மனிதனை மாற்றிக்கொண்டே இருக்கும் மார்க்கங்கள்
மனித மனங்களை மாற்றிக்கொண்டே மாறிக்கொண்டே இருக்கும் மார்க்கங்கள்
மார்க்கங்கள் காலங்களுக்கு ஏற்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப நம்பிக்கைகளுக்கு ஏற்ப நம்மை சுற்றி இருப்பவர்களை சுயநலத்திற்கு ஏற்ப, நமது அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப,வளர்ந்து கொண்டும் விழுந்து கொண்டும் அறியாமையில் சிக்கிக் கொண்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே மார்க்கங்களை பற்றி பேசாதீர்கள் அதை பரப்பவும் செய்யாதீர்கள் ஏனென்றால் அது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகவும் நாகரிகம் பண்பாடு சார்ந்த விஷயமாகவும் இருக்கிறது வாழ்க்கை முறையாக இருக்கிறது. அது மனிதர்களின் தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அது பல காலகட்டங்களில் அரசியலாக மாறிவிடும் மாறித்தான் இருந்தும் இருக்கிறது வரலாறு அதை தெளிவுபடுத்துகிறது. எந்த சூழ்நிலையிலும் அரசியல் என்று வந்தாலே ஆளுமை என்று வந்துவிடும், ஆளுமை என்றால் அடக்குமுறையும், அதனால் எதிர்ப்பும், வன்முறையும் புகுந்துவிடும், இதனால் மனித இழப்புகளும் ஏற்படும். காலப்போக்கில் ஆட்சியாளர்களே சுயநலத்திற்காக கடவுளையும் மாற்றிவிடுவார்கள் வரலாறுகளையும் சிந்தனைகளையும் மாற்றி எழுதுவார்கள் கடவுளே வரலாற்றில் இணைத்து விடுவார்கள் அவர்களுடைய நோக்கம் ஆளுமை ஆட்சி என்ற கூட்டுக்குள்ளே இருக்கும் அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள் பிறர் நம்பிக்கையையும் இழிவுபடுத்தி வன்மத்தை வைத்துவிடுவார்கள் அழிவுக்கு அதுவே காரணமாகவும் அமைந்து விடும் வரலாறும் இவற்றைத்தான் நிரூபித்திருக்கின்றன.