கடவுளுக்கு உறவுகள் எதற்காக?
கடவுளுக்கு எதுக்கு உறவுமுறைகள்?
ஒரு மதத்தை சேர்ந்தவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் மனிதர்களுக்கு பிள்ளைகள் தேவை, உறவு முறைகள் தேவை ஏனென்றால் கடைசி காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும், இயலாத காலத்தில் உதவியாக இருப்பார்கள் என்பதற்காக தேவை.
ஆனால் கடவுளுக்கு எதுக்கு தேவை?. கடவுள் அவரை எதுக்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? கடவுள் அவருக்கு எதற்கு மற்றவர்களிடமிருந்து உதவி தேவை? கடவுளுக்கு எதுக்கு குழந்தை குட்டிகள் உறவுமுறை?
என்று கேள்வி எழுப்பி எங்களுடைய மதம்தான் கடவுளைப் பற்றிய அறிவு உள்ள மதம். என பலப்பல கூறி எல்லோரும் எங்கள் மதத்திற்கு வந்து விடுங்கள் என்று மதத்தைப் பரப்பி பேசிக்கொண்டிருந்தார்.
அவர் கூறுகின்ற மதத்தில் தான் உலக அளவில் வன்முறைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்று புரியவில்லை.
இருந்தாலும் அவர் பிற மத கடவுள்களை கடவுள்களின் உறவுமுறைகளை சுட்டிக்காட்டி பேசியது அறிவுபூர்வமான கேள்விதான். இந்த அறிவுப்பூர்வமான கேள்வியை தனக்கு அறிவு இருக்கிறதா என்று அவர் முதலில் சிந்தித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முதலில் அறிவு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பின்பு நாம் கடவுளைப் பற்றிய உறவுமுறைப் செல்வோம்
அறிவு என்பது என்னவென்றால் யார் எதைச் சொன்னாலும் அவர் சொல்லுகின்ற வார்த்தையிலே உண்மையான பொருள் இருக்கிறதா என்பது சிந்திக்க வேண்டும். அதுபோலத்தான் யார் எதை செய்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். இதைத்தான் அறிவு என்று அறிவுடையவர்கள் கூறுகிறார்கள் அறிஞர்களும் இதைத்தான் கூறுகிறார்கள்.
இனி கடவுளுக்கு உறவுமுறை தேவையா? என்பதற்கான விளக்கத்தை பார்ப்போம்.
இந்த உலகத்தில் கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் கடவுளை வணங்கி கொண்டிருக்கின்ற மதம் சார்ந்த மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கடவுளைப்பற்றி சிந்திக்கும் சிறு அறிவு கூட அந்த மதம் சார்ந்தவர்களுக்கு இருப்பது இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது அவருடைய வாழ்வாதாரம் அதை வச்சுத்தான் அவங்க வாழ்க்கையை ஓட்டி ஆகணும். பாவம் அப்படி ஒரு பிழைப்பு தேவைதானா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
நான் எந்த மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை கடவுள் என்றாள் என்னவென்றே தெரியாத மதம் சார்ந்த மனிதர்களை மட்டுமே குறிப்பிட்டு அவர்கள் அறிவு மேம்பட என்னால் முடிந்த சிறு உதவியாக இதைக் கூறுகிறேன்.
பொதுவா கடவுள் யார் என்று எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சிலரைத்தவிர கடவுளைப்பற்றி யாருக்குமே தெரியாது அப்படி யாருக்குமே தெரியாம இருக்கும் கடவுளே ஏன் வணங்க வேண்டும். அப்படின்னு ஒரு கேள்வி வருது, இந்த கேள்விக்கு கடவுள்தான் பதிலும் சொல்லியிருக்கிறார்.
கடவுள் மனிதர்களை, பல உயிரினங்களை, மரம், செடி, கொடிகளை இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை படைத்ததோடு அவருடைய செயல்பாடு நின்றுவிடுவதில்லை.
அப்படைப்பு எப்படி இயங்க வேண்டும் என்று அவரே சொல்லிக் கொடுக்கிறார். நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் படைக்கப்பட்டவை எப்படி இயங்க வேண்டும் என்ற தர்மத்தை அவரே நடித்து ஆடிப்பாடி சொல்லியும் கொடுக்கிறார் தர்மத்தை மீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல நடித்தும் காட்டுகிறார். அதன்மூலம் தர்மத்தை மக்களுக்கு நீதி சொல்லிக் கொடுக்கின்றார்.
நீதியை தர்மத்தை உணர்வதற்காக அவர் பலதரப்பட்ட இயக்கத்தை உருவாக்கி, மட்டுமன்றி உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக உறவு முறைகளையும் உருவாக்கி, உறவுகள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக அதற்கேற்ற இன்ப சூழல்களை உருவாக்கி, சூழ்நிலைகளை உருவாக்கி, மகிழ்ந்து வாழ்வதற்காகவே உறவு முறைகளை உருவாக்கி, அத்தோடு நிற்காமல் அந்த இன்ப சூழல் ஒருவரை ஒருவர் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அன்பை போதிப்பதற்காக மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற தர்மத்தை சோதிப்பதற்காகவே உறவுமுறைகள் மூலமாகவும் தர்மத்தை போதிக்கின்றார். உறவு முறைகள் போன்ற தோற்றங்களை உருவாக்கி லீலைகள் செய்து காட்டுகிறார் அல்லது நாடகம் போல் நடித்து தர்மத்தை தானே மக்களுக்கு போதிக்கிறார்.
நன்கு புரிந்து கொள்ளுங்கள் புத்திசாலிகளேள அந்த தர்மத்தைதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்புமிக்க அதிபுத்திசாலிகளே அறிவு மதவாதிகளே மத பரப்பிகளே முதலில் கடவுள் என்றால் என்ன? கடவுள் ஏன் இவ்வளவு இயக்கங்களை செய்கிறார் என்பதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கப்புறம் கடவுளைப் பற்றிப் பேசுங்கள். முதலில் கடவுளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளை தெரிந்து கொள்வதற்காக நீங்கள் முதலில் பகவத் கீதையை படியுங்கள், அதுவும் குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவிய ஸ்ரீல பிரபு பாதா அவர்கள் எழுதின பகவத் கீதை உண்மையுருவில் படியுங்கள் அப்பதான் உங்களுக்கு உண்மையான ஞானம் கிடைக்கும். அதுதான் உண்மையான அறிவு. அதை விட்டுட்டு வெளியில நடப்பதை வச்சுகிட்டு உங்க அறிவு கொண்டு நீங்க எடை போடாதீர்கள்.
கடவுளுக்கு எதற்கு பிள்ளைகள் உறவு முறைகள் அப்படிங்கிற ஒரு கேள்வி உங்களுக்கு ஏற்பட்டால்! அந்த கேள்விக்கு பதில் அந்த மதத்தில் உள்ள புனித நூல்களை தேடுங்கள் அல்லது அந்த மதம் சார்ந்த உண்மையான சுயநலமற்ற உயர்ந்த அறிஞர்கள் இடம் சென்று கேளுங்கள். அவர்கள் சொல்லுவது உங்களுக்கு புரிந்தால். புரிஞ்சி அதுக்கு அப்புறம் சரியா தப்பான்னு பேசுங்க
அதைவிட்டுவிட்டு மதத்தையும் அரசியல் போல் பரப்ப வேண்டும் என்பதற்காக, ஓட்டு எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக ஒருவரை ஒருவர் குறைத்து பேசிக்கொண்டு எண்ணிக்கையை கூட்டுவதற்காக செய்தாள் அதுதான் மனித இன அழிவிற்கு காரணமாகிவிடும்.
தயவுசெய்து புத்திசாலித் தனமாக பேசுங்கள் உங்கள் மதத்தில் அறிவு சார்ந்த இறைவனைப் பற்றிய சிந்தனைகளை வளருங்கள்.
பொதுவாகவே கடவுள் என்ன சொன்னார் தெரியுமா எல்லா படைப்புகளும் என்னுடைய அங்கம் என்று சொல்லுகின்றார். நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதத்தைச் சார்ந்தவர்களை. நீங்கள் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க அங்கம் என்றால் ஒரு பகுதி என்று பொருள் ஒரு பகுதி இன்னொரு பகுதியை குறை சொல்வது ஒட்டுமொத்த பகுதியை குறை சொல்வது போலத்தான்.
நம்மை நாமே குறை சொல்வது போன்ற பொருள் தான் அது. அதை நீங்கள் பின்பற்றும் மதம் சொல்லித் தராமல் இருக்கலாம். அதுதான் உண்மை அதை அறியாது இருப்பது உங்களது அறியாமைதான்.
கடவுள் ஒட்டுமொத்த உடல் என்று கூறலாம் அந்த உடலில் நாம் கை கால்கள் போல கை கால்களுக்கு இடையே இருக்கின்ற மிக சிறிய செல்களைப் போல இருப்பவர்கள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த சிறு செல்களுக்குள் ஏற்படுகின்ற பிரச்சனைகள் ஒட்டுமொத்த உடம்பை எந்த அளவுக்கு சிந்திக்க வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் கடவுள் என்றால் என்ன என்பது.
கடவுளுக்கு உறவு முறைகள் இருப்பது போல காட்டிக் கொள்வது மனிதர்களாகிய நாம் எப்படி உறவு முறைகளுடன் வாழவேண்டும் என்பதை உணர்வதற்காகதான்.
கடவுளுக்கு உறவுமுறை தேவையா என்று கேட்பவர் அறிவு உள்ளவரா இல்லாதவரா என்பது நீங்கள்தான் சொல்லவேண்டும்.இதைப் புரிந்து கொண்டால் அவர் அறிவுள்ளவர்கள். இதை புரியாமல் மதத்தைப் பரப்பினார் என்றால் அவர் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதுதான் பொருள். அவருடைய உண்மையான நோக்கமும் அமைதி அல்ல அவரிடம் இருந்து விலகியே இருங்கள் உங்கள் வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றால்.