பகவானும் ததீசி முனிவரின் தன்னலமற்ற தவமும்
ததீசி முனிவரின் தன்னலமற்ற தவமும் அதற்கு உயரிய மதிப்பு வழங்கிய பகவானும்
முன்னொரு காலத்தில் ததீசி என்றொரு முனிவர் வாழ்ந்து இருந்தார். அவர் பகவானை நினைத்து நீண்ட நெடுங்காலமாகத் தவமியற்றி வந்தார். அவர் எந்த நோக்கமும் இல்லாது பகவானை மட்டுமே நினைத்து தவம் செய்தார்.அவருடைய தவத்தை கலைக்க அசுரர்களும் தேவர்களும் முற்பட்டார்கள் ஆனால் முடியவில்லை.
இந்திரனும் பல வகைகளில் முயற்சி செய்தான் எந்த பயனும் இல்லை
எந்த நோக்கமும் இன்றி இருக்கும் இந்த முனிவரின் தவத்தை சிறப்பிக்க பகவான் எண்ணினார். அந்த காலத்திற்காக காத்திருந்தார். ஆனால் அந்த முனிவரோ தவத்தினால் யாரும் வெல்ல முடியாத சக்தியையும் பெற்றிருந்தார். இதனால் அவரை அனைத்து முனிவர்கள் முதற்கொண்டு அனைவரும் மிகவும் உயர்ந்த நிலையில் மதித்து வந்தார்கள். ஆனால் இந்திரன் மட்டும் உள்ளுக்குள் பயத்தில் இருந்தான். காரணம் அவருடைய சக்தியினால் தன் பதவியை பறித்து விடுவாரோ என்ற உள்ளுணர்வின் சிந்தனையால் தான்.
ஆனால் அவரோ எந்தவித ஆசையும் இன்றி தன்னிடம் உயர்ந்த சக்தி இருப்பதையும் லட்சியம் செய்யாமல் சதா பகவானையே நினைத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் துறவியாகவே வாழ்ந்து வந்தார். அவரின் எதிர்பாரா தன்மையை உயர்ந்த குணத்தை சிறப்பிக்க வேண்டுமென்று பகவான் நினைத்த காலம் வந்தது.
இந்திரன் விருத்திரா சூரனுடன் போரிட்டு தோல்வியடைந்திருந்தார். அதனால் விருத்திராசுரக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த இந்திரன் விஷ்ணுவிடம் சரணம் அடைந்தார். இந்திரனின் நிலையை உணர்ந்த பகவான் அவனுக்கு சரணம் அளித்தார். அதேவேளையில் ததீசி முனிவரின் தவத்திற்கு மதிப்பு அளிக்க விரும்பிய பகவான் அதே நேரத்தில் அந்த முனிவருக்கு முக்தியையும் அளிக்க விரும்பினார்.
அதனால் அவர் இந்திரனிடம் “உன்னை காப்பாற்ற வேண்டுமானால் என்னால் கூட முடியாது ஆனால் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் என்னையே நோக்கி தவமிருந்த ததீசி முனிவர் நினைத்தாள் உன்னால் விருத்திராசுரனை வெல்ல முடியும். ஏனென்றால் விருத்திரா சூரனும் என்னுடைய பக்தன். ததீசி முனிவரும் என்னுடைய பக்தன்.எனது பக்தர்களை வெல்லும் சக்தி எனக்கு கிடையாது. எனது பக்தர்களை வெல்லும் சக்தி எனது பக்தர்களுக்கு உண்டு அதுவும் அவர்கள் மனது வைத்தால் தான்.
ஆகவே நீ அவரிடம் சென்று பணிவாக வேண்டுகோள் வை அவர் உனக்கு உதவி செய்வார்.” நீ விருத்திரா சூரனை வெற்றிகொள்ள வேறு வழியும் உனக்கு கிடையாது. என்று கூறி விஷ்ணு இந்திரனை அனுப்பி வைத்தார்.
இதை கேட்ட இந்திரன் தேவர்கள் படைசூழ முனிவரை சென்று வணங்கி காப்பாற்றும்படி வேண்டினார் ததீசி முனிவரும் இந்திரன் மீது இரக்கம் கொண்டு ஒரு உபாயம் சொன்னார் நான் யாரிடமும் யுத்தம் செய்ய மாட்டேன் யுத்தத்திற்கான உதவியும் செய்ய மாட்டேன் ஆனால் நீ என்னிடம் உதவி என்று வந்ததால் ஒரு உபாயம் கூறுகிறேன் என்று கூறி "நான் எனது உடலை விட்டு என் உயிரை பிரித்து விடுகிறேன் என் உடலை நீ பயன்படுத்திக் கொள்" என்று சொல்லி தன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தார் அந்த முனிவரின் தவ வலிமையால் அவருடைய உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அணு ஆயுதங்களுக்கு சமமான சக்தியைப் பெற்றிருந்தன
இதை அறிந்த இந்திரனும் விஷ்ணு ஏற்கனவே தம்மிடம் கூறிய அறிவுரையின்படி அவரது முதுகு எலும்பை ஆயுதமாக தயாரித்தார் அந்த எலும்பு எதையும் தாங்கும் சக்தி உடையதாக இருந்தது. அதேவேளையில் இடி மின்னலுக்கு சமமான அதிக சக்திமிக்க அணு கதிர்களை வெளியிடும் வலிமையுடைய உடையதாகவும் இருந்தது. அதை உணர்ந்த இந்திரனும் அந்த எலும்பை தனது ஆயுதமாக தயாரித்தார். அந்த ஆயுதம் தான் இந்திரன் எப்போதும் வைத்திருக்கும் வஜ்ராயுதம் ஆகும்.
இதை பயன்படுத்தி விருத்திராசுரனை இந்திரன் எதிர்த்துப் போரிட்டார். போரின் உச்சகட்டத்தில் இந்திரனையும் அவனுடைய வஜ்ராயுதம் இரண்டும் சேர்த்து விருத்திராசுரன் அப்படியே விழுங்கி விட்டார் விருத்திராசுரன் வயிற்றுக்குள் இருந்த இந்திரன் தன் கையில் வைத்திருந்த வஜ்ராயுதசக்தியால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் விருத்திராசுரன் வயிற்றை கிழித்து தரையில் வீழ்த்தினார். ஆயுதத்தினால் தாக்கப்பட்ட விருத்திராசுரன் இறைவனடி சேர்ந்தார். ததீசி முனிவரும் இறைவனடி சேர்ந்தார். அந்த முனிவரின் எலும்பு தேவலோகத்தை காக்கும் ஆயுதமாக இன்றும் வாழ்ந்து இந்திர லோகத்தை காத்து வருகிறது.