2020 புத்தாண்டு பலன்- சிறு குறிப்பு
2020 புத்தாண்டு பலன்- சிறு குறிப்பு
20 20 வரலாற்று சிறப்புமிக்க இந்த புத்தாண்டில் அனைத்து இதயங்களுக்கும் சாதகம் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….
இந்தப் புத்தாண்டில் வாழ்த்துக்களுடன் ஒரு வேண்டுகோளையும் “சாதகம்” இதழ் சார்பாக சமர்ப்பிக்கிறோம்
ஜாதகரீதியாக அனைவரும் சிந்திக்க வேண்டிய புத்தாண்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க, வரலாற்றையே மாற்றி அமைக்கக்கூடிய புத்தாண்டு
இந்த புத்தாண்டில் உலக அளவில் ஏன் ஒவ்வொரு வீடுகளில் கூட எது சரி? எது தவறு? என்று பேசப்படுகின்ற அளவுக்கு கொடூரமான அதேவேளையில் தவறு என்று சொல்ல முடியாது சம்பவங்கள் நடக்க இருக்கின்ற ஒரு புத்தாண்டாக இருக்கும்.
ஒரு களை எடுக்கும் புத்தாண்டு என்று கூட சொல்லலாம். உலக ஒற்றுமைக்கு மனித ஒற்றுமைக்கு மாறாக இருப்பவர்கள் இடையே அதர்மங்களை களையெடுக்கும் புத்தாண்டு என்று கூட சொல்லலாம்.
“பல ஆண்டுகளாக மனித இனத்திற்கு சவாலாக இருந்த அதர்மங்கள் அழிகின்ற காலம் இந்த 2020”
இதுவரை உலகத்தில் தங்கள் நாட்டை காக்க வேண்டுமென்று தேக்கிவைத்த ஆயுதங்கள் மற்றும் வியாபாரத்திற்காக தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிநவீன ஆயுதங்கள் அவற்றின் செயல்பாடுகள் செயல்களினால் ஏற்படும் விளைவுகள் அதனால் ஏற்படும் அழிவுகள் இவைகளையெல்லாம் இந்த உலகம் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் உங்கள் இறைவன் வன்முறையை தூண்டுவதாக இருந்தால் வன்முறைக்கு ஆதரவு கொடுக்கதவறாக இருந்தால் நிச்சயம் உங்களை காப்பாற்றுவார்
புரிந்து நடந்து கொள்ளுங்கள் வணக்கம்.