயாரித்து வைத்திருக்கின்றோம். 


நம்மைக் காப்பதற்கு என்றே அழிப்பதற்கான ஆயுதத்தை தயாரித்து வைத்துக்கொண்டு  உள்ளோம் இதுதான் உண்மை. ஆம் அப்படித்தான் நாம் அணு ஆயுதங்களுக்கு பலியாகி அழிந்து போவதற்கு தயாராக இருக்கின்றோம்  யார் முதலில் போகிறோம் என்பது தான் இப்போதைய நிலை இதுதான் உண்மை. இதை மாற்ற ஒவ்வொரு மனிதனும் முயற்சிக்க வேண்டும் இயற்கையோடு வாழ்வதற்கான முயற்சி எடுக்க வேண்டும் அதற்குரிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.நன்றி வணக்கம்.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்